ஈ.வெ.ரா. தமிழனுக்கு வழிகாட்டியா ?!


ஈ.வெ.ரா. தமிழனுக்கு வழிகாட்டியா ?!

 


தமிழர்களில் பெரும்பாலானோர் ஈ.வெ.ரா.வை நமக்கான வழிகாட்டி என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது திராவிடவாதிகள் நம்மிடையே பரப்பி வைத்திருக்கும் ஒரு கருத்தியலாகும். கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், அம்பேத்கர், பிரபாகரன் போன்று ஈ.வெ.ரா.வும் நமக்கு வழிகாட்டி என சிலர் சொல்கிறார்கள்.

 

 

கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் சர்வதேச பொதுவுடைமை சித்தாந்தத்தை நிறுவியவர்கள். தனியுடைமை அற்ற சமூகம் படைக்க மனித குலம் பல்வேறு போராட்டங்களின் முடிவில் கண்டடையும் மேம்பட்ட, சுரண்டலற்ற, வர்க்க பேதமற்ற சமுதாயத்தை படைக்க கொள்கை வகுத்தவர்கள். உலகில் எந்த உயிரினத்துக்கும் தன் இனக் குழுவை தானே சுரண்டும் தனி உடைமை வல்லாதிக்க பண்பு இல்லை. அவ்வல்லாதிக்க பண்பு மனித குலத்திடம் மட்டுமே உள்ளது. அது பல்வேறு சமூக மாற்றங்களுக்கிடையே மகத்தான சமூதாயத்தை சென்றடையும் சமூக அறிவியல் கோட்பாட்டை இவ்வுலகிற்கு தந்தமையால் அவர்களை நாம் வழிகாட்டியாய் ஏற்கிறோம்.

 

 

அம்பேத்கர், ஏற்ற தாழ்வுள்ள இந்திய மண்ணில் தீண்டாமையால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், மறு மலர்ச்சியாய் பிறந்தவர். ஒட்டு மொத்த இந்திய சமூகமும் வர்க்க பகைமையால் விளைந்த கொடுமைகளுக்கு முடிவு கட்டும் முன், தீண்டாமைக்கு முடிவு கட்டும் தேவையை நாம் உணரச் செய்தவர். ஆகையால், நாம் தீண்டாமையற்ற தமிழ் சமூகம் படைக்க வழிகாட்டியாய் ஏற்கிறோம்.

 

 

பிரபாகரன், ஈழத்தில் ஒடுக்கப்படும், அடிமைபடுத்தப்படும் நம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராளி. நம் வீரமுள்ள தமிழ் தேசிய இனத்தின் அடையாளம். இந்திய ஆரியத்தையும், சர்வதேசிய ஆரிய வல்லாண்மையையும் எதிர்த்து சமரசத்திற்கிடமின்றி போராடிய மாபெரும் வீரர்களின் தலைவன். நாம் நம்மை திராவிடம் என ஏமாந்து மயங்கியதால் ஏற்பட்ட தீமையையும் பொருட்படுத்தாமல் போராட்ட வடிவத்தையும், போர் வழிமுறைகளையும் சர்வ தேச மானமுள்ள தமிழ் சமூகத்துக்கு அழித்த மாவீரன். அவரை நாம் நம் இனத்தின் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்கிறோம்.

 

 

ஈ.வெ.ரா., வடுக கன்னட மேலாதிக்கத்துக்கு பங்கம் ஏற்படா வண்ணம் தான் மேற்க்கொள்ளும் வடுக கன்னட ஆதிக்கத்தை மூடி மறைக்க பிராமணியம் வகுத்த தீண்டாமையை பார்ப்பனீய எதிர்ப்பால் மூடி மறைத்து தமிழர்களை திராவிடத்தின் பாதங்களில் பணிந்து தொண்டு செய்யும் பக்தர்களாகத்தான் வைத்திருந்தார்.

 

 

எதற்கெடுத்தாலும் வைக்கம் போராட்டத்தை சொல்லிக் கொள்கிறார்கள். வைக்கம் போராட்டம் இவரோ இவர் கட்சியோ நடத்தவில்லை. இவர் காங்கிரசில் இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலய நுழைவு போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் இவரும் ஒருவர் ! ஒரு பெருமை ஒன்று நிறுவப் படுகிறதென்றால் அது தன்னால் தான் நடந்தது என்று கூறி அதை அறுவடை செய்யும் அரசியல் சூட்சமம் தெரிந்தவர்கள் திராவிடவாதிகள் !  கேரளாவில் தாழ்த்தப்பட்டோருக்கு ஆலய நுழைவு போராட்டம் நடத்தியவர், தமிழகத்தில் ஏன் நடத்தவில்லை !?

 

 

பரமக்குடி, முதுகளத்தூர், இராமனாதபுரம் போன்ற இடங்களில் எல்லாம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அநீதி ஏற்படும் போதெல்லாம் ஆலய பிரவேசம் போன்ற போராட்டங்களை ஈ.வெ.ரா. ஏன் நடத்தவில்லை ? கீழ்வெண்மணியில் ஆண்டைகள், வடுகன்கள் என்பதால் ஆண்டான்களுக்கு ஆதரவாக கருத்து வெளிட்டவர்.

 

 

தமிழ் நாட்டில் நகர்புறங்களில் வாழும் மக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஈ.வெ.ரா.வுக்கு ஆதரவாக வாய் கிழிய பேசலாம். நம் நாடே கிராமங்களில் தான் வாழ்கிறது. இன்னும் இரட்டை குவளை முறை உள்ளது ! தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. கிராமங்கள் அனைத்தும் சாதி இறுக்கம் கொண்டுள்ளது. நகர் புறங்களில் பூனூல் அறுக்கும் மாவீரர்கள் கிராமங்களில் வந்து தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தட்டும் ! நாட்டாண்மை, அம்பலங்களின் தோளில் உள்ள துண்டை பிடுங்கி கிழித்துக் காட்டட்டும் பார்ப்போம் ! சாதி மறுப்பு திருமணங்கள் கிராமங்களில் சாத்தியமில்லை ! அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் சொந்த மண்ணுக்கு திரும்ப முடியாது ! இவர்களை தமிழ் இனமாக உணர செய்வதின் மூலமே அடுத்தடுத்த தலைமுறைகளையாவது தமிழ் இனத்தின் உண்மை வரலாற்றை போதித்து மாற்ற முயற்சிக்கலாம் !

 

 

அதற்குள் இவர்கள் பெரியார் மண் என்கிறார்கள். தமிழன் மண்ணை வடுக கன்னடனுக்கு சொந்தமாக்கி வைப்பதை பெருமையாக நினைக்கும் கழிசடைகளை என்னவென்று சொல்வது !

 

 

பிராமணியம் ஏற்படுத்திய சாதி அடுக்குகளில் அரசியல் செய்து, ஆட்சி செய்யும் இந்த வடுக கன்னட ஆதிக்க சக்திகள் திராவிடத்தின் பெயரால் தொடர்ந்து மடை மாற்றம் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்நிலைக்கு காரணமான ஈ.வெ.ரா.வை ஒரு வழிகாட்டியாக ஒருக்காலும் ஏற்க இயலாது.

 

 

தமிழ் தேசிய அமைப்புக்குள் திராவிடவாதிகள் உளவாளியாய் உட்புகுந்து திசை திருப்பும் வேலையை செய்து வருகிறார்களா ! அல்லது தமிழ் தேசிய தலைமையே திராவிடம்தானா ! என்று சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

ஈ.வெ.ரா.வின் திராவிடம் பொதுவுடைமை தத்துவம் அல்ல ! திராவிடத்தை உலகெங்கும் கொண்டு செல்ல இயலாது !

 

 

திராவிடம் தீண்டாமைக்கு எதிரானது அல்ல ! இந்தியம் முழுவதுக்கும் திராவிடத்தை தீண்டாமைக்கு எதிராக கொண்டு செல்ல இயலாது !

 

 

திராவிடம் தமிழியம் அல்ல ! உலகத்தமிழர்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல இயலாது !

 

 

திராவிடம் தமிழகத்தை அதிகாரம் செய்யவும், ஆண்டைகளாகவும், அதிகாரிகளாகவும் வடுக கன்னடர்கள் இருந்து தமிழனை இடித்து பேசிக் கொண்டே அரை நிலப்பிரபுத்துவ பண்பாட்டை பேணிக்கொண்டு முடிந்தவரை எத்தனை காலம் தாக்கு பிடிக்க முடியுமோ, அதுவரை தாக்கு பிடிக்க ஈ.வெ.ரா.வால் உருவாக்கப் பட்ட தமிழன் அல்லாத மேட்டுக்குடி அயளானின் ஆதிக்கத் தத்துவமே திராவிடம். அதன் மூலவர் ஈ.வெ.ரா ! தமிழ் நாட்டில் வந்தேறிகளுக்கு மட்டும் பயன் தரும் மோசடி தத்துவம் ! ஈ.வெ.ரா.வை எவனாவது வழிகாட்டி என்பானாகில் அவன் தமிழின துரோகியே ! தாழ்த்தப் பட்டோருக்கான அரசியலை முன் எடுத்தவர் என்று எவனாவது சொல்வானாகில் அவன் அயோக்கியனே !(ஈ.வெ.ரா., தாழ்த்தப்பட்டோருக்கான அரசியலை முன்னெடுத்தார் என சொல்பவன் அதை பட்டியலிடட்டும். இல்லையென்றால் ஈ.வெ.ராவின் துரோகத்தை நான் பட்டியலிடுவேன்). திராவிடர்களின் பேச்சை கேட்டு, பின்னே செல்பவன் எவனாகிலும் அவன் முட்டாளே !

 

 

ஈ.வெ.ரா. தமிழனுக்கு வழிகாட்டியுமல்ல ! தமிழனின் வழி தோன்றலுமல்ல ! தமிழினத்தை திசை திருப்பிய துரோகி !! 

 

தமிழும், .வெ.ரா.வும் கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/07/blog-post_53.html

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

தேசியமா ! ஊழலா !


தேசியமா ! ஊழலா !

 


உலகில் ஊழல் இன்றி எந்த நாடும் இல்லை ! எந்த சமூக படிநிலையும் இல்லை ! மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்பொழுதெல்லாம், தனக்கெதிராக ஊழல் செய்து உச்சம் தொடுபவர்களை தண்டிக்காமல் விட்டதில்லை.

 

 

இந்நிலையில் ஊழலை ஒழிப்பதற்காகவே கட்சி கட்டுகிறேன் என்கிறார் ஒருவர் ! ஊழலற்ற தமிழ் தேசியம் படைப்பேன் என்றும் ஊழலை தமிழ் தேசியத்தின் வாயிலாக ஒழித்து வடுவதாகவும் ஒரு சிலர் கட்சி கட்டி பேசி வருகிறார்கள் !

 

 

உலகில் ஜனநாயக அமைப்பு வடிவத்தின் உயர்தரமான, உண்மையான, நேர்மையான, ஜனநாயகமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என சொல்லப்படுகிற மக்கள் ஜனநாயகத்தில் கூட ஊழல் நடந்ததாக, நடப்பதாக அறிகிறோம் ! இந்திய ஜனநாயகம் என்பது வர்க்கங்களுக்கிடையே சமரசம் செய்து கொண்டு, மேட்டுக்குடியினரையும், வருணாசிரம உயர் சாதி கட்டமைப்பிற்கு பங்கம் வராவண்ணம் பாதுகாக்கும் போலி ஜனநாயகமாகும். இங்கு ஊழல் அற்ற ஜனநாயகம் என்பது எத்தர்களின் ஏமாற்று வேலையாகும் !

 

 

தமிழன் பொது நிலையில் வர்க்கமாகவும், தனித்த நிலையில் இன ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறான். தமிழினத்திற்கு மிக அவசிய தேவையானது தனித்த இன ஒடுக்குதலுக்கு மூல காரணமான இந்தியத்தையும், அதன் சார்பு நிலையுடன், கயமை கொள்கையை கொண்ட திராவிடத்தையும் முரண்பட்டு, புறந்தள்ளி, தமிழன் என்ற கருத்தியலாய் உருப்பட்டாலன்றி தமிழினத்திற்கு வாழ்வில்லை !

 

 

எனவே, தமிழினத்திற்கு உடனடி தேவை ! ஊழல் ஒழிப்பல்ல ! தமிழ் தேசியமே !

 

யார் தமிழர் ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் ! http://historicalorganisationoftamils.blogspot.com/2018/01/blog-post.html

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

விசித்திர வடுகன் !

               விசித்திர வடுகன் !               கலிங்கப் பட்டி மாவீரனே ! உன் சிம்ம குரல் கேட்டு அவ்வப்போது மக்கள் வியந்து போனதுண்டு ! எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத சாதூர்யம் தங்களுக்கு உண்டு ! இந்தியாவில் மக்கள் சபையில் இருந்து ஐநா சபை வரை உங்களின் பேச்சு வன்மை எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது ! நிமிர்ந்த உடல் ! கம்பீரமான இராஜ நடை ! தோளில் கருப்பு சால்வை ! ஒளி வீசும் கண்கள் ! எடுப்பான மூக்கு ! தாமரை இதழ் போன்ற வாய் ! இலக்கிய சொல் வளமை ! சொல்லின் செல்வர் அல்லவா நீங்கள் ! அப்பப்பா ! உங்கள் பெயரை வைகோ என்று கேட்டாலே SPY CO என்று தான் கேட்கிறது !


என்னை யாரென்று உங்களுக்குத் தெரியாது என நீங்கள் கூறும் பொழுதெல்லாம் எங்கள் உள்ளம் நடுங்குகிறது ! உங்கள் காலடி பட்ட இடம் சுடுகாடு ஆகிறதே ! நீங்கள் அரசியலில் ஒருவனை ஆதரித்தால் அவன் விலாசமின்றி போய்விடுகிறானே ! நீங்கள் ஆதரிக்கும் கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி தனி பெயர் வைக்கிறீர்கள் ! அத்தோடு அது தரை மட்டம் ஆகிறதே ! எப்படி தலைவா !


தாங்கள் ஈழத்தில் பிரபாகரனை கண்டு வந்த பின்பு தான், புலிகளுக்கும், ஈழதமிழர்களுக்கும் நெருக்கடி, இந்தியத்தின் வழியாக சர்வதேசிய அளவில் அதிகரிக்க துவங்கியது ! ஆனால் விடுதலை புலிகளின் அடையாளம் தாங்கள் தான் என்கிறீர்கள் ! ஈழத்தில் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் உங்களுக்கு தமிழகத்தில் தமிழ் தேசியம் எட்டிக் காயாய் கசக்கிறதின் காரணம் என்ன !


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாடு முழுவதும் சென்று மோடிக்கு வாக்களியுங்கள், தமிழ் நாடு வளம் அடையும் ! மேன்மை அடையும் ! என்றீர்கள். எங்கள் புரட்சி தலைவி அம்மா அவர்கள் மோடியா ! லேடியா ! என்று கேட்டார்கள் அதற்காக அம்மாவை இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக விமர்சித்தீர்கள் ! நாங்கள் எல்லோரும் மோடி வேண்டாம் லேடிதான் வேண்டும் என்றோம் ! அதற்காக மோடியின் ஆட்சி லேடி கட்சியையும் குறுக்கு வழியில் கைப் பற்றி தமிழ் நாட்டு மக்களை பாடாய் படுத்த நீங்கள் எல்லாம் காரணமானீர்கள்.


மது விலக்கு அரசியலுக்காக நாளை மரணிக்க இருந்த ஒரு பெரிய மனிதனை செல் போன் டவர் மீது ஏற்றி இன்றே போய்விடு என்று உயரே தூக்கிவிட்டீர்கள். மது விலக்கு வேண்டு மென்று மது அருந்திவிட்டு வந்து மது கடைகளை உம் தொண்டர்களை கொண்டு சூறையாடினீர்கள்.


சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என ஒன்றை அமைத்தீர்கள் அது மண்ணாங்கட்டியாய் போனது ! விசயகாந்துக்கு மஞ்சள் துண்டு போர்த்தி, மஞ்சள் தண்ணி தெளித்து அவர்களின் வெற்றிக் கனவை வெட்டி வீழ்த்தினீர்கள் ! கம்யூனிஸ்ட்டுகள் உங்களோடு சேர்ந்ததால் மார்க்ஸ் அதை சொன்னார், இலெனின் இதை சொன்னார் என்றெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு பெரியார் புராணம் பாடுகிற அளவுக்கு மாற்றி விட்டீர்கள் ! ஏனென்றால் அவர்களின் கட்சியின் தலைமையும் ஆரியமும், திராவிடமும் அல்லவா ! அவர்களிடமும் தமிழன் தலைமை கிடையாது ! ஓரிருவர் இருந்தாலும், தமிழன் சொல் சபை ஏறாது ! திருமாவளவன் பற்றி சொல்ல வேண்டியதில்லை இராமன் ஆண்டால் என்ன ! இராவணன் ஆண்டால் என்ன ! நம் வழி தனி வழி ! தலித் அரசியல் ! அதில் தலைவனாக தொடர்ந்து வளம் வர முடிகிறது ! அது போதும் ! நாளை ரஜினி, கமல் என்று எவன் வந்தால் என்ன !


இப்படியாக ஒருக் கூட்டணியால் சிறுசிறு கட்சிகளையெல்லாம் சட்ட சபையில் காணாமல் ஆக்கினீர்கள் ! இன்று ஈ.வெ.ரா. சிலையை வைத்து அரசியல் செய்து தமிழ் நாட்டை அதிர வைக்கிறீர்கள் ! ஏமாந்த தமிழர்கள் எல்லாம் உங்களுடன் இருக்கிறோம் ! என்ற தைரியம் உங்களுக்கு ! மோடியே ! இராணுவத்தை கொண்டு வந்து சிலையை உடைத்துப் பார், உடைப்பவன் கை,கால்கள் வெட்டப் படும் என்கிறீர்கள் ! இப்படியே எங்களை உசுப்பேற்றி, உசுப்பேற்றி திறமையாகத் தான் அரசியல் செய்கிறீர்கள் ! நீங்கள் சொல்லுவதை போல் இராணுவத்தை வைத்து ஈ.வெ.ரா. சிலை உடைக்கப் பட்டால் நிச்சயம் பத்துப் பேராவது துப்பாக்கி குண்டுக்கு மாண்டு போவார்கள் ! ஒரு பத்துப் பேர் தீக்குளிப்பார்கள் ! இறந்தவன் பட்டியலை பார்த்தால் கருப்பச்சாமி, மாயாண்டி, தமிழ்ச் செல்வன், முனியாண்டி என தமிழனாய் மாண்டு போய் இருப்பார்கள் ! தாலியறுத்த தமிழச்சியின் அழுகுரல் விண்ணை முட்டும் ! அதில் ஈ.வெ.ரா.வுக்காக ஒரு வடுகனோ, கன்னடனோ உயிர் விட்டிருக்க மாட்டான் !


மோடிக்கு ஓட்டு கேட்ட நீங்கள் இன்று மோடிக்கே சவால் விடுகிறீர்கள் ! தமிழனுக்கு ஞாபக மறதி அதிகம் என்பதால் இவ்வாறு பேசுகிறீர்கள் என நினைக்கிறேன் ! நாளை தேர்தல் வந்தால் கூட மோடிக்கு ஓட்டு கேட்ப்பீர்கள் ! இந்த இலட்சணத்தில் ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்கிறீர்கள் ! தாய் கழகத்தின் பாசமோ ! ஒரு வேளை தாய் கழகம் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் உங்களை தனியாக உலாவ விட்டிருக்கிறதோ ! எப்படியோ, ஒற்றன் ஒட்டு கேட்க்கலாம் ! ஆனால் ஓட்டு கேட்க கூடாது ! தமிழக மக்கள் வைக்கோவை கண்டால் ஓட்டளிக்க மாட்டார்கள் !


ஸ்டாலின் ஓட்டு கேட்க வைகோவை அனுப்பினால் ஆர்.கே.நகர் கதிதான் ! வைகோவை ஓரம் கட்டினால் எதிர் கட்சியாக அமரும் வாய்ப்பாவது கிட்டும் !


முன்பெல்லாம் சீமானை சட்டை செய்யாத வைகோ ஈ.வெ.ரா.வின் சிலை பற்றிய சர்ச்சைக்கு பிறகு, தன்னுடன் சீமானையும் சேர்த்துக் கொள்கிறார் ! சீமானும் பெரியாரை எதிர்த்து நான் கட்சி கட்டவில்லை என்கிறார் ! எப்படி என்றால், திராவிடத்தை எதிர்த்து அதற்கு மாற்றாக நான் கட்சி கட்டவில்லை என்பதை மாற்றி சொல்கிறார் ! பிறகு எதற்கு தமிழனுக்கு தனி கட்சி ! நாம் தமிழர் (திராவிடர்) கட்சிதானே ! இனி அடைப்புக் குறியை எடுத்துவிட வேண்டியதுதான் ! சுப வீ போல சீமானும் இருந்து விட்டு போகட்டும் ! இனி நாம் தமிழர், நாம் தமிழர் திராவிடர் கட்சியாய் இருக்கட்டும் !


“தமிழ் தேசியம் இம்மண்ணில் நிறுவப்படும் நிலை ஏற்பட்டால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட கூட்டணி வைக்கத் தயங்கக் கூடாது ! தமிழ் தேசியத்தை வீழ்த்திய பிறகு பிரிந்து நின்று கொள்ளலாம் !” என பேசியவர் தானே நீங்கள் (வைகோ) !


திராவிடத்தையும், அதன் பங்காளியான ஆரியத்தையும் காக்க தமிழ் தாயை என்றென்றும் அடிமையாய் வைத்து வளம் கொழிக்க பல்வேறு வில்லங்க வேளைகளையும் விசித்திரங்களையும் கைகொண்ட வடுகனாகிய தங்களை “விசித்திர வடுகன்” என்று பொருள் கொள்வதில் தவறில்லை அன்றோ !


-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை). தமிழனுக்கு தேசியம் அவசியமா ?!

 

தமிழனுக்கு தேசியம் அவசியமா ?!

 


 

உலகில் மனிதன் எல்லோரும் ஓரினம் ! மனிதர்கள் எல்லோரும் கலப்பினம் தான் ! இன வாதம் தவறு ! அது மனித குலத்துக்கு நன்மை தராது ! கலப்பினமான மனித குலத்துக்குள் தேசிய இனப் பார்வை எல்லாம் தவறானது ! என்றெல்லாம் சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

 

 

குமரி கண்டத்தில் கடல் ஊழி ஏற்படும் முன்னும், பின்னும் பல்வேறு கால நிலையில் மொழி உருவாகா காலத்திலும், மொழி தோன்றிய காலத்திலும் மொழி வளர்ச்சி அடைந்த காலத்திலும் என பல்வேறு கால சூழ்நிலையில் மனித குலம் உலகெங்கும் பரவியது உண்மைதான் ! ஆனால் அதற்காக பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரி கண்டத்தில் கடல் ஊழியால் மூழ்கிப் போன மனிதன் இன்று எழுந்து வந்து பேசுவது போல் பேசினால் சிரிப்பதை தவிர வேறு என்ன செய்வது ! இவர்கள் தெரியாமல் பேசுகிறார்களா அல்லது தெரிந்து தெரியாதவர்கள் போல் பேசுகிறார்களா ?

 

 

இவர்களுக்கு நீண்ட விளக்கம் சொல்லுவதைவிட நடைமுறை யோசனனை ஒன்றை சொல்வோம் திராவிடம் பேசுகிறவன் ! இந்தியம் பேசுகிறவன் !  உலகில் எல்லோரும் கலப்பினம் என்று பேசுகிறவன் எல்லோரும் தமிழ் நாட்டை விட்டுவிட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அல்லது நம் அண்டை திராவிட மாநிலங்களான கேரளா, கர்னாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்டிரா மாநிலங்களில் சுமார் ஓர் ஆண்டு சாதாரண மனிதனாக தமிழ் மொழி பேசிக் கொண்டு குடி இருந்து விட்டு தமிழ் நாட்டுக்கு வந்து விடவும். அதன் பிறகு பார்ப்போம் ! அவர்களை நம்மோடு சேர்ப்பதா அல்லது ஏர்வாடியில் சேர்ப்பதா அல்லது கீழ்ப்பாக்கத்தில் சேர்ப்பதா என்று !

 

 

நம்மை பார்த்து யார் தமிழர் ?! என்று தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். யார் தமிழர் என்று ஏற்கனவே ஒரு பதிவு ஒன்று எழுதப் பட்டுள்ளது அதில் சென்று பார்த்துக் கொள்ளவும்.

 

 

தமிழர்களுக்குத் தான் தங்களை தமிழர் என்று தெரியவில்லை ஆனால் காவிரி பிரச்சனை வந்தால் கன்னடனுக்கு யார்,யார் தமிழன் என்று துல்லியமாகத் தெரிகிறது.

 

 

முல்லை பெரியாறு பிரச்சனை வந்தால் மலையாளிக்கு யார்,யார் பாண்டிக்காரனென்று (தமிழர்கள்) தெளிவாகத் தெரிகிறது.

 

 

ஆந்திராவில் கூலி வேலைக்கு வருகிறவனில் யார்,யார் தமிழன் என்று தெலுங்கனுக்கு தெரிகிறது.

 

 

தமிழன் தான் திராவிடன், திராவிடன் தான் தமிழனென்று நம் மண்ணில் ஈ.வெ.ரா.வை வைத்து ஏமாற்று அரசியல் செய்ய யார்,யார் ஏமாந்த தமிழனென்று வடுக கன்னடர்களுக்கு தெரிகிறது.

 

 

தமிழ் ஈழத்தை சுடுகாடாக்கும் போது, சர்வ தேசியக் கூட்டுப் படைக்கும் இந்திய இலங்கை அரசு படைகளுக்கும் அங்குள்ள காட்டிக் கொடுக்கும் சிங்கள வடுகம் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் யார்,யார் தமிழன் என்று தெரிகிறது.

 

 

தமிழக மண்ணில் இருந்து கண்டெடுக்கப் பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொன்மையான கல்வெட்டுக்கள் படியெடுத்து, ஆய்ந்து கண்டறியப் படாமலும், தொலைத்தும், ஆதாரங்களை மறைத்தும், தமிழக மண்ணில் அகழ்வாய்வு செய்து கண்டறியப்படும் உண்மைகள் தமிழன் தான் மூத்தக்குடி என நிறுவ ஆதாரங்கள் கிடைக்கப் பெறுவதைக் கண்டு தொல்லியல் ஆய்வை நிறுத்திய மத்திய அரசுக்கு யார்,யார் தமிழன் என்று தெரிகிறது.

 

 

தமிழகத்தில் உள்ள மத்திய மாநில பொதுத்துறை (நீதி, நிர்வாகம், பாதுகாப்பு, இரயில்வே உட்பட) நிறுவனங்களில் பெரும் அளவிற்கு வட இந்தியர்களை பணியில் அமர்த்தும் மத்திய மாநில அரசுகளுக்கு யார்,யார் தமிழன் என்று தெரிகிறது.

 

 

தற்போது தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிலையங்களிலும் வட இந்திய மாணவர்களுக்கு பெருமளவில் வாய்ப்பளிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு யார்,யார் தமிழன் என்று தெரிகிறது.

 

 

தமிழகத்தில் சினிமா துறையில் வடுகர்களுக்கு சரிவு வந்த போதெல்லாம் கலைவாணர் போன்றவர்கள் சம்பளம் பெறாமலேயே நடித்துக் கொடுத்து சினிமா துறையை காப்பாற்றி விட, இன்று பாரதிராஜா போன்ற தமிழ் இயக்குநர்கள் இனம், மொழிக்கு அப்பாற்பட்டு இளிச்சவாயன்களாய் மாற்று மொழி நடிகர், நடிகைகளை வளர்த்துவிட திரைப்பட சங்க தலைமைக்கு தமிழனை வரவிடாவண்ணம் வடுகர்கள் தலைமையை கைப்பற்ற யார்,யார் தமிழனென அவர்களுக்கு தெரிகிறது.

 

 

உலகின் தொன்மையானதும், மூல இசையுமான கர்நாட்டின் இசை என்னும் தமிழிசையை தமிழ் இசைவானர்களிடம் கற்றுத் தேர்ந்து, அதை தெலுங்கில் உயர் மெட்டுகளில் கீர்த்தனைகள் பாடிக் கொண்டு, தமிழர்களுக்கு அவர்களின் இசை அறிவை கொண்டு சேர்க்கும் பணியை செய்ய மறுக்கும் வடுக பிராமணர்களுக்கு யார்,யார் தமிழன் என்று தெரிகிறது.

 

 

“யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !” என்று சொன்னது தமிழன் தான் ! ஆனால் உலகில் எந்த மானிட சமுதாயமும் அவ்வாறில்லை !

 

 

உலகில் எல்லா தேசிய இனங்களும் “யாதும் எமக்கே ! யாவரும் கேளிர் !” என்றிருக்கும் வேளையில், நம்மையும் அவ்வாழ்வை நோக்கி நிர்பந்திக்கும் கட்டாயத்தால் தமிழனுக்கும் தேசியம் அவசியமாகிறது !

 

தேசியமா !ஊழலா ! கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/03/blog-post_64.html

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).