அரசு ஊழியர்கள் புரட்சி செய்வார்களா ?!

அரசு ஊழியர்கள் புரட்சி செய்வார்களா ?!

 


முறையமைக்கபட்ட பாட்டாளிகளே புரட்சிக்கு தலைமை தாங்கி நடத்தி செல்வார்கள் என்பதும், உதிரி பாட்டாளி வர்க்கம் புரட்சிக்கு தலைமை தாங்க தகுதி அற்றதும், வாய்ப்பற்றதும் ஆகும். உதிரி பாட்டாளிகளுக்கு சமூக பொறுப்போ போதுமான அரசியல் அறிவோ, விழிப்புணர்வோ, அக்கறையோ, தலைமை தாங்கும் தகுதியோ, எதிர் கால திட்டமோ இருக்காது என்பது புரட்சி பேராசான் சமூக அறிஞன் லெனின் அவர்களின் கண்டுபிடிப்பாகும்.

 

 

ஆனால் உண்மையில், நம் நாட்டில் அவ்வாறு எதிர் பார்க்கலாமா ! அது சரியா ! என்று பார்த்தால் லெனினின் பார்வை இங்கு பொய்த்து போனதென்றே எடுத்து கொள்ளவேண்டியிருக்கிறது.

 

 

முறையமைக்கப்பட்ட பாட்டாளிகள் என்று நம் நாட்டில் கூறுவதென்றால், அரசு ஊழியர்களை தான் கூற வேண்டும். அவர்கள் தான் முறையான, நிலையான வருமானம், வாழ்வியல், அரசியல் பார்வை, அரசை நிர்பந்தித்து சாதித்துக்கொள்ளும் திறன், போராட்ட வடிவத்தில் ஒற்றுமை என்றெல்லாம் முறையாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் இருந்து மக்களின் அடிப்படை போராட்டங்களுக்கு தலைமை கிடைக்குமா ? இதுவரை கிடைத்ததா ? என்றால், இல்லை ! என்றே நமக்கு பதில் கிடைக்கிறது.

 

 

வர்க்க அரசியல் இங்கே இப்பொழுது பொய்த்து போய் கிடக்கிறது.

 

 

காரணம் முறையமைக்கப்பட்ட பாட்டாளிகள் இன்று நம் கண் முன்னே சொகுசு பாட்டாளிகளாக வாழ்ந்து வருகிறார்கள். 98% மக்கள் தினசரி ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை சம்பாதிக்க ரத்த வேர்வை சிந்திக்கொண்டு இருக்கும் வேளையில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 1500 முதல் ரூபாய் 3000 மும் அதற்கு மேலும் மென்மையான வேலையை செய்து அரசு மூலம் ஊதியம் பெற்று வருகிறார்கள்.

 

 

மக்களுக்கு சேவை செய்ய அமர்த்தப்பட்ட இவர்கள் முடிந்த வரை அரசின் திட்ட பணிகளில் வாய்ப்பு தேடிவரும் பயனாளிகளிடமிருந்து குறைந்த பட்சம் 10% முதல் 50% வரை கையூட்டு பெற்றுக்கொண்டே வேலை செய்கிறார்கள். பல இலட்சம் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கும் அரசு ஊழியர்களுக்கோ போட்ட பணத்தை நூறு மடங்கிற்கும் மேலாக ஓய்வு பெறுவதற்க்குள் சம்பாதித்தாக வேண்டும் என்கின்ற வெறி !

 

 

இவர்கள் வாழ்வில் செய்த செயல்களை கண்ணுற்றோமானால், முதலில் குடும்ப ஒற்றுமையை, குடும்ப அமைப்பை சிதைத்தவர்கள் இவர்கள் தான். தன் வருமானத்ததில் தாயோ, தந்தையோ, சகோதரனோ, சகோதரியோ உதவி கோராமல் இருக்க தேவையான குடும்ப அரசியலை இரக்கமின்றி அரங்கேற்றியவர்கள் இவர்களே. நேற்று வரை ஒற்றுமையாய் இருந்த ஒரு குடும்பம் இன்று சுக்கு நூறாய் போய்யிருந்தால், அங்கே ஒரு அரசு ஊழியர் இருப்பார். அவரால் அக்குடும்பம் சிதைந்திருக்கும். இவர்கள், தான் அரசு ஊழியராக இருப்பதை தன் திறமை என்று போற்றி கொள்வார்கள்.

 

 

ஒரு அரசு ஊழியரை இன்னொரு அரசு ஊழியர் மணம் புரிந்து கொள்வதன் மூலம் இரண்டு வழியில் அரசு வேலையின் மூலம் மக்கள் வரி பணத்தையும், செய்யும் வேலைக்கான கையூட்டையும் பெற்று, கொள்ளை இலாபம் பார்ப்பவர்கள். இவர்களை இன்றே வேலையை விட்டு நீக்கி விட்டால் நிச்சயம் பிச்சை எடுக்க போவதில்லை !

 

 

சாதாரன மக்களை அலட்சியமாக நடத்துவதும், பார்ப்பதும் இவர்களின் பண்பு. அப்பாவி மக்களிடம் இவர்களின் பணத்தை அநியாய வட்டிக்கு தருவது, உயர் தர மதுபானங்கள் வாங்கி பருகுவது, அவரவர் தகுதிக்கு ஏற்ப அந்தஸ்த்துள்ள விடுதிகளில் தங்கி சுக போகங்களை அனுபவிப்பது, சொத்துக்கு மேல் சொத்துக்கள், பல வீடுகள் வாங்குவது, மொத்தத்தில் மக்களென்றால் தாங்கள் மட்டும் தான் மக்கள் என கருதுவது இவர்களின் பண்பாகும். இவர்கள் அரசின் கீழ் ஒரு குழு கூட்டமைப்பை கொண்டிருப்பதால் அடிக்கடி அரசை ஸ்தம்பிக்க வைத்து, நெருக்கடிக்கு உள்ளாக்கி நினைத்ததை சாதித்து கொள்ளும் உயர் தர உதிரி பண்பாடு கொண்ட கூட்டமாகும்.

 

 

சமூகத்தில் உதிரி பாட்டாளியிடமிருந்து இவர்கள் வருமானத்தில் வேறு படுகிறார்களே தவிர, பண்பாட்டில் உதிரி தொழிலாளர்களுக்கு இவர்களொன்றும் சளைத்தவர்கள் அல்ல. சமூகம் குறித்தோ அடுத்த தலைமுறைகள் குறித்தோ யாதொரு அக்கறையுமில்லாதவர்கள் !

 

 

சோசலிச சமூக விஞ்ஞானி புரட்சியாளன் லெனின் கண்டறிந்த முறையமைக்கப்பட்ட பாட்டாளியின் மகத்துவத்தை முதலாளித்துவம் சொகுசு வாழ்வியலுக்குள் பழக்கி விட்டபடியால் லெனின் கண்டுபிடிப்பு பொய்யாகி போனது.

 

 

அரசு ஊழியர் எவரையும் சாமானியன் நல்லவன் என்று கூறப் போவதில்லை. மக்களின் நம்பிக்கையை இழந்த கூட்டமே அரசு ஊழியர்கள் ! இவர்களை போல இவர்களின் பிள்ளைகளுக்கும் அரசு வேலை கிடைக்கும் என்று உத்திரவாதம் இல்லை ! என்பதை உணர்ந்து இனி மேலாவது, அரசு தரும் சம்பளமே போதுமென உணர்ந்து சாமானிய மக்களிடம் கையூட்டு பெறாமல், மக்கள் சேவையே மகத்தான சேவையென ஊழியம் செய்து, மக்களின் நம்பிக்கையை பெற்று சமூகத்தை நேர் வழியில் அரசு ஊழியர்கள் நடத்தி செல்வார்களேயானால் சமூகத்தின் அங்கமான அவர்களின் வாரிசுகளுக்கும் வரும் காலத்தில் நன்மை ஏற்படும் ! ஏற்படட்டும் ! லெனின் சித்தாந்த பார்வை உயிர் பெறட்டும் !

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை

முத்தலாக் தடை சட்டம் நன்மையா ! தீமையா !

முத்தலாக் தடை சட்டம் நன்மையா ! தீமையா !

 இஸ்லாமிய மதம் கொண்டுள்ள சட்டங்கள் அரேபியர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டங்களாகும். இதில் சிவில் சட்டம் என்றோ, கிரிமினல் சட்டம் என்றோ அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் திரு-குரான் பிரித்து வகைபடுத்தவில்லை. நம் நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் இதை வகைப்படுத்தி சிவில் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய அடிப்படை சட்டங்களை (சரியத்தை) தங்களுக்கான சிறப்புச்சட்டமாக பெற்றுக் கொண்டு, குற்றவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் படி அனைத்து இந்தியரை போல் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். எவரும் இவர்களுக்கு மட்டும் சிவில் வழக்குகளில் ஏன் சிறப்புச் சட்டம் தந்தீர்கள் என்று கேட்பதில்லை.

 

இஸ்லாமியர்கள் தங்களுக்குள் சிவில் வழக்குகளில் அரேபியர்களாகவும், குற்றவியல் வழக்குகளில் பொதுவில் இந்தியர்களாகவும் வாழ்கிறார்கள். இதை வைத்துத் தான் இந்துத்துவவாதிகள் இவர்களை இந்தியர்களல்ல அரேபியாவுக்கு விரட்டிவிட வேண்டும் என்கிறார்கள். இதை சொல்லுவதற்கு இவர்களுக்கு யோக்கியதை இல்லை என்றாலும் தமிழர்களாகிய நாம் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும்.

 

தமிழக மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வரும் மதங்களில், எந்த ஒரு மதமும் இம் மண்ணில் தோன்றிய மதமில்லை. இம்மண்ணில் இம்மக்களுக்காக தோன்றிய மார்க்க நெறிகளான சமணம் (ஜைனம் அல்ல) என்னும் ஆசிவகம், சைவம், மாலியம் என்னும் வைணவம் என அனைத்தும் வைதீக பிராமணியத்தால் அழித்தொழிக்கப்பட்டு, அதன் அடையாளங்களில் முதன்மையானவைகளை தமிழனிடமிருந்து திருடி இந்து மதமாக உருவக படுத்தப்பட்டு விட்டது. எஞ்சிய எச்சங்கள் கிராமப்புரங்களில் சிறு தெய்வ வழிபாடாக வரலாற்று ஆதாரமின்றி ஈ.வெ.ரா. போன்றவர்கள் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என சொல்லும் அளவிற்கு தொன்மையான வழிபாட்டு முறையாகி நீர்த்துப் போய் கிடக்கிறது. 

 

தமிழனை தமிழனே ஆள வேண்டும் எனக் கூறும் தமிழ் தேசியவாதிகள் நாளை தமிழனின் ஆட்சியில் தமிழ் இஸ்லாமிய பெண்களுக்கான வாழ்வுரிமைக்கு சட்டம் இயற்ற கடமைப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

முத்தலாக் தடை சட்டத்தையும், பொது சிவில் சட்டத்தையும் ஆதரித்தால் நம்மை இந்துத்துவவாதி என முத்திரை குத்திவிடுவார்களோ எனக் கருதியே பின் வாங்குகிறார்கள். இந்த முத்திரையை திராவிடவாதிகள் தான் தமிழ் தேசியவாதிகள் மீது குத்த காத்திருக்கிறார்கள். இந்நிலையில் சிறுபான்மையினர் என கூறிக் கொண்டு சிவில் வழக்குகளுக்கு அரேபியனாகவும், குற்றவியல் வழக்குகளுக்கு இந்தியனாகவும் வாழ்ந்துகொண்டு இம்மண்ணையும், மக்களையும் ஏமாற்றும் கூட்டமாக இருந்து வருகிறார்கள்.

 

இஸ்லாமியர்களில் தன்னை தமிழன் என உணரும் வெகு சிலரை தவிர பெரும்பான்மை இஸ்லாமியர்கள் திராவிடத்தின் பக்கம் நிற்பதும் இஸ்லாமிய தலைமைகளில் திராவிட இயக்கங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், தமிழ் தேசியத்தின் மீதான அவர்களின் வெறுப்பும், எதிர் உணர்வும் மறுப்பதற்கில்லை.

 

இந்து மதத்தை விமர்சிக்கும் ஒருவன் இஸ்லாத்தில் ஒரு குறையை சுட்டி காட்டி விட்டால் நம்மை முட்டாள் என்றும் எதிரி என்றும் கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன், கழுத்தை வெட்டுவேன் என்பார்கள். பலருக்கும் அச்சத்தை உண்டாக்க கூலிப்படை வைத்து செய்தும் காட்டுவார்கள்.

 

ஈழத்தில் ஆளும்வர்க்கத்துக்கு ஆதரவாக தமிழர்களை காட்டி கொடுத்தவர்களும், ஒரு உயிருக்கு (இராஜீவ் காந்தி) ஒன்றரை இலட்சம் தமிழனின் உயிர் போதாது என்றவர்களும் இவர்கள் தான் !

 

இந்தியா முழுவதும் பெரும்பான்மை மக்கள் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம் அப்பொழுது சிறுபான்மை இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் இஸ்லாமிய இந்திய அரசு சிறப்புச்சட்டம் தருமா அல்லது ஒட்டு மொத்த இஸ்லாமிய சரியத் சட்டத்தை நடைமுறைப் படுத்துமா என்று சற்று யோசித்து பாருங்கள் !

 

முத்தலாக் தடை சட்டத்தை எதிர்ப்பது ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு தேவையாய் இருக்கலாம். உண்மையில் தமிழர் நலன் விரும்பும் ஒரு தமிழ் தேசியவாதிக்கு முத்தலாக் தடைச் சட்டத்தையும், பொது சிவில்ச் சட்டத்தையும் எதிர்ப்பது அவசியமற்றது. ஏனெனில் இஸ்லாமிய தமிழச்சிக்கு முத்தலாக் தடை சட்டமும் தன்னை தமிழனாக உணர்ந்து அனைத்து தமிழ் மக்களோடும் தீண்டாமையற்று வாழ நினைக்கும் தமிழ் பற்றுள்ள இஸ்லாமிய தமிழனுக்கு பொது சிவில் சட்டமும் பயனளிக்கும்.

 

நாம் செய்யவேண்டிய நன்மையை நம் பகைவனே செய்வானாகில் அமைதி காப்பது நமக்கு நன்மையே !

 

இந்தியாவில் அதிகாரமிக்க வல்லாதிக்க ரவுடி அவன் பகை தீர்க்க இந்தியாவில் அதிகாரமற்ற ஒரு சர்வ தேச வல்லாதிக்க ரவுடியிடம் அடிமைபட்டு கிடக்கும் பெண்களை விடுவிக்கிறான். இதில் அப்பாவி மக்களுக்கு தீமை என்ன இருக்கிறது ? நன்மை தானே !

 

தலாக்கும் பொது சிவில் சட்டமும் கட்ருரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2016/11/blog-post_29.html

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

 

#தலாக் #3தலாக் #பொது_சிவில்_சட்டம் #இஸ்லாம் #சரியத் #முஸ்லிம் #பெண்ணுரிமை #தமிழ்தேசியம் #திராவிடம் #இந்தியதேசியம் #இந்துத்துவம்

#triple_talaq