தமிழர்களுக்கு தேசிய இன உணர்வு வேண்டும் ! ஏன் ?!


தமிழர்களுக்கு தேசிய இன உணர்வு வேண்டும் ! ஏன் ?!

 


உலகில் எங்குமே தமிழகத்தை தவிர சிறுபான்மை தேசிய இனம் பெரும்பான்மை தேசிய இனத்தை ஆண்டதில்லை ! ஆள்வதுமில்லை !! நம் அண்டை மாநிலங்களில் மாநில கட்சிகளை விட அகில இந்திய கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சினாலும், அவர்கள் தேசிய இனவாதிகளாக இருந்து கொண்டு, அகில இந்திய கட்சியின் பெயரை முகவரியாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

 

அந்த மாநிலங்களில் தேசிய இனத்திற்கு ஆட்சியாளர்கள் ஊறு விளைவிப்பதாக மக்கள் உணர்வார்களேயானால் அடுத்த தேர்தலில் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடுவார்கள். இதனால் போட்டி போட்டுக் கொண்டு அங்குள்ள அகில இந்திய கட்சிகளே அந்த தேசிய இனத்திற்கான உரிமைகளை விட்டு கொடுப்பதில்லை. அகில இந்திய தலைமைக்கு கட்டுப்படுவதும் இல்லை. அகில இந்திய கட்சியின் கொள்கைகளை மதிப்பதும் இல்லை. அகில இந்திய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் பேசும் பேச்சு ஒரு விதமாகவும், நம் அண்டை மாநிலங்களில் பேசும் பேச்சு வேறு விதமாகவும் இருப்பதை காண்கிறோம். அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட ஏற்பதும் இல்லை ! மதிப்பதும் இல்லை !!.

 

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை காவு கொண்டது போல் இந்திய அரசு தலைமையில் கன்னடர்களோ, மலையாளிகளோ, வடுகர்களோ படுகொலை செய்யப்பட்டு இருந்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அந்த கட்சிகள் அந்த மண்ணில் இருந்து நிரந்தரமாக அகற்றப்பட்டிருக்கும். அத்துடன் இந்திய கட்டமைப்பே ஆட்டம் கண்டிருக்கும். என்ன துணிச்சல் இருந்தால் அதே கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். நாமும் புரிதலின்றி பல் இழிக்கிறோம் !

 

சிறுபான்மை தேசிய இன தலைவர்கள் பெரும்பான்மை தேசிய இனத்தவர்களை ஆட்சி புரிவதற்கு உருவாக்கி வைத்திருக்கும் பொய்யான அடையாளம் தான் திராவிடம் !. அதன் தந்தை ஈ.வெ.ரா !!. ஏமாற்றியவன் வடுகன் ! ஏமாந்தவன் தமிழன் !!

 

தேர்தலில் தமிழனின் கட்சிக்கு வாக்களிக்க சொன்னால் ஒரு சிலரோ, ஒரு யோக்கியனையும் காணோம் என்கின்றனர். தமிழ் மாபியாக்களுக்கு எப்படி வாக்களிப்பது என்கின்றனர். ஓட்டு கேட்டு வரும் ஆரியனும், திராவிடனும் அல்லது ஆரிய திராவிட கூட்டணிகளும் மாபியாக்கள் இல்லையா ! மாபியாக்கள் மட்டுமே கோலோச்சும் அரசியல் கட்டமைப்பு தானே நம் நாட்டின் அரசியல் வாழ்நிலை !

 

நில பிரபுத்துவ அதிகாரம் தொழில் மயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக அதிகாரத்திற்கு முறையாக பரிணாமம் பெறும் முன்பே பிரிட்டிசாரின் காலனி ஆகிப்போன நாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தொடர் அடிமைத்தனத்தை, அடிமைப் பண்பாட்டை பேணி வருகிறோம். நம் அடிமைகளில் இருந்து ஒரு தலைவன் வருவதை நாம் விரும்புவதில்லை. பிரிட்டிசார் கைமாற்றி கொடுத்து விட்டு சென்ற அந்த ஆரிய, திராவிடனுக்குள்ளேயே தலைவனை தேடிக்கொள்கிறோம்.

 

இன்று ஏக போகம் தன் அதிகாரத்தை உலகமயப்படுத்துதல் மூலம் செயலாக்க வந்த பின்பும், நம் வலிமையை நாம் பயன் படுத்துவதை விட்டு விட்டு, சிறுபான்மை தேசிய இன தலைவன்களை முன் நிறுத்தி ஆளுமை ஆற்றல் இன்றி வாழ்ந்து வருகிறோம்.

 

நம் அரசியல், பொருளாதாரம், இசை, பண்பாடு, வாழ்வியல், வர்த்தகம் என அனைத்தையும் ஆரிய திராவிட இனங்களிடம் ஏமாந்து விட்டு விட்டு கடின உழைப்பை மட்டுமே வைத்திருக்கிறோம். அதுவும் வட இந்திய மக்களின் தமிழக குடியேற்றத்தாலும், அரசு வேலையை தமிழனிடமிருந்து பறித்தெடுத்து, வட இந்திய தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுவதாலும் அந்த உரிமையையும் தமிழன் இழந்து வருகிறான். இனி, தமிழன் நாட்டை விட்டு ஓட வேண்டும் ! இல்லையேல் பட்டினி கிடந்து சாக வெண்டும் !! அல்லது தன்மானம் இழந்து, தகுதியற்ற வேலை செய்து உயிர் வாழ வேண்டும் என்ற நிலையே !!!

 

இனி பெரும்பான்மை தேசிய இனமான தமிழர்களை தமிழனே ஆளவேண்டும் என்ற நிலை வேண்டும். அவன் மாபியாவோ ! மாயாவியோ !! அல்லது மந்திரவாதியோ !!!

 

ஆளும் கட்சியும் தமிழன் கட்சியே ! எதிர் கட்சியும் தமிழன் கட்சியே !! என்ற நிலையை உருவாக்கவேண்டும். மக்கள் இனம், மொழி, பண்பாட்டிற்கு ஊறு நேர்ந்தால் அதை தடுக்க துப்பில்லாதவன் தூக்கி எறியப்பட்டு தமிழுக்காக வாழ்பவனுக்கு மட்டும் தான் தமிழகத்தில் இனி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

 

இனி தமிழகத்தில் தமிழன் தான் ஆளமுடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். தேசிய இன மூலதனம் மீட்டுருவாக்கம் செய்ய்யப்பட வேண்டும். அதன் பிறகு தான் ஆள்பவன் மாபியாவாக இருக்கலாமா அல்லது யோக்கியனை அதிகாரத்தில் அமர்த்தலாமா என்று முடிவு செய்ய முடியும். அரசியல், பொருளாதாரம், இசை, பண்பாடு, வாழ்வியல், வர்த்தகம் என இழந்த அனைத்தும் தமிழனின் உடைமையாக மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

 

அதற்கு தமிழன் தேசிய இன உணர்வு பெற்றாக வேண்டும் ! இல்லையேல் தமிழ் மொழியும் அழியும் ! தமிழ் இனமும் மறைந்து போகும் !!

 

தமிழ் தேசியம் என்பது பாசிசமா ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2019/03/blog-post.html

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக