தமிழர்களின் தேசிய இன எழுச்சிப் போராட்டம் !!

 

தமிழர்களின் தேசிய இன எழுச்சிப் போராட்டம் !!

 


 

தமிழக இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்திற்கு எங்களின் வாழ்த்துக்களை காணிக்கையாக்குகிறோம்.

 

 

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்டு, புறந்தள்ளப்பட்டுள்ளது தனிச் சிறப்பு !!

 

 

தமிழர்களின் முந்தைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அறுவடை செய்த திராவிடவாதிகள் சுமார் ஐம்பது ஆண்டுகளில் தமிழர்களை பல்வேறு வகையில் துன்பம் தந்து நம்மை படுகுழியில் தள்ளினார்கள். இருப்பினும் நாம் மிகப் புரிதலுடன் எழுச்சிப் பெற்றுள்ளோம். இதை அறுவடை செய்ய இயலவில்லையே என்ற ஏக்கத்தில், போராடும் தமிழர்களின் தலைமை பிற்ப்போக்கு சக்திகளாக இருக்கலாம் என்றும், அல்லது ஆதிக்க சாதியாக இருக்கலாம் என்றும், இதற்கொரு அரசியல் தலைமை வேண்டுமென்றெல்லாம் கூறி குழப்பம் செய்து வருகிறார்கள். இருப்பினும் நம் இளைஞர்களிடம் எடுபடாமல் போனது. இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் பகையைதூண்ட எண்ணிய இந்துத்துவ சக்திகள் மிரண்டு போனார்கள். தமிழன் இந்து அல்ல ! உலகிலேயே மதமற்ற தேசிய இனம் தமிழ் தேசிய இனமே ! தமிழனை பிரித்து கையாண்ட அனைவரும் தோல்வியுற்றனர்.

 

 

 

இந்த எழுச்சி ஈழ தமிழ் மக்கள் படு கொலையின் போது ஏற்ப்பட்டுவிட கூடாது என்பதற்காகவே தான் தி.மு.க. அரசு ஈழப்போர்  முடியும்  வரை  நம்  கண்களை கட்டியது.  நம்  இளைஞர்கள்  ஓடிவந்த ரயிலை எதிர் நின்று நிறுத்தினர். இன்று தி.மு.க. வின் ரயில் மறியலாம். தமிழகத்தில் அனைத்து ரயில்களும் நம் தமிழ் இளைஞர்களால் நிறுத்தப் பட்ட பிறகு எந்த ரயிலை நிறுத்த இவர்கள் புறப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. முன்னர் ரயிலே வராத தண்டவாளத்தில் அப்பன் தலைவைத்து படுத்தார் இன்று ரயிலே ஓடாத போது ஓடாத ரயிலை மறிக்கிறார் மகன். எத்தனை நாளைக்குத்தான் தமிழனுடைய குருதியையும் உழைப்பையும் அறுவடை செய்து கோடிகளில் புரளுவீர்கள். அன்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர்களை காலிகள் (காலி பயளுக) என்றார் ஈ.வெ.ரா.நாயக்கர். இன்று தமிழனின் உரிமை மீட்சி போராட்டத்தில் தமிழர்களை பொறுக்கிகள் என்கிறார் ஆரிய இந்துத்துவ சுப்பிரமணிய சாமி. தமிழன் மீதான எதிர் களத்தில் ஆரியனும் திராவிடனும் ஒன்றே ! ஆரியக் கட்சிகளோ அல்லது திராவிடக் கட்சிகளோ இனி தனியே நின்று வேடிக்கை பாருங்கள். இளைஞர்கள் தங்களுக்கான தலைமையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். வீர மரபில் வந்த தமினின் தேசிய இன எழுச்சியின் ஆற்றல் என்னவென்பது புரியும்.

 

தமிழ் மொழி காப்போம் ! தமிழ் இனம் காப்போம் !! தமிழ் மண் காப்போம் !!!

 

#AMEND_PCA #WE_WANT_JALLIKATTU #BANPETA #ALANGANALLUR #JALLIKATTU

 

  

ஆரிய விழாக்கள் நமக்கெதற்கு !!


ஆரிய விழாக்கள் நமக்கெதற்கு !!

 

 

அனைத்து ஆரிய விழாக்களையும் புறந்தள்ளுங்கள். குறிப்பாக தீபாவளி, வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, கிருஷ்ண ஜெயந்தி போன்றவை ஆரியம் நம் அறியாமையை பயன்படுத்தி நம் பண்பாட்டில் உட்புகுத்திய விழாக்கள் ஆகும். இது தவிர பிற தேசிய இன விழாக்களான ஓணம், ஹோலி போன்ற ஆரிய கலப்பு விழாக்களையும் புறந்தள்ளுங்கள்.

 

ஜல்லிக்கட்டு காட்டு மிராண்டிகளின் விழா என்றால் ஆரியர்களின் விழாக்களும், பிற தேசிய இனங்களின் விழாக்களும் பகுத்தறிவுக்கு உகந்த விழாக்களா ?! அசிங்கமும் ஆபாசமும் முட்டாள் தனமும் நிரைந்த விழாக்கள் தானே ஆரிய விழாக்கள் ?!

 

நம் மீது தொடுக்கப்படும் பண்பாட்டு தாக்குதலை முறியடிக்க எதிர் பண்பாட்டுத்தாக்குதலை நாமும் தொடுப்போம்.

 

ஆரிய விழாக்களை கொண்டாடுவதிலிருந்து முற்றாக நாமும் நம் குடும்பமும் சேர்ந்து புறந்தள்ளுவோம்.

 

பண்பாட்டுத் தாக்குதலை பண்பாட்டு எதிர் தாக்குதல் மூலம் முறியடிப்போம்.

 

நம் தமிழ் இன விழாவையும், நம் குலதெய்வ வழிபாட்டு முறையையும் கொண்டாடி மகிழ்வோம்.

 

பல்லாயிரம் ஆண்டுகளாக பிற தேசிய இனங்கள் போல் கலப்பு தேசிய இனமாக மாற்றிட முயன்று தோல்வியை தழுவியதால், பண்பாட்டுத்திணிப்பை செய்து ஆரியம் ஓரளவு வெற்றிக் கண்டுவிட்டதால், சிறிது, சிறிதாக தமிழ் இனத்தின் பண்பாட்டை சிதைத்து அழித்து விடும் வேலையில் இறங்கியுள்ளது. எனவே நம் இன விழாக்கள் தவிர்த்து, ஆரிய விழாக்களை புறக்கணிப்போம்.

 

நாம் எடுக்க வேண்டிய ஆயுதம் எது என்பதை நம் எதிரி தான் தீர்மாணிக்கிறான் என்பதை நினைவில் கொண்டு ஆரியனின் பண்டிகைகள் தமிழகத்தைவிட்டு ஒழிக என்று பொங்கிவரும் பொங்கல் மீது சபதமிட்டு கூறுங்கள்.

 

தமிழனின் விழாக்களையும் சர்வதேச விழாக்களையும் கொண்டாடி மகிழ்வோம் ! ஏனெனில் நம் பொங்கல் விழா சர்வ தேசியம் முழுவதும் கொண்டாடப் படுகிறது, மதிக்கப்படுகிறது இந்தியாவைத் தவிர……!

 

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

#we_do_jallikattu #ban_peta #pongal #jallikattu #why_we_need_aariyans_festivals #avoid_aariyans_festivals #deepavali #holly #oonam

 

பொங்கலோ பொங்கல்:-

 

பொங்கலோ பொங்கல்:-

 


 

தமிழனின் இயற்கை வளங்களை அழிப்பது, பண்பாட்டை சிதைப்பது, அரசியலை மாற்றி அமைப்பது என தொடர்ந்து தமிழர்களின் மீது இந்திய தேசிய அரசியல் தாக்குதல் தொடுத்து வருகிறது. தமிழர்களாகிய நாம் யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !! என்கின்ற உணர்வில் இந்தியாவில் கொண்டாடப்படும் அனைத்து இன, மத விழாக்களையும் ஆர்வமுடன் கொண்டாடி வருகிறோம். இனி ஒரு போதும் ஆரிய விழாக்களை தமிழகத்தில் கொண்டாடுவதில்லை என இந்த தை திங்களில் உறுதி மொழியேற்ப்போம். இந்த ஆரியக் கூட்டம் நீதி, நிர்வாகம், அரசு, பண்பாடு என அனைத்துத் துறைகளுக்குள்ளும் தனது கால்களை பரப்பிவைத்துக்கொண்டு, எமக்கு அதிகாரமில்லை எல்லாம் அவர்கள் தான் என்பது போல ஒருவரை ஒருவர் பழிப் போட்டு நம்மை பலி தீர்த்துக்கொள்கிறார்கள். நம்மை இந்துக்கள் ஆக்கும் முயற்சியில் தொடர்ந்து தோல்வியையே கண்டு வருகிறார்கள். நம் கடவுள்களை களவாடிக்கொண்டு இந்துத்துவம் என்ற வருணாசிரம அரசியலை நிலைநிறுத்த முயற்சித்து ஒட்டு மொத்த இந்தியாவில் தமிழர்களிடம் மட்டும் தான் தோல்விகண்டு வருகிறார்கள்.

 

உலகமயமாக்கல், சர்வதேசியம் என்ற வளையத்துக்குள் கொண்டு சென்று விட்டு, போலி சுதேசி பேசி வருகிறார்கள். சிறு தொழில், குறுந் தொழில், கைத் தொழில், கிராமியத் தொழில், விவசாயம் அது சார்ந்த அனைத்தையும் படுகுழியில் தள்ளிவிட்டு, பெரு முதலாளிகளையும், கார்ப்ரேட் கம்பெனிகளையும் வளர்த்துவிட்டுக் கொண்டு நம்மிடம் போலி சுதேசி பேசிவருகிறார்கள்.

 

இதில் திராவிடத்தை கொள்கையாகக் கொண்ட கட்சியும் ஆரியத்தோடு கூட்டுச்சேர்ந்து கொண்டு தமிழர்களை வஞ்சித்து விட்டார்கள். அந்த துன்பத்தைத் தான் நாம் இன்று அனுபவித்து வருகின்றோம். ஆரியத்தோடு மல்லுக்கட்டும் காலம் நெருங்கிவிட்டது.

 

நாம் நாமாக (தமிழன் தமிழனாக) வாழ்வோம். நமக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்துவிட்டு நம் இனம் காக்க, நம் பண்பாடு காக்க முன்னிற்ப்போம். நம் வீட்டு பிள்ளைகளுடன் (காளைகளுடன்) நாம் ஓடி விளையாட எவனோ ஒருவன் தடை சொல்வதை ஏற்க்க இயளாது.

 

“இனி நாம் இந்தியர்கள் அல்ல ! தமிழர்களே !! என்று முழங்குவோம்” 

 

நம் மீதான தடைகளை தாண்டி நம் காளைகளுடன் விளையாடுவோம். இனி இந்தியன் அல்ல தமிழன் என்று முழங்குவோம் என் இன விழாவைத் தவிற ஆரிய விழாக்களை ஒரு போதும் கொண்டாட மாட்டோம் என பொங்கி வரும் பொங்கல் மீது சபதமிட்டு உறுதி மொழியேற்ப்போம்.

 

பொங்கட்டும் பொங்கல் தமிழன் உணர்வுபெற !

பொங்கட்டும் பொங்கல் தமிழன் எழுச்சி பெற !!

பொங்கட்டும் பொங்கல் தமிழன் உரிமை பெற !!!

 

“பொங்கலோ பொங்கல்”.

 

#we_do_jallikattu #ban_peta #pongal #jallikattu