தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் !


தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் !

 1.    தமிழனின் தலைமையில் கட்டமைக்கபட்ட கட்சியாக இருக்க வேண்டும்.

2.    அக்கட்சிக்கு தமிழனே தொடர்ந்து தலைவனாக இருக்க வேண்டும்.

3.    ஈ.வெ.ரா.வையோ, கருணாநிதியையோ பாட்டன் என்றோ , வழிகாட்டியாகவோ, முன்னோடியாகவோ ஏற்காத தலைவனாக இருக்க வேண்டும்.

4.    தமிழன் என்ற உணர்வோடு அனைத்து சாதி,மத மக்களையும் ஒன்றாக நேசிக்கும் தலைவனாக இருக்க வேண்டும்.

5.    கண்டிப்பாக சாதி கட்சிகளோடு கூட்டணி சேர்ந்திருக்கக்கூடாது.

6.    மத நல்லிணக்கம் பேசிக் கொண்டு தமிழ் இனத்தை அழித்தொழிக்கும் ஆரிய கட்சிகளோடு கூட்டணியில் சேர்ந்திருக்கக்கூடாது.

7.    வடுக தலைமையிலான திராவிட கட்சிகளோடு கூட்டணி சேரும் எண்ணம் இல்லாத கட்சியாக இருக்க வேண்டும்.

8.    குறிப்பாக இந்துத்துவ பாசிச கொள்கை கொண்ட கட்சிகளின் கூட்டணியில் இருக்கக்கூடாது.

9.    தேர்தல் வெற்றிக்கு பின் அதிகாரத்தில் அமரத் துடிக்கும் ஆரிய கட்சிகளை தீர்மானிக்கும் போது தன் குடும்ப நலன் பாராது, தமிழ் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கும் பண்பு இருக்க வேண்டும்.

10.                       அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆரிய கட்சி தமிழ் மக்கள், தமிழ் மொழி, இனம், பண்பாட்டிற்கு ஊறு விளைவித்தால் பதவி சுகம் பாராது ஆரிய கட்சியின் அதிகாரத்தையே உடைத்தெறிந்து விட்டு தமிழ் மக்களின் பின்னால் வந்து நிற்கும் துணிச்சலும், தைரியமும், பண்பும் கொண்ட தலைமையாக இருக்க வேண்டும். இதற்கு முன்னால் இருந்திருக்கவும் வேண்டும்.

 

இந்த வரையறைக்குள் ஒரு கட்சி தமிழகத்தில் நிச்சயம் இருக்கும் அது எதுவென தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள். தமிழக மக்களால் அதிகம் நேசிக்க பட்ட அதிமுக தற்போது ஆர்.எஸ்.எஸ்.யின் கூடாரமாக மாறி போய் விட்டது.

 

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின் இந்துத்துவத்தின் பிரதிநிதிகள் அதிமுகவில் பல வேடங்களில் அணி அணியாய் உட்புகுந்து இந்துத்துவ கட்சியாக மாற்றி விட்டனர். இதன் தொடக்கம் தம்பி துரை துணை சபாநாயகர் பதவி அளிக்கப்பட்டதிலிருந்து வெளிப்படையாக தமிழர்களுக்கு தெரிய வந்தது.

 

இதை அம்மையார் ஜெயலலிதாவோ, அம்மையார் சசிகலாவோ நம் கட்சிக்கு டில்லியில் செல்வாக்கு கூடுவதாக தவறாக புரிந்து கொண்டு விட்டனர். இன்று எல்லாம் அழிந்து நாசம் ஆனது !

 

வட இந்தியர்களை தமிழகத்தில் அனைத்து மத்திய அரசு துறைகளிலும் அதிகளவில் பணிக்கு அமர்த்தி விட்டு, எம்.ஜி.ஆர் பெயரை ரயில் நிலையத்திற்கும் விமானத்தில் செல்வோருக்கு தமிழ் மொழியில் அறிவிப்பும் வழங்குவதால் தமிழர்களுக்கு நன்மை செய்வதாக ஆகாது.

 

தமிழர்கள் ஏமாளிகள் இலவசத்திற்கும் சலுகைகளுக்கும் ஆசைபட்டு வாக்களித்து விடுவார்கள். என இந்துத்துவ ஆரிய கூட்டணி கட்சிகள் கணக்கு போட்டிருக்கின்றனர். அந்த கற்பனையை தமிழக மக்கள் உடைத்தெறிய வேண்டும்.

 

தமிழகத்தில் இந்துத்துவத்தை வளர்த்தெடுத்து அதிகாரத்தை கைபற்றுவது இயலாத காரியம் ! எனவே மக்கள் அதிகம் நேசிக்கும் கட்சி எதுவோ, அதிக தொண்டர்களை கொண்ட கட்சி எதுவோ அதை கபளிகரம் செய்வதால் இந்துத்துவத்தை தமிழகத்தில் நிலை நிறுத்தி விடலாம். என களமிறங்கி உள்ளனர்.

 

தமிழர்களே ! எச்சரிக்கையாய் இருங்கள். இம்முறை நீங்கள் ஏமாந்து விட்டீர்களானால் உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ள இயலாது. தமிழகம் ஆரியர்களின் வேட்டை காடாகி விடும்.

 

இரட்டை இலை என்பது ஆரிய திராவிட பேய்களை விரட்டி அடிக்கும் வேப்பிலையல்ல ! அது இந்துத்துவ பேயை தாங்கி நிற்கும் தாமரை இலை !.

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக