திராவிடத்தின் குறியீடு ஈ.வெ.ரா !

 

திராவிடத்தின் குறியீடு ஈ.வெ.ரா !
இன்று ஈ.வெ.ரா.வின் பிறந்த நாள். தமிழர்களை திராவிடத்தால் வீழ்த்தும் அரசியலைக் கொண்ட ஒரு வடுக கன்னட திராவிட மகான் பிறந்த நாள்.

 

வரலாற்றில் தமிழர்கள் தன் ஆன்மீக கருத்துருவாக்கத்தையும், தன் இன அடையாளத்தையும் வடுகத்திடம் இழந்து நிற்க்கிறார்கள். ஆரிய வடுக கன்னட வைதீக பிராமணீயத்தின் சூழ்ச்சியால் தனக்கான ஆன்மீக அடையாளத்தை தொலைத்து இந்துவாக அடையாளப் படுத்தபட்ட தமிழன், அதே வடுக அதிகார வர்க்கத்திடம் திராவிடன் என்னும் போலி அடையாள முகவரியால் ஏமாந்து வாழ்கிறான்.

 

தென் இந்தியாவில் மற்ற தேசிய இனங்களுக்கு இல்லாத சிக்கல் தமிழக மண்ணில் விளைந்தது. வேங்கடத்திற்கு தெற்கே தமிழ் மன்னர்களின் பலவீனத்தை சாதகமாக்கி ஆட்சி அதிகாரத்தை கைப் பற்றிய வடுகர்களின் ஆட்சி, அவர்களுக்கு பின்னால் பிரிட்டிஷ் ஆட்சியின் அடிவருடியாகி தொடர்ந்து இன்றுவரை அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. திராவிடதேசியம் என்னும் புனையப்பட்ட கருத்தியல் இங்கு தமிழர்களின் தலை மேல் ஏறி மதியை மயக்கமுற செய்து விட்டது. வடுக கன்னட மலையாளிகள் போல் சாதி இருப்பினும் மொழி, இனம் என்ற வகையில் தேசியமாய் அவர்கள் ஒன்றிணைவது போல் தமிழனும் இணைந்துவிட்டால், வடுகர்களின் அதிகாரம் தமிழகத்தில் அசைக்க பட்டு விடும் என்பதாலேயே திராவிடக் கருத்தியல் தமிழர்களிடம் திணிக்கப் பட்டது. இதை ஆரம்பத்திலேயே எதிர்த்தவர்கள் தமிழ் பார்ப்பனர்களே !! எனவே தான் பார்ப்பன எதிர்ப்பை மையப்படுத்தி தமிழர்களை திராவிட மாய வலைக்குள் வீழ்த்தினார்கள். இதில் ஈ.வெ.ரா.வுக்குத்தான் முக்கிய பங்கிருக்கிறது.

 

இதில் தமிழர்களை சாதி சாதியாய் பிளவுபடுத்தி முரண்பாடுகளை வளர்த்துவிட்டால் தமிழர்கள் ஒன்றிணைவது சாத்தியமற்றதாகிவிடும் என்பதுதான் வடுக அதிகார வர்க்கத்தின் அடிப்படை அரசியல் சித்தாந்தமாகும்.

 

தமிழ் தேசியம் பேசுபவனை பார்த்து சாதியை ஒழித்துவிட்டாயா !? அதை ஒழித்துவிட்டு தமிழ் தேசியம் பேசு என்று கூறுபவர்கள், சாதி சமயமற்ற திராவிட தேசியம் படைக்க அரசியல் அதிகாரம் படைத்தவர்களை பார்த்து சாதியை ஒழித்துவிட்டாயா !? என்று கேட்பதில்லை.

 

திராவிடத்தில் தாழ்த்தப் பட்டவனுக்கு பங்களிப்பு இருந்திருக்குமாயின், அவன் இந்தியத்தின் தலித் அரசியலுக்குள் வீழ்ந்து போய்யிருக்கமாட்டான். எந்த தமிழ் தேசியவாதியாவது திராவிடம் வேண்டாம் ஆனால் ஐயா ஈ.வெ.ரா. வேண்டும் என்பானாகில் அவன் மீண்டும் சறுக்கி திராவிட கடலில் மூழ்கிப் போவான் என்பது உறுதி.

 

ஈ.வெ.ரா. ஒரு மனிதன் அல்ல திராவிடத்தின் பெயரால் தமிழனை ஆளுமை செய்யும் ஒரு சூத்திரம். நம்மை மடையர்களாக்கி அதிகாரம் செய்யும் ஒரு ஆதிக்க அரசியலின் குறியீடு ! திராவிடம் வேண்டாம் என்றால் அதன் மூலவர், திராவிடக் குறியீடு, திராவிட தத்துவவாதி ஈ.வெ.ரா.வும் வேண்டாம் என்கின்ற நிலைப்பாட்டை, சமரசத்திற்கு இடமின்றி உறுதியாக எடுக்கும் நிலைபாடே, தமிழ் தேசியத்தின் சரியான வழிமுறையாகும். அவ்வாறு இல்லையெனில் திராவிட அரசியலே தமிழனிடம் கோலோச்சும்.

 

          ஒழியட்டும் திராவிடம் ! வெல்லட்டும் தமிழியம் !!   ஈ.வெ.ரா.வை போற்றுவது தீமையே கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் ! http://historicalorganisationoftamils.blogspot.com/2018/03/blog-post.html

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக