"கமல் ஹாசன்" தமிழனா! கன்னடனா! மலையாளியா!


“கமல்ஹாசன்”

 

தமிழனா ! கன்னடனா ! மலையாளியா !கமலஹாசன் என்னும் திரைப்பட நடிகர் புதிதாக ஒரு கட்சி ஒன்றை தொடங்கி, அதற்கு கொடியும், பெயரும் வைத்துவிட்டார். அது நாள் முதற் கொண்டு கமல் ஹாசன் பற்றிய சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளன.

 

கமல் என்பது அவரது பெயர் ஹாசன் என்பது அவருக்கு வைக்கப்பட்ட துணைப் பெயர் அல்லது சிறப்புப் பெயர். அவருடைய பெற்றோர்கள் அவருடைய சகோதரர்களுக்கும் சாரு ஹாசன், சந்திர ஹாசன் என பெயரிட்டுள்ளனர். இன்று இவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கும் ஹாசன் என்னும் குடும்ப சிறப்புப் பெயரை இணைத்தே ஹாசன், (சு)ஹாசினி என்று பெயர் வைத்துள்ளனர்.

 

இவர்களின் அப்போதைய பூர்வீகம் தற்பொழுது கர்நாடகத்தை சேர்ந்த ஹாசன் மாவட்டம் என்னும் மலை நாடாகும். இவர்கள் பிராமண வகுப்பை சார்ந்தவர்கள். தமிழகத்துக்குள் நுழையும் சாதகமான சூழ்நிலையில் பிழைப்பு தேடி வந்த கன்னட பிராமண குடும்பமாகும்.தன் வாழ்ந்த இருப்பிட பெயர் தங்களுடன் என்றும் நிலைத்திருக்கவும், தாங்கள் தமிழர்களில்லை என்பதை எக்காலத்திலும் மறவாதிருக்கும் பொருட்டு ஹாசன் என்ற பெயரை தங்கள் பெயருடன், இணைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

 

பொதுவாக கன்னடர்களுக்கு தமிழனை, தமிழை இழிவுபடுத்துவதில் எப்பொழுதும் ஆனந்தமே மேலோங்கி இருக்கிறது. தன் கட்சிக்கு பெயரை மக்கள் நீதி மய்யம் என்று வைத்திருக்கிறார். மை என்பது ம் + ஐ = மை யாகும். ம,ய் என்னும் பொழுது ம் + அ = ம, அதை யடுத்து ஒரு மெய் எழுத்து என்பது தமிழ் மொழி மீது அத்து மீறி அவர்கள் செய்யும் குழப்பமாகும். இதைத்தான் பாவணர் கொல் குறும்பு என்கிறார். ஒரு மொழியை சிதைக்க முதலில் குழப்பம் தரும் வேளையாக எழுத்துக்களை சிதைப்பது, பின் சொற்களை சிதைப்பது, பின் வாக்கியங்களை சிதைப்பது, அத்துடன் சேர்ந்து தொடர்ந்து பண்பாட்டை சிதைத்துக் கொண்டே வருவது ! இந்த வேலையை திறம்படச் செய்ய அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது !

 

இதையே கன்னடத் தெலுங்கர் ஈ.வெ.ரா.வும் செய்தார். ‘ஐ’, ‘ஔ’ உயிரெழுத்துகளிலேயே சிறப்புப் பெற்ற எழுத்துக்கள் ஆகும். அந்த எழுத்திற்கான சிறப்பை வலுவிழக்க செய்வதில் அவர்களின் தமிழ் மொழி மீதான கொலை வெறி துவங்குகிறது. லை,ளை,னை,ணை என்ற எழுத்துக்களில் ல,ள,ன,ண எழுத்துக்களின் முன் முனையில் எழுதப்படும் கொம்பு நீக்கப்பட்டு விட்டதால் ‘ஐ’ எழுத்தின் முன் கொம்பு அடையாளம் அழிக்கப்பட்டு விட்டது. இனி அவ்வெழுத்துக்கள் தமிழில் இல்லை. இதை எழுத்துச் சீர்திருத்தம் என்கிறார்கள். ஒரு தேசிய இன மக்கள் பயன்படுத்தும் வளமையான மொழியில் சீர்திருத்தம் செய்ய தனி ஒருவனுக்கு எப்படி அதிகாரம் வந்தது ! தமிழ் அறிஞர் பெருமக்கள் கூடி எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வருவது தகுமே தவிர, தனி ஒருவன் அதிலும், வேற்று இனத்தவன் செய்வது மொழி மீதான தாக்குதலேயன்றி சீர்திருத்தம் அல்ல !

 

தமிழில் ‘ஐயன்’ என்பது கன்னடத்தில் ‘அய்ய’ என்பதாகும். கமலஹாசனின் கன்னட மொழி பாசம் ‘ஐ’ என்னும் சிறப்பெழுத்தை அழித்து ‘அய்’ என்பது போல் மய் என்ற நடையை பின் பற்றுகிறார்.

 

இவர் தன்னை மலையாளி என்று கூறிக்கொள்கிறார். ஹாசன் மாவட்டம் கேரளத்தின் எல்லைக்கருகில் இருப்பதால் கேரளத்துடன் சேர்க்காமல் கர்னாடகத்துக்கு சென்றிருக்கலாம். கேரளத்தை ஆண்ட மன்னர்கள் ஹாசனையும் சேர்த்து ஆட்சி செய்திருக்கிறார்கள். ஹாசன் மாவட்டமும் கேரளத்தின் தொடர்ச்சியான மலை நாடு ஆகும்.

 

கேரளத்தில் நடந்த சினிமாக்காரர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய கமல் ஹாசன் தான் ஒரு தமிழனல்ல ! நான் பாண்டிய நாட்டானும் அல்ல ! நான் ஒரு மலையாளி என்று மகிழ்ச்சித் ததும்ப சொல்லி பூரிப்படைய, மலையாளிகள் எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்யும் காட்சியை யூ டியூப் சேனலில் kamalhassan son of kerala என்ற தலைப்பில் 3.20 நிமிடத்தில் வரும் காட்சியை கண்டு உணர்க !

 

அவர் தன் பெயரால் கன்னடனாகவும், உணர்வால் மலையாளியாகவும் உணர்வதால் திராவிடமும் என் கொள்கை என்பார். ஆனால் பிராமணர் என்பதால் இந்திய ஆரியமும் என் கொள்கை என்பார்.

 

எப்படியாகினும் கமல் ஹாசன் கன்னட பிராமணனோ அல்லது மலையாள பிராமணனோ ! ஆனால் நிச்சயமாக தமிழன் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது. எந்தத் தமிழனாவது கமல் ஹாசன் மண்ணின் மைந்தன் என்பானாகில், அவனைப்போல் ஒரு கிறுக்கன் இவ்வுலகில் இல்லை.

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).


காவிரியும் - உச்ச நீதிமன்ற தீர்ப்பும் !

காவிரியும் - உச்ச நீதிமன்ற தீர்ப்பும் !


காவிரி நடுவன் மன்றம் அளித்த தீர்ப்பே தமிழனுக்கு ஏமாற்றம் தான் ! அதிலும் உச்ச நீதி மன்ற தீர்ப்பு தமிழர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் ஆகும். நிலத்தடி நீரை கணக்கிட்டு தீர்ப்பெழுதுவது துரோகம் ஆகும். நிலத்தடி நீர் நிலையானது அல்ல ! பருவ நிலை தவறும் பட்சத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளது. இனி மேல்முறையீடு செய்யும் உரிமையை மறுத்தது தமிழனுக்கு செய்யும் மாபெரும் துரோகம் ! இந்த 177.25 டி.எம்.சி யும் கர்நாடகத்திலிருந்து மறுக்காமல் வழங்கப்படும் என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை.


உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுத்தவர்கள் தான் இந்த கன்னடர்கள். நம் நிலைமை எப்படிப்பட்டதென்றால், “விட்டு கொடுத்த பிள்ளைக்கு விட்ட காணியும், முரண்டு பிடித்த பிள்ளைக்கு மொத்த காணியும்“ என்ற பழமொழியை மெய்யாக்கிவிட்டது.


தமிழர்களாகிய நம்மிடம் உள்ள ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தண்டனை ! நம் ஒற்றுமையின்மைக்கு காரணம், நம்மிடையே உள்ள இனப்பகையே ! இனப்பகை பெரும்பாலும் அடிமை புத்தி உள்ளவர்களிடம் தான் மலிந்து கிடக்கும்.


நம்மிடையே பகைகொண்ட தேசிய இனமாயினும், தேசிய கட்சிகள் அதிகாரத்தில் கோலோச்சினாலும், இன ஒற்றுமைக்கு தமிழர்களாகிய நாம் கன்னடர்களிடம் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.


அங்கு தன்னை திராவிடன் என்று உணர்ந்த ஒரு கன்னடனும் இல்லை ! இங்கு தான், யார் தமிழன் ! என்பதை புரிந்து கொள்வதற்கே ஆயிரம் அறிவு தடைகளை கடந்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் இருந்து, தேசியத்தின் அவசியத்தை உணர்ந்தோம். காவிரியில் இருந்து சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை உணர்வோம்.


நம் விடுதலை எல்லை தூரமாயினும், பயணித்தே ஆக வேண்டும் என்பதே விதி !


-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).
இந்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காதலை எதிர்ப்பது ஏன் ?!


இந்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காதலை எதிர்ப்பது ஏன் ?!

 


ஏக போகம் சந்தையாக்கி வைத்திருக்கும் பல்வேறு கருத்தியலில் காதலர் தினத்தை தவிர வேறு எந்த கருத்தியலையும் இந்த இரு கூட்டமும் எதிர்ப்பதில்லை. இந்துத்துவத்தை பொருத்தவரை, காதலை ஊக்கப்படுத்துவது, அதன் வர்ணாசிரமத்திற்கு எதிரானது. அது உருவாக்கி வைத்திருக்கும் சாதிய அடுக்குகளை தகர்த்து விடுகிறது. அனைத்து சாதிகளுக்குள்ளும் முறையற்ற கள்ள உறவு வைத்துக் கொண்டு இச்சை தீர்த்துக் கொள்வதால், அதன் சாதியமயப்படுத்தி வைத்திருக்கும் நிறுவன அமைப்புக்கு பாதிப்பு இல்லை. ஆனால், காதலால் சாதி சமயமற்ற பண்பு உருவாகி வருவது, வருங்காலத்தில் இந்துத்துவ பண்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது.

 

 

ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தேறும் காதல் திருமணங்களில் சாதி சமயங்கள் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் அவ்விருவரில் ஒரு சாதியோ சமயமோ அவர்களை உள்வாங்கி உமிழ்ந்து விடுகிறது. இருப்பினும் அதை அடுத்த தலைமுறைக்கு, சாதி சமயம் சார்ந்த கருத்தியலில் இறுக்கம் தளர்த்தப்பட்ட சமூகமாக முன்னேறுகிறது. அது தன் மீது திணிக்கப்பட்ட சாதி சமய இறுக்கங்கொண்ட பண்பாட்டை தன் வாரிசுகளுக்கு தளர்த்துகிறது. சாதி சமயமற்ற வாழ்வியலை ஊக்குவிக்கிறது. சமூக முன்னேற்றம் பிராமணியத்தின் தலைமையை கேள்விக்குள்ளாக்குகிறது.

 

 

சாதி சமயமற்ற மண வாழ்க்கை அல்லது ஆண் பெண் இணை வாழ்க்கை மதக் கட்டுமானத்தை வீழ்த்தி முன்னேற காதல் ஒரு ஊடகமாக இருப்பதால் இந்துத்துவம் காதலை எதிர்க்கிறது.

 

 

அடுத்து, இஸ்லாமிய மதம் காதலை வழிந்து எதிர்ப்பதன் காரணத்தை பார்ப்போம்.

 

 

“மனைவிப் பண்ணை” வைத்துக்கொள்ள நூறு சதவீதம் குரான் மற்றும் ஹதீஸ் வழியாக அனுமதி அளித்துள்ள ஒரு மதம். யுத்த காலத்தில் விதவையாக்கப் பட்ட கணக்கற்ற பெண்களை நபி தேவைக்குப் போக மீதி உள்ள விதவை பெண்களை தன் விருப்பம் போல் பகிர்ந்து, நுகர்ந்த பண்பாட்டை கொண்டவர்கள் வகுத்தளித்த மதம்.

 

 

மிக பின் தங்கிய பண்பாட்டை கொண்டவர்களாக இந்த அரபு பிரேதசம் இருந்த காலத்திலேயே இங்கு பெண் வாளேந்தி யுத்த களத்தில் யுத்தம் புரிந்தவளாகவும் அரசியல் பொருளாதார பண்பாட்டை தீர்மானிக்கும் சக்தி பெற்றவளாகவும் அவள் அனுமதி இன்றி எந்த ஆடவரும் தீண்ட முடியாதவளாகவும், சீறிய ஒழுக்கமுள்ளவளாகவும், விளிம்பு நிலை வாழ்வியலை மன்னனிடம் எடுத்து உரையாடி, போராடி உரிமை பெற்றவளாகவும் தைரியமிக்கவளாகவும் வாழ்ந்தவள் தமிழச்சி !

 

 

பிராமண சூழ்ச்சியால் வீழ்ந்து போன தமிழியம், தெரிந்தோ தெரியாமலோ வந்த மதத்தில் ஏதோ இருக்கிறது என இவர்கள் சர்க்கரை என காகிதத்தில் எழுதிவைத்து நக்க வைப்பார்கள் என தெரியாமல் தமிழர்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றதால் வந்த வினை ! யானைக்கு பயந்து புலியிடம் மாட்டிக் கொண்டான் தமிழ் முஸ்லிம் !

 

 

இவர்களின் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்துக் கேட்டால் உங்கள் மதத்தில் என்ன வாழ்கிறது ? உங்களை விட நாங்கள் தான் பெண்ணை அதிகம் மதிக்கிறோம், உரிமை கொடுத்திருக்கிறோம் எனக் கூறி தமிழர்களை இந்துக்களாக்கி விடுகிறார்கள். தமிழனுக்கென்று ஒரு மதம் இல்லாததால் வந்த வினை !

 

 

இஸ்லாத்தை பொருத்தவரை காதலை ஊக்கப் படுத்துவது அதன் இருத்தலுக்கு எதிரானது. பெண் என்பவள் ஆணின் உடல் பசிக்கான பண்டப் பொருளே. இஸ்லாமியச் சட்டப் படி பொண்டாட்டி பண்ணை வைத்து பராமரிக்க இவர்களுக்கு முழு உரிமை உண்டு. நான்கு மனைவி வைத்திருப்பவன் நான்கு பேரையும் காதல் செய்வானா ?! செய்ய முடியுமா ! காமம் தலைக்கு ஏறும் போது எந்த மனைவி மீது மோகம் கொள்கிறானோ அவளுடன் கலவி புரிவான். மீதி உள்ள பெண்கள் இவன்னெப்ப கூப்பிடுவான் என காத்து கிடக்க வேண்டியதுதான் ! அட ! மீதி உள்ள பெண்களில் யாருக்கேனும் காமம் தலைக்கேறி நம்ம ஆளு நம்மில் ஒருத்தியை கூட்டிச் சென்றுவிட்டான் நாம வேற ஒருத்தனை வெளியில் சொல்லாமல் தேடிக் கொள்வோம் என செயலில் இறங்கி பிடிபட்டால் பொது அரங்கில் வைத்து நூறு கசையடி ! இது தானே ஷரியத் !

 

 

இவர்கள் இஷ்டத்துக்கு ஹதிஸ் எழுதி வைத்திருக்கிறார்கள் கணவன் ஒரு மனைவி மீது ஆசைப்பட்டு, கூப்பிட்டால் அவள் மறுக்காமல் சென்று அவனை சந்தோசப் படுத்த வேண்டும். அதை அவள் மறுப்பாளானால் மலக்குகள் (அதாவது தேவ தூதர்கள்) வந்து, இரவு முழுவதும் அந்த பெண்ணை சபித்துக் கொண்டே இருப்பார்களாம் ! எப்படி இருக்கிறது நியாயம் பார்த்தீர்களா ! சரி………. மனைவி கணவனை அழைத்து அவன் அவளை சந்தோசபடுத்த வரவில்லை என்று வைத்துக்கொள்வோம், அதற்கு அந்த தேவ தூதர்கள் அந்த கணவனை சபிக்க வருவார்களா ? என்றால், நிச்சயமாக இல்லை !  

 

 

ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் இந்த காட்டு மிராண்டிகளிடம் காதல் என்னும் மெல்லிசையின் மென்மையை எவ்வாறு எதிர் பார்க்க முடியும்.

 

 

இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதி மற்றும் தீண்டாமையும் அப்படியே இஸ்லாத்தில் இருக்கும் நிலையில், இவர்களாக திட்டமிட்டு உருவாக்கிய புனைவு சாதிக்குள் தமிழ் பேசும் முஸ்லிமை மட்டும் அடைத்து வைத்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் சாதி மற்றும் தீண்டாமைக்கு சர்ச்சார் கமிட்டியின் அறிக்கையே சான்றாகும்.

 

 

அதுமட்டுமல்ல இஸ்லாத்தில் வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. இந்து மதத்திலோ அல்லது தமிழர்களிலோ வரதட்சணையின்றி இளம் வயதுல்ல ஆணுக்கு, இளம் வயது பெண்ணை மனம் முடித்து வைத்துவிட முடியும். ஆனால் இவர்களில் அது முடியவே முடியாது. நம் வீட்டில் புறக்கடையில் கோழி பண்ணை வைத்து தேவைப்படும் பொழுது கோழியடித்து சாப்பிடுவதை போல இவர்கள் மதத்தில் வரதச்சணை கொடுமையால் மணமாகாத பெண்கள் காத்துக் கிடந்தால், ஒன்னுக்கு இரண்டோ, இரண்டுக்கு மூனோ அவன் குமரனோ, கிழவனோ கட்டிக் கொண்டு மனைவியாய் வைத்துக் கொள்வார்கள். வரதட்சணை கொடுக்க இயலாமல் தேங்கிய இஸ்லாமியப் பெண்கள் தன் தேவை கருதி வேறு இனத்தை, மதத்தை சேர்ந்தவனை காதலித்து திருமணம் செய்து கொண்டால், அதை விபச்சாரம் எனக் கூறி அப்பெண்ணை சமூகத்தில் இருந்து ஒதுக்கவோ அடிக்கவோ கழுத்தறுக்கவோ அலைவார்கள். போன பிள்ளை கட்டியவனையும் கூட்டிக்கொண்டு மீண்டும் இஸ்லாத்துக்குள் வந்து விட்டால் அல்லாஹூ அக்பர் என்பார்கள் !

 

 

இவர்களுக்கு பெண்கள், உடல் பசிக்கு புணரும் பண்டங்கள் தான் ! காதல் பற்றி எப்படி புரியும் ! ஆக இந்துவும் இஸ்லாமும் எப்பொழுதுமே காதலுக்கு எதிரிகள் தான் ! மாறுபட்டு வரும் காலத்திய புதிய தலைமுறைகளே ! இந்த பிற்போக்கு, மதவாத சக்திகளை முறியடிக்கும் !

 

 

“ ஒரு புதிய தலைமுறை வளர்ச்சி அடைந்த பிறகு, அந்த தலைமுறையை சேர்ந்த ஆண்களுக்கு பணத்தைக் கொண்டு அல்லது சமூக ரீதியான இதர அதிகார சாதனங்களைக் கொண்டு, ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி தம் வாழ்க்கையில் என்றைக்குமே நேராது. பெண்கள் உண்மைக் காதலுக்காக மட்டுமன்றி, வேறு எந்த நோக்கத்துக்காகவும், எந்த ஆணுக்கும் என்றைகுமே இணங்க மாட்டார்கள்” – பி.ஏங்கல்ஸ் –

 

 

அந்த புதிய தலைமுறையை சென்றடைய ஆண், பெண் இருவரிடையேயான காதல் வாழ்வை வளர்த்தெடுப்போம் ! வாழ்க காதல் !

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை)

 

காதலர் தினம் தீங்கானதா !?


காதலர் தினம் தீங்கானதா !?

 


வளர்ச்சி பெற்ற ஒரு சமூகம் தான் படைத்த நாகரிகத்தை உலகமறிய செய்வதில் வியப்பில்லை அது ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பை அறிமுகப் படுத்தி இருக்கிறது அதில் ஒரு நாள் காதலர் தினமாக கொண்டாடப் படுகிறது.

 

 

காதல் என்றவுடன் சாதி, மத அடிப்படைவாதிகள் எல்லோரும் பதை பதைப்பு அடைகின்றனர். சமூக ஒழுக்கம் கெட்டுப் போய் விடும், விபச்சாரம் பெருகி விடும், காமம் தலைவிரித்து ஆடி விடும் என்கின்றனர்.

 

 

இப்படி காட்டுக் கூச்சல் போடுபவர்களின் பின்னணியில் விபச்சாரமும், கள்ள உறவும் மலிந்து கிடக்கிறது. இவர்களை பொருத்தவரை விபச்சாரமும், கள்ள உறவும் தான் காதல் போலும் !

 

 

இந்து மத அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இது ஏகாதிபத்திய கலாச்சாரம் தான், இந்த காதலர் தினம். இதை எதிர்த்தே ஆக வேண்டும் என்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் பிடியில் உலகமயம், தாராள மயம், பொதுச்சந்தை என எல்லா வற்றையும் ஏக போகத்துக்கு திறந்து விட்டுவிட்டு, கலாச்சாரத்தை மட்டும் காக்கப் போகிறார்களாம் இந்த பன்னாடைகள்.

 

 

எந்த ஒரு மூலதனமும் அதன் இலாப நோக்கிற்க்கேற்ற அரசியல் மற்றும் பண்பாட்டைக் கொண்டே செயல்படும். இன்று நாம் காணும் அனைத்து வகை வியாபார பொருட்க்களின் விளம்பரங்களும், இன்று எடுக்கப் படும் திரைப்படங்களுமே அதற்குச் சான்றாகும்.

 

 

காதல் என்பது ஏகாதிபத்தியம் நமக்கு புதிதாய் உருவாக்கி தந்த ஒரு திட்டமல்ல ! காதல் என்பது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் இயற்க்கை நியதி ! ஏக போகம் முதலீடு செய்த பல துறைகளில் காதலும் ஒன்று !

 

 

இன்று திரைப்படம் எடுக்கும் பாணியே மாறிவிட்டது. திருடன், மொல்லமாறி, வீட்டுக்கடங்காதவன், விட்டேத்தி, ஒழுக்கங்கெட்டவன், பொறுப்பற்றவன், குடிகாரன், ரௌடி, பொம்பள பொறுக்கி போன்ற கதாப் பாத்திரங்கள் தான் கதாநாயகன். இந்த கருமம் புடிச்சவனுகளை கதாநாயகி தேடித் தேடி, விரட்டி விரட்டி காதலிப்பாள். ஏனென்றால் ஆணுக்குரிய அத்தனை அம்சமும் இது மாதிரி பயலுக கிட்டத்தான் இருக்கிறது என்பாள். இந்த செயர்க்கையான, உண்மைக்குப் புறம்பான வாழ்வியலை, இளம் பெண்கள் மனதில் விதையூட்டுவதே இவர்களின் நோக்கம். இதில் தான் கோடி கோடியாய் பணம் ஈட்டுகிறார்கள்.

 

 

பெண் தற்ப்போது தான் அதிக அளவில் இந்த மெக்காலே கல்வி திட்டத்தின் தொடரில் படித்துவிட்டு அரைகுறை சமூக புரிதலோடு வெளியே வருகிறாள். அவளை படிக்கும் இடத்திலலிருந்து கல்வி மூலம் சமூக புரிதலை தவறாக புரியவைத்து, தொடர்ந்து கெடுத்து வந்து, அவளின் பருவ வயதில் சிறகடிக்கும் காதல் ஆசைகளை திசை திருப்பி, சமூக பண்பாட்டின் சிதைவுக்கும், சீரழிவுக்கும் பெண்ணே காரணம் என்ற பழிச்சுமையோடு, ஏகபோக கலாச்சாரமே சரியென, அவளை ஒப்புக் கொள்ள வைப்பதே இந்த முதலீட்டாளர்களின் நோக்கமாகும்.

 

 

இளம் இரத்தம் அடக்கினால் பொங்கி எழும். இந்த ஏகாதிபத்திய மதவாத கைக் கூலிகள் காதலிக்கும் இளம் ஆண், பெண் மீது தாக்குதல் தொடுப்பதும், அம்பலப்படுத்துவதும், இங்கேயே இப்பொழுதே திருமணம் செய்து கொள் என நிர்பந்திப்பதும் அவர்களை வேறு ஒரு முடிவை நோக்கி நகர்த்தி செல்கிறது. மதவாத பன்னாடைகளுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது ?!

 

 

காதல் என்னும் பொது நியதிக்குள் திருமணம் தேவையா  அல்லது தேவை இல்லையா ! திருமணம் என்னும் பிணைப்புக்குள் இருவருக்குமான இணைப்பு நீடிக்குமா அல்லது நீடிக்காதா ! பெற்றோர்களுக்கு தெரிவிப்பதா கூடாதா ! பெற்றோர்கள் எதிர்ப்பார்களா, ஆதரிப்பார்களா ! இருவரின் தெரிவும் சரியா, தவறா ! இதுவெல்லாம் சம்பந்தப் பட்ட நபர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்குமான பிரச்சனை. இந்த மதவாத பன்னாடைகளுக்கும், சாதியவாத நாதாரிகளுக்கும் இதில் என்ன அக்கரை ! பெற்றோர்களே ! தேவையின்றி உங்கள் பிள்ளைகள் மீது காதலித்தார்கள் என்பதற்காக எவனேனும் பிரச்சனை செய்வார்களேயானால் அவர்களை செருப்பால் அடியுங்கள் ! பெற்றோர்களை தவிர பிள்ளைகளை கண்டிக்கவோ தண்டிக்கவோ வேறு எந்த நாதாரிகளுக்கும் எந்த உரிமையும் இல்லை.

 

 

பிள்ளைகளின் காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் காலமெல்லாம் பிள்ளைகளுடன் வாழ்க்கைப் பயணம் மேற்க்கொள்ள போவதில்லை. பெற்றோர்களுக்காக காதலைக் கைவிடும் இளம் உள்ளங்கள் பெற்றோர்களின் காலத்திற்குப் பின் தான் அடைய நினைத்ததை அடையவில்லையே என்ற ஏக்கத்துடன் இழந்த மனதுடன் மரணிக்கின்றனர்.

 

 

இந்த ஆணாதிக்க சமூகத்தில் திருமணத்திற்கு முன் ஆணும், பெண்ணும் உறவு கொண்டால், ஆண் வெற்றியாளனாகவும், பெண் தப்பு செய்தவளாகவும், கெட்டுப் போனவளாகவும் பார்க்கப்படுவது ஆணாதிக்க சமூகத்தின் நியதியாகும் ! உறவு கொண்டவுடன் கெட்டுப் போக பெண் ஒன்றும் உண்ணும் பண்டப் பொருளல்ல!

 

 

வர்க்க பேதமற்ற சமூகமே, மனிதவியலின் ஒரு அங்கமாக பெண்மையை கருதும் ! அதுவரை பெண்ணுக்கு எதிர் பாலினத்தின் மீது காதல் வராமலிருக்க பெண் என்பவள் கல் சிலையல்ல !

 

 

இந்துத்துவவாதிகளின் வாழும் கடவுள் (காமுகன்) சங்கராச்சாரியார் கள்ளக் காதலியுடன் குடகு மலைக்கு மாருதி காரில் சென்றது போல் அல்லாமல் !, மக்கள் பிரதிநிதியாகி சட்டசபையில் உட்கார்ந்து சீன் படம் பார்த்த கர்னாடக பி.ஜெ.பி. எம்.எல்.ஏ.க்கள் போல் அல்லாமல் ! இஸ்லாத்தின் தௌகீது என்னும் நேர் வழியாகிய நபி வழியை நமக்குக் காட்டி விட்டு, மதர்சாவுக்கு வந்து போகும் அடுத்தவன் பொண்டாட்டியோடு காதல் ரசம் ஒழுகும் பி.ஜெயினுலாபுதீனின் கள்ளஉறவு போல் அல்லாமல் இளைஞர்களே காதல் புரியுங்கள்.

 

 

காதல் இயற்கையின் நியதி ! எதிர் எதிர் விசையின் ஏர்ப்பு ! அதுவே அணுவின் இயக்கம் ! நம் உலகத் திருமறையின் தத்துவ ஞானி திருவள்ளுவனின் வழி நின்று கற்பு நெறி தவறாத காதல் புரிந்து தமிழ் சமூகத்தை பண்படுத்துங்கள் ! நம் பாரதி சொன்னது போல்

 

காதல் காதல் காதல்

காதல் போயிற், காதல் போயிற்

சாதல் சாதல் சாதல்

 

நன்றாக காதல் புரியுங்கள் ! அது உங்கள் உரிமை ! மேற்கண்ட கள்ளக் காதலை கை விட்டு, உண்மைக் காதலர்களாய் நம் மொழியை, இனத்தை, பண்பாட்டையும் காதலித்து நேர் வழியில் வாழ்ந்து வாழ்வை வளமாக்கி, தரமான சந்ததிகளை தமிழ் தேசத்திற்கு தந்திட வாழ்த்துகிறோம்.

 

 

வாழ்க காதல் ! வளர்க காதலர்களின் தமிழ் தேசம் !!

 

 

-தமிழர் வரலாற்று கழகம் ( சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை ).