இஸ்லாமும் இந்துத்துவமும் !


டிக் டாக்
இஸ்லாமும் இந்துத்துவமும் !

 

எந்த ஒரு சமூக மாற்றமும் அச்சமூகத்தின் மீது ஆட்கொண்டிருக்கும் அதிகார அரசியல், பொருளியல், பண்பாட்டியலை மையம் கொண்டே முன்னேறி செல்கிறது.

 

மாற்றம் ஒன்றே மாறாதது என்கின்ற இயங்கியல் கோட்ப்பாட்டை ஏற்க மறுக்கும் மதவியலானது, முடிந்தவரை ஆளும் வர்க்க நலனுக்கேற்ப மத பிற்போக்கு பண்பாட்டு இறுக்கத்தை, தளர்த்திக்கொண்டு மக்களோடு பயணிப்பதிலும், மத அடிப்படைவாதம், முன்னேறிச்செல்லும் சமூகத்தை பின்னோக்கி இழுப்பதையே முதன்மையாக கொண்டுள்ளது.

 

உலக அளவில் மத அடிப்படைவாதத்தை நிறுவுவதில் இஸ்லாம் முன்னணியில் இருக்கிறது. உலக வரலாற்றில் நிலவியலோ, புவியியலோ, அரசியலோ, அரசுகளோ அது சார்ந்த பொருளியலோ, பண்பாட்டியலோ தொடர்ந்து மாற்றம் கண்டு முன்னேறி வந்திருக்கும் வேலையில், மாறாது, மாறக்கூடாது என்பது கற்பனையான அதிகாரமல்லவா ! அந்த வளர் நிலையில் இடையில் தோன்றியது தானே இஸ்லாம் ! அப்படி இருக்கும் பொழுது அதையும் (இஸ்லாத்தை)  தாண்டி சமூகம் முன்னேறுவது தவிர்க்க முடியாதது தானே ! சமூக மாற்றத்தை மதத்தின் பெயரால் தாமதப் படுத்த முயற்சிக்கலாமே தவிர, தடுத்துவிட இயலாது !

 

ஏக போகத்தின் நுகர்வு கலாச்சாரம் உலகில் எந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தையும் பாதிக்காமல் இல்லை ! அதற்காக அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும், அதன் பயன்களையும், அதனால் ஏற்படுகின்ற மகிழ்ச்சியையும், வாழ்வியலையும், அதற்கான அவர்களின் பொருளீட்டல்களையும் முற்றாக புறந்தள்ளி இஸ்லாம் மதத்தை காப்பாற்றும் துணிச்சல் இருக்கிறதா ! இருக்க முடியுமா !

 

வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்பு, கைநிறைய சம்பாத்தியம் நல்ல சாப்பாடு வீட்டில் பெண்பிள்ளைகளுக்கும் உயர் ரக கல்வி, உடன் படிக்கும் பிள்ளைகள் செய்யும் ஆசைகள் அபிலாசைகள் எல்லாம் இஸ்லாம் ஆன்பிள்ளைகள் போல் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு அவர்கள் என்ன கல் சிலையா ! அனைத்து உணர்ச்சிகளும் உள்ள உயிருள்ள மனிதப்பிறவிகள் தானே !

 

ஆணோ, பெண்ணோ அவர்களின் தனிப்பட்ட உரிமைகளில், உணர்வுகளில், மதம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு அதில் தலையிடுவது குற்றமல்லவா !

 

குரானில் இருந்து ஆதாரத்தை காட்டும் இஸ்லாமியர்களே ! நீங்கள் உங்கள் வாழ்வில் அனைத்தையும் குரான் வழி கொண்டுதான் வாழ்கிறீர்களா ! அனைத்தையும் கடைவிரித்தால் ஆயிரம் பக்கங்கள் போதாது ! டிக் டாக்கில் வரும் இஸ்லாமிய பெண்களை விட அடிமைபெண்கள் மேலானவர்கள் என்று குரானில் ஆதாரம் காட்டுகிறீர்கள், குரானுக்கு மாறு செய்யும் உங்கள் வாழ்வியலை விவரித்தால் என்னவாகும் !

 

வரதட்சணையால், முத்தலாக்கினால், குல வேறு பாட்டால், இன வேற்றுமையால், ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் என்ற வேறு பட்ட பார்வையால், ஒழுக்கக்கேட்டால், தமிழ் இனத்தின் மீதும், மொழியின் மீதும் நீங்கள் காட்டும் இழிந்த செயல்பாட்டால், அரபு மொழியின் அடிமைகளானதன் விளைவால் குரானுக்கு எவ்வாறு மாறு செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

கிறிஸ்துவ மதம் கி.பி.3-ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் இருந்து ஐரோப்பாவில் பரவத் துவங்கியது அப்பொழுதெல்லாம் இலத்தின் மொழியே மறை மொழியாகவும், கோவில் வழிபாட்டு மொழியாகவும் இருந்தது. இருப்பினும் கி.பி.16-ம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தர் என்னும் ஜெர்மானியர் போப்பாண்டவர் அதிகாரத்தை எதிர்த்து செய்த மாபெரும் கிளர்ச்சியால் சீர்திருத்த கிறித்துவ மதம் தோன்றிற்று ! அதன் பின் அனைத்து கிறித்துவர் கட்டமைப்புகளும் அந்தந்த தேசிய மொழிகளிலேயே வழிபாடு நடத்த அனுமதி அளித்து இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவர்கள் தங்களின் உணர்வுகளின் உயிரின் மொழியான தாய் மொழியில் தன்னை படைத்த தந்தையும் தாயுமாய் இருக்கின்ற இறைவனை துதித்து போற்றி வணங்கி வருகின்றனர்.

 

ஆனால் அரபி மதமும், பிராமணார்களின் மதமும் இயற்கை மத நம்பிக்கைகளை திருடி தனதாக்கிக்கொண்டு, வல்லாண்மைக்கு மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கின்றன.

 

யூத மற்றும் கிறித்துவ மத வழித்தோன்றல்களையும், அதன் இலக்கியங்களையும், வேதங்களயும், அதன் நபிமார்களையும் தனதாக்கிக்கொண்ட மதம் இஸ்லாம் !

 

தமிழர்களின் முன்னோர்களையும் இறைவனையும், தமிழர்களின் தத்துவங்களையும், ஆகமங்களையும், சிவனியத்தையும், மாலியத்தையும் திருடியும் திரித்தும் தனதாக்கிக்கொண்ட மதம் வைதீக மதத்தின் மிருக மதம் இந்துத்துவம் !

 

இருவரும் இறைவழிபாட்டை அந்தந்த தேசிய மொழிகளில் வழிபாடு நடத்துவதில்லை. அதாவது நாடு தமிழ் நாடு, ஆலயம், பள்ளிவாசல் இருக்கும் இடம் தமிழனின் மண்ணில், கட்டப்பட்ட கட்டிடத்துக்கு பணம் கொடுத்தவன் தமிழன், இடம் கொடுத்தவன் தமிழன், வழிபட, தொழுது கொள்ள வருபவன் தமிழன் ஆனால் பிராமணன் தமிழில் ஓதமாட்டான் ! ஹஜரத் தமிழில் தொழுகை நடத்த மாட்டான் !

 

வழிபாட்டுக்கு செல்லும் தமிழன் புரியாத மூக்கொலியில் ஓதப்படும் வினோதமான சத்தத்தை மந்திரம் என நம்பி இறைவனுக்கு தன்னை ஒப்படைத்து விட்டோம் எனக்கருதி ஆலயத்தை, பள்ளிவாசலை விட்டு வெளியேறும்படி மக்களை செய்வது எவ்வளவு தீங்கானது ! ஆலயத்திற்கும், பள்ளிவாசலுக்கும் சென்று வழிபட்டு திரும்பும் தமிழனுக்கு இவனுக என்ன சொல்லி வழிபட்டானுக என்று எவனுக்கும் தெரியாது !

 

இந்த இரு மதங்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன வென்றால் இஸ்லாம் சர்வ தேச மதம் ஆனால் சர்வதேசத்தை ஆளும் அதிகாரமற்ற மதம் ! இந்து மதம் இந்தியாவில் மட்டும் உள்ள மதம் ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவை அதிகாரம் செய்யும் வல்லமை பெற்ற மதம் !

 

இஸ்லாத்திற்கு குறைந்தபட்ச அதிகாரம் என்றால் மக்களை அரபி மொழியில் தொழ வைப்பது முடிந்த வரை மண்ணின் இன பண்பாட்டை ஒழித்து அரபு பண்பாட்டை பின்பற்றும் படி தனித்த மதச்சட்டங்களை கொண்டு அதிகாரமற்று மதவியலாய் ஆண்டு வருவது !

 

இந்து மதம் அதிகாரமுள்ள மதமாதலால் பல தேசிய இனங்களை ஒரு குடையின் கீழ் ஆள பல மொழிகள் இருப்பது இந்திய ஆளும் வர்க்கத்துக்கு இடையூராய் இருப்பதால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நாட்டை ஒரே இந்தியாவாக மாற்ற ஒரு பொது மொழி தேவைப்படுவதால் பாடசாலைகளில் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக பயிற்றுவித்தால் நலம் என்கின்றது. ஒரு காலத்தில் வேதத்தை பிராமணனைத் தவிர எவரும் படிக்கக்கூடாது என்பது மதச்சட்டம் ! இன்று எல்லோரும் சமஸ்கிருதம் பயின்றுவிட்டால் எல்லோரும் வேதம் படித்துக்கொள்ளலாம் ! இறைவன் முன் நடை பெறும் வழிபாட்டையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் வேத பூசாரியாக முடியாது !

 

இஸ்லாமோ அரபி தெரிந்தால் நீங்கள் தொழுகையை முன்னின்று நடத்த முடியும், எனவே எல்லோரும் அரபி படியுங்கள் இல்லையேல் அர்த்தம் புரியாவிட்டாலும் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் அது போதும் என்கிறது !

 

இஸ்லாத்தில் சாதியே இல்லை என்பார்கள் ஆனால் சாதியும் தீண்டாமையும் இஸ்லாத்திலும் உண்டு திருக்குரான் சாதி பிரிவினையை ஏற்று கொள்கிறது ஆனால் தீண்டாமையை ஏற்க வில்லை.

 

இஸ்லாம் தாய் மொழி வழி தொழுகையை கூடாது என்று எவ்விடத்திலும் சொல்லவில்லை அப்படி சொல்வதற்கான அவசியம் அம்மார்க்கம் கட்டமைக்கப்படும் பொழுது அது பற்றி விவாதம் தேவைப்படவில்லை.

 

இறைவன் திருகுரானில் ஓர் இடத்தில் யூதர்களின் மொழியாகிய ஹீபுரு மொழியில் தன்னை அழைக்கவில்லை என வருந்துகிறான் ! “அரபு மொழியில் ராயினா என்றால் எங்களை கவனியுங்கள் என்று அர்த்தம் அது யூத மொழியில் முட்டாளே (மூடனே) என்று அர்த்தம். யூதர்கள், அவர்கள் மொழியில் மொழி பெயர்த்து உள்ளூர்னா (எங்களை அன்பாக நோக்குங்கள்) என்று அழைக்காமல் அரபியிலேயே அழைத்து கேடு செய்கிறார்கள் என அல்லாஹ் வருந்துகிறான்”- திருக்குரான் அத்தியாயம் 4:46

 

இவர்களின் தொழுகைகள் நிச்சயம் உலகில் உள்ள மாற்று மொழிகளில் அது வேறு அர்த்தம் தருவதாக அமைந்திருக்கும் அது அல்லாஹ்வை வருத்தத்திற்கு உள்ளாக்காதா ! சர்வ தேச மேட்டுமை தனத்தால் தானே அரபு மொழி வழி தொழுகையை திணித்து வருகிறார்கள் !

 

உலகில் பல ஆயிரம் தேசிய இனங்களையும் அவர்களுக்கான தொடர்பு மொழியையும் இறைவன் வழங்கி இருக்கிறான். ஒரு மொழியில் உள்ள ஒரு சொல் வேறு மொழியில் வேறு அர்த்தம் தருவதாக இறைவன் அமைத்து இருக்கிறான். ஆக ஒவ்வொரு தேசிய இனமும் தன் தன் மொழிகளில் வழிபாடு செய்வதே இறைவனை திருப்திப் படுத்துகிறது. வேற்று மொழியில் வழிபாட்டை உச்சரிக்கும் பொழுது அதன் அர்த்தம் இறைவனை அவமானப்படுத்துவதாகவோ கேவலப்படுத்துவதாகவோ அமைந்து விடும் பொழுது எல்லாம் வல்ல இறைவன் நம் மீது எவ்வாறு கருணை மழை பொழிவான் ! மதத்தை உருவாக்கியவனுக்கு வேண்டுமானால், அவன் மொழி உயர்வாக தெரியலாம் ஆனால் இறைவன் படைப்பில் எவனும், எதுவும் உயர்வு இல்லை இறைவனே உயர்ந்தவன் அல்லவா !

 

“உங்களுடைய மொழிகளும், உங்களுடைய நிறங்களும் வேறு பட்டிருப்பதும் அவனுடைய அத்தாச்சிகளில் உள்ளவையாகும்”- திருக்குரான் அத்தியாயம் 30:22

 

“நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் (ஆதலால் உங்களில் ஒருவர் மற்றவரை விட மேல் என்று பெருமை பாராட்டிக்கொள்வதற்கில்லை)”- திருக்குரான் அத்தியாயம் 49:13.

 

ஆக, பல்வேறு மொழிகளும், இனங்களும், அதனுள் உள்ள கிளைகளும், கோத்திரங்களும் இறைவன் மனித குலத்தை பகுதி, பகுதியாக பிரித்து அறிவதற்காகத் தான் உருவாக்கினானே தவிர, ஓர் இனம் உயர்ந்தது என்ற மேட்டுமை தனத்தை காட்டுவதற்காக அல்ல என்பது புலனாகிறது அல்லவா !

 

நபிகளார் அவர்கள் தொழுகையில் என்னை பின் தொடருங்கள் என்று சொன்னால் அவர் மொழியை பின்பற்றுங்கள் என்பதல்ல ! நபி வழியை பின்பற்ற வேண்டுமே அன்றி நபி மொழியை அல்ல !

 

இந்திய முஸ்லிம்களை அரபி முஸ்லிம்கள் கேவலமாகத்தான் பார்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

அரேபியர்களின் வழித்தோன்றல்கள் என கூறிக்கொள்ளும் வந்தேறி உயர் சாதி இஸ்லாமியர்கள் இங்கே தமிழர்களோடு கலப்பதில்லை இங்குள்ள இஸ்லாமிய தலைமையை கையில் வைத்துக்கொண்டு தமிழ் முஸ்லிம்களை ஏதிலிகலாக வைத்திருக்கிறார்கள். ஆரிய, திராவிட இயக்கங்களோடு கை கோர்த்துக்கொண்டு தமிழ் மொழி, இனத்திற்கு ஊறு விளைவிப்பவர்களாகவே உள்ளனர். இங்கே சாதியும், தீண்டாமையும் இஸ்லாமியர்களுக்குள் பரவிக்கிடக்கிறது.

 

இந்த தலைமையை கையில் வைத்திருக்கும் வந்தேரி இஸ்லாமியர்கள் இந்தியை தமிழனின் மீது திணிப்பதை ஆதரிப்பார்கள். அரபியும் இந்தியும் கலந்த உருது, இந்திக்கு நெருக்கமாதலால் வட இந்திய தலைமைக்கு விசுவாசமாக இந்தியை வழிந்து ஆதரிப்பார்கள். தமிழ் முஸ்லிம்கள் சிறிதும் சுய அறிவு, தன்மானம் இன்றி ஆட்டு மந்தைகள் போல் வந்தேரி இஸ்லாமியர்களுக்கு மதத்தின் பெயரால் விசுவாசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

 

சமூக மாற்றம் தவிர்க இயலாதது. அரபு நாடுகளில் பெண்கள் வேலைக்குச்செல்வதும், கார் போன்ற வாகனங்களை இயக்குவதும் சமூக வலைய தளங்களை பயன் படுத்துவதும் சாதாரணமாகி விட்டது ! அரபு நாட்டு பெண்களின் டிக் டாக்கை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள் ! நம் தமிழ் நாட்டு இஸ்லாமிய பெண்கள் எவ்வளவோ மேல் !

 

இனி இந்து என முகவரி கொடுக்கப்பட்ட தமிழர்களானாலும், இஸ்லாமிய தமிழர்களானாலும் உங்களின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்குங்கள் !

 

இந்துத் தமிழர்கள் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறுங்கள். தமிழில் அர்ச்சனை செய்ய மறுக்கும் பிராமணனை புறக்கணியுங்கள் !

 

தமிழ் இஸ்லாமியர்கள் தமிழில் தொழுகையை நடத்த முயற்சி செய்யுங்கள். தமிழ் வழி தொழுகை பள்ளியை உருவாக்குங்கள்.

 

ஆலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் நம் தாய் மொழியாகிய தமிழ் மொழியில் பிரார்த்தனைகளும், தொழுகைகளும் நடந்து எல்லாம் வல்ல ஏக இறைவனை மாற்று மொழியில் தொழுது கேவலப்படுத்தாமல், நம் உணர்வுப்பூர்வமாக, உள்ளத்தின் நெகிழ்ச்சியோடு உளவியலாய் இறைவனோடு இரண்டற கலந்து துதிக்கும் இறை வணக்கமே இறைவன் முன் மிக மிக மேலானது !

 

நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தாய் மொழியில் இறைவனை துதித்துத் தான் பல மேலான பக்தி இலக்கியங்களை நமக்கு தந்தார்கள்.

 

நாமும் நம் முன்னோர்களின் வழி நின்று இறைவனை தாய் மொழி வழியாக துதித்து பேரின்ப வாழ்வு வாழ இந்த ஆரிய, திராவிட கருத்தியல் தடையாய் இருந்து வருவதினாலும், நம்மீதான அதிகாரமும் அவர்கள் வசம் இருப்பதால், அதை மாற்றி அமைக்க வருங்காலத்திலாவது தமிழன் தனக்கான அதிகாரம் படைக்க, தமிழனை, தமிழனுக்கான ஆட்சியை, தமிழனுக்கான தலைவனை அடையாளம் கண்டு வாழ வாழ்த்துகிறேன்.

 

முத்தலாக் தடை சட்டம் நன்மையா ? தீமையா ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் CLICK HERE

 

#TIKTOK #tiktok #Tik_Tok #டிக்_டாக் #டிக்டாக் #இஸ்லாம் #இந்துத்துவம் #பெண்கள்  #தலாக் #முத்தலாக் #talaq #சாதி #தீண்டாமை #தொழுகை #திருக்குரான்

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக