தமிழ் தேசிய இன எழுச்சியும் ! திராவிடர்களின் அறுவடையும் !


தமிழ் தேசிய இன எழுச்சியும் ! திராவிடர்களின் அறுவடையும் !

 


தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் எப்பொழுதெல்லாம் தன் சுயத்தை இழக்க நேரிடுகிறதோ, அப்பொழுதெல்லாம் தன்னெழுச்சியாக வெகுண்டு எழுவதுண்டு. தமிழன் தூங்கிவிட்டான் நாம் சாதித்து விடலாம் என ஆரியம் எண்ணி, தமிழர்களிடம் தோற்றுப் போகும் போது, தமிழனின் வெற்றியை ஆரியம் சகிக்க முடியாமலும், தன்னால் இயலாமல் போனதால், அதை தமிழனின் ஒட்டுண்ணியான திராவிடத்தை விட்டு அறுவடை செய்து, திராவிட இயக்கத்தின் வெற்றியாக காட்டி விடுகிறார்கள்.

 

 

ஆரியமும், திராவிடமும் பெயரளவில் வேறே தவிர, கொள்கையளவில் இரண்டும் ஒன்றே ! கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த தமிழ் இயக்கங்கள் ஒன்றாய் கை கோர்த்துக் கொண்டது இவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை எப்படி கருவறுப்பது என்று சிந்திக்கத் துவங்கியுள்ளனர்.

 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழர் இயக்கங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டை முற்றுகை இட போகிறார்கள் என்றவுடன் திருச்சியில் முக்கொம்பில் இருந்து நடை பயணம் மேற்க்கொண்டனர் (ஐ.பி.எல். இல் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் முதலீடும் இருக்கிறது அல்லவா).

 

 

தமிழர்கள் மோடியை எதிர்த்து நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தால் நிலை குலைந்தது ஆரியம். உடனடியாக மோடி திரும்பிச் செல்லும் கடைசி நேரத்தில், திராவிட தலைவர்கள் தலைமையில் கிண்டியில் கருப்பு பலூன் பறக்க விட்டனர். இருப்பினும், இவர்கள் ஆரியத்தின் கூட்டாளிகள் என்பதை நிருபிக்கும் முகமாக புறாவை பறக்க விட்டனர் (ஆரியத்துக்கு மறைமுகமாக அது சமாதான புறாவே). புறாவை சமாதானத்துக்குத் தான் பயன்படுத்துவது வழக்கம். உலகிலேயே எதிர்ப்புக்கு புறாவை பறக்க விட்டவர்கள் இந்த வடுகர்கள் தலைமை தான்.

 

 

மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார்கள் அதை ஸ்டாலின் தலைமைக்கு மதிப்பளித்து அமைத்ததாக காட்டுவதற்காகவே, அனைத்து மீடியாக்களிலும் ஸ்டாலின், தி.மு.க., புகழ் பாடப்பட்டு கொண்டிருக்கிறது. இதன் மூலம் வருகிற தேர்தலில் பா.ஜ.க. உடனான கூட்டணியை நியாயப் படுத்திக் கொள்வார்கள்.

 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும் கன்னடர்கள் தண்ணீர் தர போவதில்லை. கர்நாடகத்தில் போராட்டம் கொழுந்து விட்டு எரியும் கன்னட அரசும், போலீஸும் அந்த போராட்டங்களை தடுக்க போவதில்லை. தமிழர்களின் வீடுகள் தாக்கப்படும், தமிழன் தாக்கப்படுவான், அவமானப் படுத்தப்படுவான், நிர்வாணப் படுத்தப்படுவான், தமிழக வாகனங்கள் தீக்கிறையாக்கப்படும். ஆனால் நாம் இங்கு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்க வேண்டும். தமிழக திராவிடர்களின் முதலீடுகள் கர்நாடகத்தில் எந்த சேதாரத்திற்கும் உட்ப்படுத்த படுவதில்லை. யார் யார் தமிழன், எது தமிழனின் வியாபாரம், முதலீடு என்றும் எது எது வடுக கன்னடர்களின் முதலீடு என்றும் கன்னடர்களுக்கு தெரியும். கர்நாடகத்தில் தமிழனை தாக்கினால் தமிழகத்தில் நம் இனம் தாக்கப் படுமே என்ற அச்சம் அவர்களுக்கில்லை. ஏனெனில் இங்கே தமிழன் போராடினால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் படுவான். காரணம் இங்கு அனைத்து துறைகளிலும் மேல் அதிகாரத்தில் வடுக, கன்னடர்களின் ஆதிக்கமே நிலை கொண்டுள்ளது. அதை களையெடுக்க ஒரு தமிழ் உணர்வாளனின் ஆட்சியை தமிழகத்தில் உறுதி செய்ய வேண்டும்.

 

 

தமிழர் இயக்கங்களின் இந்த கருத்தொற்றுமையை வருகிற தேர்தலிலும் உறுதிப்படுத்த வேண்டும். அதிக வாக்குகளை வைத்திருக்கும் ஒரு தமிழ் உணர்வாளனை தமிழக தலைமை பீடத்திற்கு அனுப்பி தமிழகத்தை திராவிடம் இல்லாத மாநிலமாக மாற்றி அமைக்க வேண்டும். இல்லையேல் நம் தியாகங்கள் அனைத்தும் திராவிடர்களால் அறுவடை செய்யப்ப்ட்டு கொண்டு இருக்கும் நிலையே ஏற்படும். தமிழ் தேசியம் மீண்டும் நீர்த்துப் போகும் !

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).