லிவ்விங் டூகெதர் (living together) !

லிவ்விங் டூகெதர் (living together)!

 


குடும்ப அமைப்பின் கட்டுப்பாடுகள் தனிப்பட்ட சுதந்திரமான சுவாதீனத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதி, தேவைக்கு வாழ்ந்து பார்ப்பது என்கின்ற புதிய ஆதாரமற்ற நவீன குடும்பம் போல் ஒரு கட்டமைப்பை செய்து பார்த்துக் கொண்டிருப்பது லிவ்விங் டூகெதர்.

 

 

நம் தமிழ் சமுகத்தில் இல்லாத வாழ்க்கை முறையாதலால், எல்லோரும் தன் விருப்பம் போல் அதற்கு தமிழில் பெயரிட்டு கொள்கிறார்கள்.

 

 

இது குடும்ப அமைப்பின் வளர்ச்சி நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஏகாதிபத்திய நுகர்வு பண்பாடானது, பாலியலை நுகர்வு இச்சையாக மட்டும் மாற்றி இருக்கிறது. இது தலைமுறை உற்பத்தியை தடுத்து, உதிரிப் போக்கை விதைத்து, சுய நலத்தை போற்றுகிறது. சமுதாய கடமையாற்றும் பண்பிலிருந்து விலக்கி வைக்கிறது. குடும்ப அமைப்பை கேள்விக்குள்ளாக்க நகர்வு கலாச்சாரம் கொண்டு வந்துள்ள சவாலாகும். இது ஆணானவன் பெண்ணிடம் எதிர் பார்க்கும் ஒழுக்கம், கற்பு, நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. தனக்கு மட்டுமே சுதந்திரம் என்று எண்ணி வாழ்ந்து வந்த ஆண் வர்க்கத்தை சிந்திக்க வைத்திருக்கிறது.

 

 

இருப்பினும் அரசு கட்டமைப்பானது ஆண்ணாதிக்க பண்புகளை கொண்ட கட்டமைப்பானதால், பெண்வர்க்கம் மாற்றி அமைக்கும் எவ்வித பண்பாட்டு விடயங்களும் ஆண்வர்க்கத்தின் நுகர்வில் லாபமாகவே போய் முடிகிறது.

 

 

பெண் ஒழுக்கத்தை கடைபிடித்தாலும், கூடா ஒழுக்கத்தை பின் பற்றினாலும் முதலாளித்துவ ஜனநாயகத்தில் வெற்றியாளர் ஆணாகவே இருக்கிறான்.

 

 

மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு கொண்டு சேர்த்து வைத்திருப்பது, கணவனுக்கு தெரியாமல் மனைவி வேறு ஒரு ஆணுடன் கள்ள உறவு கொண்டு சேர்ந்து இருப்பது என்கின்ற ரகசிய கள்ள பாலுறவு நம் சமுகத்தின் இயல்பு போக்கில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற, கூடா ஒழுக்கம் என பார்க்கப்படும் பண்பாடானது, மற்றொரு வடிவமாக இன்று இளம் ஆண் பெண்களில் சிலரிடம் இக்கலாச்சாரம் பரிணமித்திருக்கிறது.

 

 

இது பெரும்பாலும் ஆணும் பெண்ணும் கலந்துறவாடும் தொழில்களில் நீண்ட காலம் தொன்று தொட்டு இருந்து வருகின்ற பண்பாடுதான். குறிப்பாக சினிமா துறையில் இருப்பதாக பரவலாக நம்பப்பட்டு வந்த இந்த பாலியல் விடயங்கள், இன்று கார்ப்பரேட் நிறுவனங்களிலும், தகவல் தொழில் நுட்ப துறைகளிலும் இளம் ஆண் பெண்கள் மத்தியில் புதிய பரிணாமம் எடுத்திருக்கிறது.

 

 

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரே வீட்டில் மண உறவு இன்றி சேர்ந்து வாழ்வதும், சேர்ந்து வாழும் ஆண் பெண் இருவரும் பால் உறவை மையப்படுத்தி இன்பம் துய்ப்பதும், மற்ற நேரங்களில் ஒருவர் மற்றவர் குறித்து அக்கறையற்று இருப்பதும், அந்த அக்கறையற்ற நேரங்களில் வேறு ஒருவருடன் அதே வீட்டிலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ பாலுறவு கொள்வதும், இப்படி இரண்டு, மூன்று, நான்கு என தன்னுடன் சேர்ந்து வாழும் நபரின்றி, வேறு நபர்களுடனும் உள்ள உறவை பற்றி சேர்ந்து வாழும் இருவரும் அக்கறையற்று இருப்பதும், வறைமுறையற்ற புணர்ச்சிக்கு வித்திடுகிறது.

 

 

இன்று இவன் அல்லது இவள் நாளை வேறு ஒருவன் அல்லது ஒருத்தி என இன்பம் துய்ப்பது பழைய குழு மணவடிவத்தில் அல்லது பலதார மற்றும் பல கணவர் மண வடிவத்தின் சாயலாக புதிய வடிவம் எடுத்திருக்கிறது எனலாம். இருப்பினும் பல கணவர் மற்றும் பலதார மண வடிவில் புதிய தலைமுறைகள் உற்பத்தி செய்யப்பட்டன குழந்தைகளின் தந்தையை தாய் தான் அடையாளம் காட்ட வேண்டும். இவ்விதமான மகபேறு, சுமையாகி விடும் என்பதாலும் சுதந்திரமான சுகத்திற்கு தடையாகும் என்பதாலும் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தி மகப்பேறு இன்றி தொடர்ந்து பல ஆண், பல பெண் பாலுறவில் தொடர்ந்து இன்பம் துய்க்கிறார்கள் எனலாம்.

 

 

இதில் ஈடுபடும் பெண்கள் புதிய வாழ்வியல் கண்டு விட்டதாக பூரிப்படைகின்றனர். ஆனால் ஆண் மணவாழ்க்கைக்கு முன் இதை ஒரு பயிற்சி களமாகவே பார்க்கிறான்.

 

 

இவ்வாழ்கை வாழ்ந்த ஆண் ஒருவனை பெண்ணானவள் வருமானம், பொருளாதாரம், சொத்து போன்ற முக்கிய காரணங்களுடன் வறைமுறையற்ற புணர்ச்சியை விரும்பாத பெண் கூட மணந்து கொள்ள முன் வருகிறாள். ஆனால் இவ்வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை மணந்து கொள்ள எந்த ஆணும் முன் வருவதில்லை. அப்படி ஒரு வேலை பெண் மண வாழ்க்கையை யாருடனாவது அமைத்து கொள்வாளாகின் அது நீண்ட நாட்க்கள் நிலைப்பதில்லை.

 

 

இப்பொழுது படித்த இளம் வயது பெண்களிடமும், அவளின் பெற்றோர்களிடமும் ஒரு வித பேராசை இழையோடி இருக்கிறது. அது என்னவென்றால் தன்னை மணக்கும் ஆணுக்கு சொந்த வீடு, கார், வங்கியில் இருப்பு பல லட்சங்கள் இருக்க வேண்டும். தாங்கள் கொண்டு வரும் சொத்து நகைகள் மீது கணவன் உரிமையோ, விருப்பமோ கொண்டிருக்கக்கூடாது. மாமனார், மாமியார், நார்த்தனார் போன்ற உறவுமுறைகள் அருகில் இருக்கக்கூடாது. தனித்து வாழவேண்டும். ஆணுடைய உறவுகளுக்கு அப்பாற்பட்டும், பெண்ணுடைய உறவுகள் அதிக ஆதிக்கம் செலுத்த வகை செய்யும் பண்பு கொண்டு, மணமகன் தேடும் போக்கு இச்சமுகத்தில் ஒருபுறம் வளர்ந்து வருகிறது.

 

 

இதற்கு சாட்டை அடி கொடுக்கும் வகையில் லிவ்விங் டூகெதர் வாழ்க்கையில் சலிப்படைந்த அல்லது போதும் என கருதும் புத்திசாலி பெண்கள் தங்களை மணக்க ஆண்கள் முன் வருவதில்லை என்பதை உணர்ந்து புதிய முறையை பின்பற்ற துவங்கியுள்ளனர். அதுதான் வீட்டு கணவர் முறை (house husband). ஆண் பெண்ணை வேலைக்கு அனுப்பாத வீட்டு மனைவியாக (house wife) ஏற்பது போல், படித்து, படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத, நிரந்தர வேலையில்லாத அல்லது தொழில் இல்லாத ஆண்களை வீட்டு கணவனாக அடைய முன் வருகிறார்கள். இதை அப்பெண்ணின் பெற்றோர்களும் மனமுவந்து மணம் செய்து வைக்கிறார்கள்.

 

 

குறைந்த பட்சம் படிப்பு, சொத்துள்ள பெண்கள் போடும் நிபந்தனைகளுக்கு பக்கத்திலேயே, நிபந்தனையற்ற முறையில் வீட்டு கணவனை அடையும் லிவ்விங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்து அந்நியப் பட்ட பெண்ணும் இருக்கிறாள்.

 

 

குடும்ப அமைப்பே அரசின் கடைசி வடிவமாக இருக்கின்றபடியால், ஏக போகம் நுகர்வு கலாச்சாரம் மூலம் என்ன தான் சமூதாயத்தை சிதைக்கும் போக்கை செயல்படுத்தினாலும் கெட்டு சீரழிந்த்வர்கள் இறுதியில் வந்தடையும் இடம் குடும்ப கட்டமைப்பாகத் தான் இருக்க முடியும்.

 

 

தனக்கான அரசியலை தீர்மானிக்கும் பயிற்சியும், அறிவும், போராட்ட குணமும் குடும்பத்தை முறையாக முன்னெடுக்கும் ஒருவருக்கே கிடைக்கிறது. குடுப அமைப்பை முன்னேறி செல்வதை, மேம்படுத்துவதை விட்டுவிட்டு ஏகாதிபத்தியத்தின் நுகர்வு கலாச்சாரத்தில் உதிரிகளாகி போன இந்த சுதந்திர பாலியல் நுகர்வு என்னும் கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தறுதலைகள் !. இந்த லிவ்விங் டூகெதர், ஏக போகம் குடும்ப பண்பாட்டின் மீது பரப்பி விட்ட நோயாகும். இந்த நோயால் அதிகம் நீர்த்து போகிறவர்கள் பெண்களே !.

 

 

நம் தமிழ் சமுகம் எதிர் கொண்டிருக்கும் இன ஒடுக்கு முறைக்கு எதிராக சிந்திக்க வேண்டிய இளைஞர்கள், முதலாளித்துவத்தால் பண்பாட்டுச் சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்டு பயனற்ற வாழ்க்கையை நோக்கி திசை திருப்பப்படுகிறார்கள்.

 

 

லிவ்விங் டூகெதர், நம் தமிழ் சமுகத்தில் குடும்ப அமைப்பு என்னும் சமுத்திரத்தில் அதிகார வர்க்கம் உருவாக்கும் அதிர்வலைகளே ! இவ்வதிர்வால் குடும்ப சமுத்திரத்தில் சுனாமி ஏற்படலாம் ! ஆனால் சமுத்திரம் அழிந்து போகாது !.

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

குடும்பம் வன்முறையா ?!


குடும்பம் வன்முறையா ?!

 

 

கீழ்த்தரமான பேராசை, மிருகத்தனமான காம வெறி, பொருள் ஆசை, பொது சொத்துக்களை சுயநலத்துக்காக கொள்ளையடிப்பது, ஊழல் புரிவது ஆகிய இழிவான செயல்களை சமூகத்தின் எதார்த்தம் என போற்றும் அரசியல் அமைப்பு கொண்ட சமுதாய கட்டமைப்பில் குடும்பத்தில் வன்முறை தவிர்க்க இயலாதது ஆகும்.  

 

 

திருட்டு, கற்பழித்தல், ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் போன்ற மோசமான செயல்கள் இல்லாத பழைய சமூதாய கட்டமைப்பை படுகுழியில் தள்ளி முன்னேறி வந்த புதிய வர்க்கச்சமூதாயத்தில் அதில் குடும்ப அமைப்பில் வன்முறையோ, சுரண்டலோ இன்றி இருக்க இயலாது.  

 

 

மனைவியை மதிக்கின்ற ஜனாயக குடும்பத்தில் கூட மனைவிக்கு தெரியாமல் கள்ள உறவுகொல்லும் ஆண்ணையும், மாற்றான் மனையால் மீது மோகம் கொள்ளும் ஆண் வர்க்கத்தால் பெண் காமத்தால் வீழ்த்தப்படுவதும், அதன் காரணாமாக மனைவியை மதிக்கும் ஜனநாயகக் குடும்பம் கூட உடைந்து படுகுழியில் வீழ்வதும் நடந்தேறுகிறது.  

 

 

அரசின் கடைசி வடிவமாக குடும்ப அமைப்பு இருந்து வருகிறது. அக்குடும்ப அமைப்பில் மாற்றம் ஏற்படுமாயின் அது சமுதாய கட்டமைப்பின் உச்ச அதிகார பீடமான அரசை மாற்றுகிறது.  

 

 

புராதன அநாகரீக காலத்தில் பெண்ணே குடும்ப அமைப்பில் அதிகாரம் படைத்தவளாய் இருந்தாள். குடும்ப அமைப்பு குழு வடிவம் கொண்டிருந்தது. ஆண் குழுவுடனோ, தனித்தோ உணவுதேடும் பொறுப்பில் இருந்தான். இவ்வேலையில் உழைப்பினின்று வேறுபட்டு பிற குல குழுக்களுடன் சண்டையிட்டு பெறப்படும் உணவு தானியங்கள், கால் நடைகள், ஆபரணங்கள், இன்ன பிற பொருட்கள் மற்றும் போரில் தோல்வி உற்ற குழுக்களை அடிமையாக்குதல் மூலம் ஆண் உற்பத்தி சாதனங்களை பெற்றான். பெண் வீட்டில் பராமரிப்புக்காகவும், மகப்பேறுக்காகவும் ஒதுக்கப்பட்டாள். ஆண், பெண் இருவருக்குமான வேலைபிரிவினையே உலகில் தோன்றிய முதல் வர்க்கப் பிரிவினை என மார்க்ஸியம் கூறுகிறது. அதுவே சமூதயத்தையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்கிறது.  

 

 

குடும்ப அமைப்பில் இன்று பின்பற்றப்படும்  ஒரு தார மணமுறை ஆணுக்கும், பெண்ணுக்குமான ஒப்பந்தம் உடன்பாடாகினும், அதை ஆண் மீறுவது திறமை எனவும், பாராட்டுக்குரிய விடயமாகவும், பெண்மீறுவது கீழ்தரமானதாகவும், தண்டணைக்குரியதாகவும் பார்க்கப் படுகிறது. ஆண்ணுடைய சொத்துக்கான வாரிசை பிரதிநிதித்துவ படுத்துவதே பெண்ணின் கடமையாக இருக்கிறது.  

 

 

பிற மனையாளின் மீது மோகம் கொள்ளும் ஒவ்வொரு ஆணும், தன் குடும்ப மனையாள் திருமண ஒப்பந்தத்தை மீறாது இருக்க விரும்புகிறான்.  

 

 

ஆண் வர்க்கம் இரு வழிகளில் பெண்ணை வெற்றி கொள்கிறது. திருமண பந்தத்தின் மூலமும், திருமண உறவை தாண்டியும் பெண்ணை அனுபவிப்பதை நியாய படுத்துகிறது.  

 

 

தண்ணுடைய கூடா ஒழுக்கத்தை தவறில்லை என கருதும் ஆண், மனைவியின் கூடா ஒழுக்கத்தை தடை செய்கிறான், தண்டிக்கிறான்.  

 

 

இது எப்படி என்றால் வர்க்க சார்புள்ள அரசின் அதிகார வர்க்கம் மக்கள் உழைப்பை, வரி பணத்தை, நலதிட்டங்களை கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் கூட்டம், சுருங்க சொன்னால் அரசை கற்பழிக்கும் ஆதிக்க கட்டமைப்பு, தேர்தலில் காசு வாங்கி ஓட்டு போடும் பிராதன அங்கமான மக்களை தண்டிக்க சட்டம் இயற்றுவது போல் ஆகும்.  

 

 

கீழ் நிலை பெண் ஒருத்தி உயர் நிலை அடைய பல ஆண்களின் காம பசிக்கு இரையாகாமல் உயர் நிலை அடைய முடிவதில்லை.  

 

 

ஆணுக்கு பெண் பாடம் புகட்டும் வரை ஆண் பெண் சமநிலையை, ஆதிக்கமற்ற வளமான குடும்ப அமைப்பை அல்லது அதற்கும் மேம்பட்ட சம நிலையை ஆண் ஏற்கப் போவதில்லை.  

 

 

அதே போல் அதிகார வர்க்கத்திற்கு மக்கள் பாடம் புகட்டும் வரை ஆதிகார வர்க்கம் தன்னுடைய ஆதிக்க நிலையை விட்டுவிடபோவதில்லை.  

 

 

ஆணின் அதிகாரம் ஒழிக்கப் பட வேண்டுமென்றால் சமூதாயத்தில் வர்க்க சார்புள்ள அரசு அதிகாரம் ஒழிக்கப் படவேண்டும்.  

 

 

முதலாளித்துவ ஜனநாயகம் முற்ப்போக்கானதாகினும் அது வர்க்க பகைமையோடு பயணிக்க படியால், வர்க்கங்கள் மோதி தீர்த்துக்ககொள்ளும் களத்தை அமைக்கிறது. அக்களத்தில் ஆதிக்க சக்திகளுக்கு துணை நின்று சுரண்டப்படும் வர்க்கத்தை பழிதீர்த்து பணிய வைக்கிறது.  

 

 

கீழ் நிலையில் வாழும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஆணும் பெண்ணும் சமுக உற்ப்பத்தியில் ஈடுபடுவதால் ஆண் பெண் சமநிலை அற்ற போக்கு குறைந்து காணப்படுகிறது.  

 

 

அதிகார வர்க்கங்களில் மண உறவை தாண்டிய உறவு ஆணுக்கு கேள்விக்குள்ளாக்கப் படுவதில்லை. ஆனால் பெண்ணுக்கு அது கள்ள காதலாய் நிலை பெற்று இருக்கிறது. இன்று முன்னேறிய சமூகத்தில் மாதாந்திர மாற்று வாடகை கணவனோடு ஆணுக்கு நிகராக பெண் சம நிலை பெறுவது கூடா ஒழுக்கத்தின் மூலம் நடந்தேறுகிறது.  

 

 

நடுத்தர, மத்திய தர மக்கள் மத்தியில் மண உறவை தாண்டிய உறவு வெகு சில குடும்பங்களை தவிர பெரும்பாலும் பெண்ணை ஆண் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வஞ்சிப்பதும், பெண் ஆணின் அறிதலுக்கு அப்பாற்பட்டு கள்ள காதல் முறையில் ஈடுபடுவதும் எதார்த்தம் ஆகிவிட்டது.

 

 

பெரும்பாலும் குழந்தைகளுடைய உண்மையான தந்தை யார் என்பது ஓர் தார்மீக நம்பிக்கை சார்ந்த விசயமாகிவிட்டது.  

 

 

மண உறவை தாண்டிய உறவு குற்றம் இல்லை என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்திருப்பது பெண்ணுக்கு சாதகமானதோ அல்லது பாதகமானதோ அல்ல. ஆனால் குடும்ப அமைப்பின் மீது ஓர் அதிர்வை ஏற்படுத்துகிறது. இது ஆணுக்கு வேண்டுமானால் கூடுதல் வாய்ப்பளிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.  

 

 

மண உறவை தாண்டிய உறவு குற்றமில்லை என்பதை வரிந்து ஆதரிக்கும் இன்றைய பெண்ணியவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகள் முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். பலதார மண முறையில் முஸ்லிம் மதத்தை தாண்டி இன்று நடைமுறையில் பகிரங்கமாக எதையும் அடையாளபடுத்த இயலாது. மதத்தின் பெயரால் பலதார மணத்தை மத சட்ட வடிவமாக்கி மாறாது, மாற்றக்கூடாது என்ற இஸ்லாமிய கொள்கையை சிறுபான்மையினர் என்பதை காரணம் காட்டி அனுமதிப்பது அபத்தமாகும். பி.ஜெ.பி. கொண்டு வருவதால் எதிர்ப்பது என்பது என்ன வகை அறிவு ! சில நேரங்களில் நம் எதிரிகள் கூட எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாய் இருந்தால்  அமைதிகாப்பது புத்திசாலிதனம் ! யூக அரசியல் அறிவு இன்றி இச்சமுகத்தை இனி அடுத்த கட்டம் நகர்த்த இயலாது. இஸ்லாம் நம் நாட்டில் சிறுபான்மையாக இருக்கலாம் ஆனால் அது சர்வதேச வல்லாதிக்க போட்டி கொண்ட பிற்போக்கான சட்டங்களை கொண்ட சமுக வளர் நிலைக்கு எதிர் நிலை கொண்ட கட்டமைப்பாகும்.

 

 

முதலாளித்துவ ஜனநாயகம் இயற்றும் சட்டம், திட்டம், சலுகைகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது கரிசணைக் காட்டுவது போல், அது தனது நலனையே பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

 

 

முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் ஏகபோகம் தன் முன் இருக்கும் அனைத்தையும் தனக்காக உழைக்கும் உற்பத்திக் கருவிகளாகவே பார்கிறது.  

 

 

இன்றைய சமூதாயத்தின் அலகு குடும்பமாகும். அன்பு, பாசம், தியாகத்தால் நிலைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் இத்தியாகத்தை ஆணோ, பெண்ணோ ஒரு சாரார் மட்டும் பின்பற்றுவது காலப்போக்கில் குடும்ப அமைப்பை சிதைத்து விடுகிறது. வெகு சில குடும்பங்களை தவிர பெண்ணே இத்தியாகத்தை செய்கிறாள். சில குடும்பங்களில் ஆண் வஞ்சிக்கப்படுவது மாற்றான் மனைவியின் மீது மோகம் கொண்ட மற்றொரு ஆணின் முயற்சியாலேயே நடந்தேறுகிறது. இவை அனைத்தும் உழைக்கும் மக்களுக்கான அரசியல், பொது பொருளாதாரம் இல்லாததால் விளைந்த குற்றமே அன்றி வேறல்ல.

 

 

“பொது சொத்தை காட்டிலும் தனி சொத்து மேலோங்கிய பொழுது வாரிசு உரிமையில் அக்கறை ஏற்பட்டதுடன், தந்தை உரிமையும் ஒரு தார மணமும் மேல்நிலைக்கு வந்துவிட்டன. திருமணம் முன்னைவிட அதிகமாக பொருளாதார காரணங்களை சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. விலை கொடுத்து பெண்ணை வாங்கும் திருமணத்தின் வடிவம் மறைகிறது. ஆனால் பெண்ணை மட்டுமன்றி ஆணும் சொந்த குணங்களை கொண்டு மதிக்கப்படாமல் சொத்துக்களை கொண்டு மதிக்கப்படும் வழியிலே அந்த பேரம் அதிகரிகின்ற முறையில் நடத்தி முடிக்கப்படுகிறது.” – எங்கெல்ஸ்.

 

 

குடுபம் என்பது சமுதாயத்தில் அரசின் கடைசி வடிவம் ஆகும். அது தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள அரசின் உயர்ந்தப்பட்ச வடிவத்தை மாற்றி அமைக்க போராடும் மூலக்கருவாக இருந்து வருகிறது. எனவே அதனுள் அதிகார வர்க்கம் தொன்று தொட்டு உருவாக்கி வைத்திருக்கும்  உள்முரண்பாடுகளை தட்டி விட்டு குடும்பத்தை சிதைத்து உதிரிகளாக்கும் வேலையை செய்கிறது.  

 

 

ஏக போகம் சமுதாய வரலாற்றின் அனைத்து அம்சங்களிலும் உள்ள அடையாளத்தை அழித்துவிடுகிறது. சமுதாயம் முழுவதும் உதிரிப் போக்கை விதைக்கிறது. உதிரித்தனம் சமுக அக்கறையின்மையைக் கொண்டு சுய நலத்தை பேணும் என்பதால், அதுவே சமுக முன்னேற்றம் எனவும் முற்போக்கான வாழ்வியல் எனவும் வழிகாட்டுகிறது. இதன் மூலம் குடும்ப அமைப்பை தகர்த்து சமுதாய தேவைகளுக்கான போராட்ட வடிவத்தில் இருந்து விலக்கி ஆண் பெண் இரு பாலரையும் இயந்திரங்களாக்கி தன் இருத்தலை மேலும் நீடித்துக்கொள்ள முனைகிறது. வர்க்கப்பகைமையை திசைதிருப்பி சமுகத்தை தங்களுக்குள் நெடுங்காலமாக உண்டான உள்முரண்பாட்டை தீர்க்க சண்டை இட்டுகொள்ள செய்கிறது.  

 

 

அரசியல் பொருளாதார சமத்துவமே ஆண் பெண் சமத்துவத்தை உண்டாக்கும். ஆண் பெண் சமத்துவமே வன்முறையற்ற குடும்ப அமைப்பை அல்லது அதைவிட மேம்பட்ட நம் கற்பனைக்கு எட்டாத சமூக கட்டமைப்பை உருவாக்கி வளர்ச்சி அடைந்து மேன்மையடையும் ! முன்னேறிசெல்லும் ! ஆகவே ஆணை போல பெண்ணும் சகலவித சமூக உற்பத்தியில் ஈடுபட்டாக வேண்டும்.  

 

 

குடும்பம் பற்றி மார்க்ஸியத்தின் பார்வை என்னவென்றால்:-  

 

 

“குடும்பம் என்பது தொடர்ச்சியாக நான்கு வடிவங்களை கடந்து வந்துள்ளது. இப்பொழுது அது ஐந்தாவது வடிவத்தில் இருக்கிறது என்று உண்மையை ஒத்துக்கொண்டால், இவ்வடிவம் நிரந்தரமாக இருக்குமா ! என்ற கேள்வி உடனே எழுகிறது. அதற்கு தரக்கூடிய பதில் இதுதான் ! சென்ற காலத்தில் நடந்ததை போல சமூதாயம் முன்னேற அதுவும் முன்னேறும் ! சமுதாயம் மாற அதுவும் மாறும் ! குடும்பம் சமுதாய அமைப்பின் படைப்பு. அதன் பண்பாட்டை அது பிரதிபலிக்கும். நாகரீகம் தொடங்கிய காலத்தில் இருந்து ஒரு தார மணக் குடும்பம் மிகவும் முன்னேறம் அடைந்திருக்கிறது. நவீன காலத்தில் அது கணிசமாக மேம்பட்டிருக்கிறது. எனவே, ஆண் பெண் சமத்துவம் முழுமையாக சாதிக்கப் படுகின்றவரை அது மேலும் மேம்பட முடியும் என்று குறைந்த பட்சமாக கருதி கொள்ளலாம். நெடுந்தூர எதிர் காலத்தில் ஒரு தார மணக்குடும்பத்தினால் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் போனால், அதற்கு பின்னால் வரப்போகின்ற வற்றின் இயல்பை ஆருடம் கூற முடியாது.” –எங்கெல்ஸ் (குடும்பம், தனி சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்).

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

தமிழும், ஈ.வெ.ரா.வும்:-

 

தமிழும், ஈ.வெ.ரா.வும்:-


 

வடுகனும், கன்னடனும், மலையாளியும் அவனவன் பூர்வீக மண்ணில் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது என்பார்கள். தமிழகத்தில் பிழைக்க வரும் பொழுது, நாம் எல்லோரும் திராவிடர்கள் என்பார்கள்.

 

 

தமிழகத்தில் முதல் முறையாக இந்திக்கு 1922ல் விளக்கு போட்டவர் ஈ.வெ.ரா., பேராய கட்சியில் இருந்த போது ஈரோட்டில் இந்தி பள்ளி ஒன்று ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார். பேராய கட்சியில் இருந்து விலகிய பின் அக்கட்சிக்கு எதிர் நிலையாகத் தான் இந்தியை எதிர்தாரே அன்றி, உணர்வால் அல்ல !

 

 

ஈ.வெ.ரா., இந்தியை தமிழ் பற்றால் எதிர்க்கவில்லை ! பேராயத்தை தாக்க இந்தி எதிர்ப்பு ஒரு நல்ல கருவியாய் கிடைத்தது என்று வெளிப்படையாய் சொன்னார் என்று தேவநேய பாவாணர் கூறுகிறார். பேராயக் கட்சியில் இருக்கும் போது ஆதரித்தது, பின் அதை விட்டு விலகிய பிறகு அதற்கு எதிர் நிலை அரசியல் செய்ய இந்தி எதிர்ப்பை கருவியாக்கி கொண்டது. அதன் பின், தமிழர்களிடம் இந்தி எதிர்ப்பு தன்னியல்பாக எழுவதை கண்டவுடன் காமராசரை ஆதரிப்பது மூலம் தமிழுக்கு கேடு செய்ய நினைத்தது, இப்படி மாறி, மாறி நிலை பாடு எடுத்து தமிழுக்கு தீங்கு விளைவித்து, தன் திராவிட சகாக்களை கொண்டே அறுவடை செய்ய வித்திட்டார் ஈ.வெ.ரா.

 

 

திராவிடவாதிகள் தங்களுக்குள் சண்டை இட்டு கொள்வதும், பின் தேவைப்படும் பொழுது கூடிக்கொள்வதும் தமிழனை ஏமாற்றும் சூட்சும அரசியலாகும்.

 

 

இறை நம்பிக்கை உள்ள தமிழ் அடிமைகள் அன்று வடுக பிராமணனை (சங்கராச்சாரியாரை) பல்லக்கில் தூக்கினால், இறை மறுப்புள்ள தமிழ் அடிமைகள் வடுக கன்னடனுக்கு (ஈ.வெ.ரா.) பல்லக்கு தூக்கினர். இன்றோ வடுக யாதவனுக்கு (கீ.வீரமணி) பல்லக்கு தூக்குகின்றனர்.

 

 

01/06/1954ல் வெளியான விடுதலை இதழில் ஈ.வெ.ரா., சொல்லுவது - நீ ஒரு கன்னடியன், எப்படி தமிழனுக்கு தலைவனாக இருக்கலாம் என்று என்னை கேட்கிறார்கள். தமிழன் எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா என்றேன் என்கிறார்.

 

 

03/03/1965ல் விடுதலை இதழில் தலையங்கத்தில், இந்தி விசயத்தில் நீதானே எதிர்ப்பை உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகிவிட்டாயே என்று பலவாராக எனக்கு வசவு கடிதம் எழுதி வருகிறார்கள். தமிழ் கெட்டு விடுமே என்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவுமே இல்லை ! புலவர்களே தமிழை கெடுத்துவிட்டார்கள். காமராசர் ஆட்சி அவசியமா அல்லது இந்தி ஒழிய வெண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால், காமராசர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாக சொல்லுவேன் என்கிறார்.

 

 

தமிழ் என்றுமே கெட்டதில்லை ! ஆனால் விஜய நகர ஆட்சியில் தமிழ் புலவர்கள் கெட்டனர். மூவேந்தர்கள் ஆட்சியிலும், களப்பிரர்கள் ஆட்சியிலும் தமிழ் புலவர்கள் போற்றப்பட்டனர். இதனால் வளமான, மக்களுக்கான அறம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டன. பிராமணியம் அரச தலைமையில் ஒட்டிக் கொண்ட பின்பும், மொகலாயர் ஆட்சியிலும், வடுக விஜய நகர ஆட்சியிலும் தான் தமிழ் புலவர்கள் அரசு ஆதரவின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். வயிறு வளர்க்க வடுக மன்னர்களையும், செல்வந்தர்களையும் போற்றிப் பாடி, பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு கெட்டனர். அது இன்றுவரை தொடர்கிறது. வடுக தலைமையை போற்றி பாடினால் மட்டுமே, வறுமை இன்றி செழிப்பாக வாழ முடிகிறது.

 

 

தமிழ், தமிழர், தமிழ் நாடு, தமிழ் அரசு என்று கூற கூடாதென்றும் திராவிடம், திராவிடர் திராவிட நாடு, திராவிட அரசு என்று தான் சொல்ல வேண்டும் என்றும், தமிழை முதன்மை படுத்துவோர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்றும் பேசி வந்தார்.

 

 

கேரளத்திலோ, ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ சென்று அவர்கள் மொழி, தேசியம் குறித்து அம்மக்களை பார்த்து பித்தலாட்டக் காரர்கள் என்று கூறினால் சும்மா விடுவார்களா ! அல்லது ஈ.வெ.ரா., அங்கு சென்று இப்படி பேச முடியுமா ! அல்லது அவரின் இன்றைய சகாக்கள் தான், அந்த தேசங்களில் சென்று பேசிவிட்டு உயிரோடு திரும்பி விடுவார்களா ! இவர்களின் கால்களில் விழுந்து கிடக்கும் தமிழர்களில் சில திராவிட அடிமைகள் தங்களை நான் தமிழன் ஆனால் திராவிடன் என கிறுக்கன்களை போல் பேசி திரிகிறார்கள்.

 

 

திராவிடனென்றால் தமிழனின் மண், வளம், செல்வம், உழைப்பு, அரசியல் அனைத்தையும் திருடிக்கொண்ட திருடன் என்று அர்த்தம் !

 

 

தங்கள் மீது சுமத்தப்பட்ட உண்மையான இழிச்சொல்லை தான் மு.கருணாநிதி இந்து என்றால் திருடன் என்று எழுதினார்.

 

 

வேலிக்கு ஓணான் சாட்சி ! ஓணானுக்கு வேலி சாட்சி ! நமக்கு இரண்டும் ஒன்று தான் !

 

 

அதனால் தான் நாம் தமிழர்கள் யாரும் இந்து என்றோ, திராவிடன் என்றோ சொல்ல வேண்டாம் என்கிறோம்.

 

 

ஆரியத்தால் இந்துவாக்கப் பட்டோம் ! வடுகத்தால் திராவிடர் ஆக்கப்பட்டோம் !

 

 

இனி தமிழன் தமிழனாகவே வாழ்வோம் !

 

 

வடுகத்தின் வல்லாதிக்க திமிர் ! என்ற கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2019/02/blog-post.html

 

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).