தமிழரின் அடையாளம் :-


தமிழரின் அடையாளம் :-

 


தமிழரை அடையாளம் காண முயலும் போது, பிற தேசிய சிறுபான்மை இனத்தவரும், பிற மொழி சிறுபான்மையினரும் இத்தமிழ் மண்ணில் அதிகாரம் மிக்க வளமான வாழ்வை பறித்துக் கொண்டும், தமிழனின் வாழ்வுரிமையை பங்கிட்டுக்கொண்டும் வாழ்வதால் தாங்களும் தமிழர்கள் தான் என கூறிவருகின்றனர். இவர்களின் இருத்தலை நியாயப் படுத்த திராவிடம் என்னும் இல்லா தேசிய இன கருத்தியலை தமிழகத்தில் விதைத்தனர். இதன் மூலம் தமிழ் தான் திராவிடம் ! திராவிடம் தான் தமிழ் ! என்கின்றனர்.

 

 

திராவிடம் குறித்து புரிதல் ஏற்பட்டுவிடா வண்ணம் ஆரியம் அரசியலுக்கு வகுத்தலித்த சாதி என்னும் குல உயர்வு தாழ்வு வேற்றுமையையே திராவிடம் தமிழர்களிடம் நீர் ஊற்றி வளர்த்து அதில் இலாபமும் தேடி வருகிறது. திராவிடம் பேசி வரும் போலி சமூக நீதி தத்துவமோ, சாதி அற்ற சமுதாயத்தை படைப்பதையே தங்கள் கொள்கை என்கிறது. ஒரு புறம் போலி சமூக நீதியும், மறு புறம் தேசிய இன எழுட்சிக்கு தடையாக குல மோதல்கள் மூலம் தமிழினத்துக்குள் பகைமையை வளர்த்து வருகிறது.

 

 

மூன்றில் ஒரு பங்கு பல்வேறு தேசிய இனங்கள் தமிழர்களோடு கலந்து வாழ்கிறார்கள். அதிகாரம் மிக்கவர்களாகவும் அரசியலை தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்களாகவும் இருந்து வருகிறார்கள். தமிழர்கள் தங்கள் மீதான வேற்று இன அதிகாரத்தை புரிந்து கொண்டு, குல பிரிவினையை கைவிட்டு ஒன்றே குலம் என சிந்திக்க துவங்கினால் தமிழ் இனத்துக்குள் இவர்களும் கலந்து கலப்பினமாகிவிட்டால் திராவிடத்தை உண்மையாக்கிவிடலாம் அல்லது தமிழர்கள் குல வேற்றுமையை கைவிடாமல் தொடர்ந்து குல பகைமை கொண்டிருந்தால் அரசியல் செய்து திராவிடத்தை காப்பாற்றி வரலாம் என உணர்ந்து இரு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர். ஒன்று சாதி மறுப்பு, இறை மறுப்புக்கு ஒரு இயக்கமும், சாதி மோதலில் போலி சமூக நீதி பேசி கொண்டு அரசியல் செய்ய ஒரு இயக்கமும் என உருவாக்கிக் கொண்டனர். அதாவது சாதி, மத ஒழிப்பு என்ற பெயரில் ஒரு இயக்கம் ! ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று ஒரு இயக்கம் !

 

 

தமிழகம் தமிழர்கள் மட்டுமே வாழும் பூமியாக இருந்திருந்தால், ஈழத்தை அழித்தது போல் மொத்த தமிழ் இனத்தையும் அழித்திருப்பார்கள்.

 

 

இந்நிலையில் தமிழர்களை நாம் எதை வைத்துத் தான் அடையாளம் கான்பது ! நிச்சயமாக அவர்களின் குல பெயரான சாதி பெயரை அறிவதன் மூலமே தமிழனை அடையாளம் காண முடிகிறது. வேற்று இனத்தவன் ஒருவன் தன்னை தமிழன் என்பானாகில் அவன் குல பெயரை நாம் அறிந்த உடன் இவன் தமிழன் இல்லை ! பொய்யுரைக்கிறான் என கண்டறிய முடிகிறது.

 

 

உலகில் அனைத்து மக்களுக்கும் குல பெயர்கள் உண்டு அதே போல் தமிழனிடமும் குல பெயர் உண்டு. அதில் உயர்வு தாழ்வு கற்பித்து குல பகையை வளர்த்தவர்கள் ஆளும் வர்க்கத்தினராகிய வேற்று இனத்தவர்களே ! குல பெயர்களும், பிரிவினைகளும் இயற்கையானது அதில் பகைமை என்பது செயற்கையானது. வேற்று நிலப்பரப்பில் இல்லாத தீமை நம் நிலப்பரப்பில் வேறூன்றி விட்டதால் நம்மை நாமே அடையாளம் கான சாதி என்னும் குல பெயர்கள் தேவையாய் இருக்கிறது. ஆரிய திராவிட வருகைக்கு முன்னும் இங்கு சாதி இருந்தது. ஆனால் அதில் உயர்வு, தாழ்வு இருக்கவில்லை எவரும் அந்தணராக, அரசனாக முடிந்தது. குலம் மாற்றத்தக்கதாக இருந்தது. ஆரிய, திராவிட வருகைக்குப் பின் குலம் மாற்ற இயலாததாக்கப்பட்டது, நிரந்தரமாக்கப்பட்டது. அதுவே தமிழினத்தை வேற்றுமைப்படுத்தியது ! அதனாலேயே தமிழினம் அடிமைப்படுத்த எளிமையானது !

 

 

பெரும்பான்மை தமிழர்களின் அரசாட்சி அமைக்கப்பட்டு தமிழர்களுக்கு குல வேற்றுமையை மறுக்கும் பண்பும், அரசியல் அதிகாரம் குறித்த புரிதலும், சிறுபான்மை தேசிய இனங்களும், தேசிய மொழிச் சிறுபாண்மையினரும் தமிழர்களின் அதிகாரத்துக்கு பணிந்து வாழவும், வடுக கன்னடன் அதிகாரமற்றவனாக, இனமாக தன்னை பிரித்து காண இயலாதவனாக மாறும் காலத்தில், தமிழனிடமும் சாதி என்னும் குலத்தை வைத்து தமிழனை காண இயலாது போகும்.

 

 

வந்தவன் எல்லாம் தமிழனை ஆள தமிழன் வேசம் போட்டுக்கொண்டு வந்தேரி இனங்களும், மொழிகளும் தங்களுக்குள் உள் அடையாளங்களோடு வாழ்ந்து கொண்டு தமிழனை சாதியை விட்டுவிடு என கூறுவதற்கு பதில் திராவிடவாதிகள் தங்களின் அதிகாரமிக்க பதவிகளை கைவிட்டு அனைத்தையும் தமிழனிடம் கொடுத்து, தமிழனுக்கு பக்க பலமாக நின்று கொண்டு வாழ்ந்து பாருங்கள் ! தமிழனிடம் சாதி தானே ஒழிந்து போகும் ! அதை விடுத்து ஆரிய கூட்டும், கொள்ளையில் பங்கும், அதிகார பதவிகளை பெற்றுக்கொண்டும், தமிழ் இனம், மொழிக்கு விரோதமான வேலையை செய்து கொண்டும் தமிழ் நாட்டில் வாழ்பவன் எல்லோரும் தமிழன் என்று வடுகனும் கன்னடனும் தமிழகத்தில் சொல்லுவானாகில், இவர்களை போன்ற வேசி மகன்கள் உலகில் இல்லை என்றே சொல்லுவோம்.

 

 

ஆரியமும், திராவிடமும் கூட்டு சேர்ந்து கொண்டு கூலி தொழிலாளி, தெரு வியாபாரி முதல் பெருமுதலாளி, உயர் அதிகாரி என வட இந்தியர்கள் பரவலாக தமிழகத்தில் சப்தமில்லாமல் தற்போது வேகமாக குடியமர்த்தப்பட்டு வரும் வேலையில், தமிழனை அடையாளம் கான சாதி அடையாளம் ஒன்றே அவசியமானதாகிறது.

 

 

சுயநிர்ணய அதிகாரம் தமிழன் கைப்பற்றும் வரை தமிழனை அடையாளம் காண தமிழகத்தில் சாதி அடையாளம் இருந்தே ஆக வேண்டும்.

 

தமிழனுக்கு தேசியம் அவசியமா கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/03/blog-post_10.html

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).