தமிழின துரோகிகள் பார்ப்பனர்களா ?? திராவிடவாதிகளா ??

 

தமிழின துரோகிகள் பார்ப்பனர்களா ??
திராவிடவாதிகளா ??


                                                          பார்ப்பனர்கள் தமிழ் தேசிய கருத்தியலை விட்டு இந்திய தேசியம் மற்றும் சர்வ தேசியம் என்கின்ற நிலையை அடைந்து விட்டார்கள் அவர்கள் மீண்டும் தமிழ் தேசிய கருத்தியலை நோக்கி திரும்ப மாட்டார்கள் என்றெல்லாம் கருத்து பரப்பபடுகிறது.


                                                          
தமிழ் பார்ப்பனர்கள் பிராமணர்களோடு கருத்தியலாய் ஒன்றிணைந்தார்கள் இருப்பினும் தமிழ் பார்ப்பனர்களும், பிராமணர்களும் இனத்தால், மொழியால், பண்பாட்டால் வேறுபட்டவர்கள் எனவே அவர்களுக்குள் எந்த ஒரு இரத்த கலப்பும் நடந்தேறவில்லை என்பதே உண்மை. தமிழனின் பூர்வீக பூமி திராவிட பூமியாய் மாறிய பின் தமிழர்கள் அனைவரும் திராவிட விசம் அருந்தி திராவிடர்களின் கால்களில் தஞ்சம் அடைந்த பின் பார்ப்பானுக்கு இந்திய தேசியத்தை விட்டால் வேறு வழியேது. சர்வதேசியம் என்பது ஏகாதிபத்திய போட்டி உச்சத்தை தொட பயணிக்கும் காலத்தில் சர்வதேசியத்தை புறந்தள்ளி இனி இந்த பூமியில் ஒரு புழு, பூச்சி கூட வாழமுடியாது. இதில் தமிழ் பார்ப்பான் சர்வதேசியம் பற்றி சிந்திப்பது ஒன்றும் அதிசயம் அல்ல. உலகமே சர்வ தேசியம் நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது இருப்பினும் உலகில் எந்த ஒரு தேசிய இனமும் தன் மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரத்தை பிற தேசிய இனத்தவரிடம் பறிகொடுத்துவிட்டு பயணிக்கவில்லை. பெரும்பான்மை தேசிய இனத்தை சிறுபான்மை தேசிய இனம் ஆளும் கொடுமை தமிழகத்தை தவிர வேறு எங்கும் இல்லை.

                                                       
தேசிய இன விடுதலைக்கான ஜனநாயக போராட்டத்தையும், வர்க்க போராட்டத்தையும் ஒரே நேரத்தில் நடத்திவிட முடியாது. இனி தேசிய இன ஒடுக்குதலை கூட சர்வ தேசிய ஒத்துழைப்பின்றி போராடி வெற்றி பெற இயலாது. இதற்கு ஈழப் போராட்டமே நமக்கு உதாரணமாய் அமைகிறது. பலதேசியங்களை உள்ளடக்கி ஒரு நாடு என்ற வரையறைக்குள் கொண்டு வந்த ஆளும் வர்க்கம் தேசிய இனங்களுக்குள் ஒற்றுமை இன்மையையும், பகையையும் வளர்த்து கடிவாளத்தை தன் கையில் வத்து கொள்கிறது. எந்த முதலாளியும் தன் சுரண்டும் தளத்தில் ஒரு சதுர அடியைக் கூட இழக்க விரும்ப மாட்டான் ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு நாடு பல தேசியங்களின் கூட்டாய் இருந்தால் என்ன !! தனித் தனி நாடாய் இருந்தால் என்ன !! அவர்களுக்கு தேவை திறந்த வெளி சந்தை, உலக மயமாக்கல் மட்டுமே.

                                                    
போலி கம்யுனிஸ்ட்டுகள் கூறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பூச்சாண்டி யெல்லாம் நமக்கு இப்பொழுது தேவை இல்லாதது. இந்தியக் கட்டமைப்பில் தமிழன் மீது ஆரிய மயமாக்களின் தாக்கமும், திராவிடக் கருத்தியலும், அதன் அரசியல் அதிகாரத்தின் தாக்கமும் நம் மண், இனம், மொழி, பண்பாடு அனைத்தையும் இழக்கச்செய்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு தேசிய இன எழுச்சி தேவைப் படுகிறது. நம் வரலாற்றில் நம் முன்னோர்கள் அறியாமையால் செய்த தவறுகளாலும், வரலாற்று நிர்பந்தங்களாலும் சிதைந்து போன தமிழர்களை ஓர் ஒத்த கருத்தியலுக்கு கொணர்வதே நம் நோக்கம். உலகில் எந்த மூலையில் தமிழ் பார்ப்பனர் வாழ்ந்தாலும் நம் மொழிக்கு திராவிட வாதிகளால் தீங்கு நேரும் போதெல்லாம் எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் அவர்களாகவே உள்ளனர். இங்கு பார்ப்பனர் மட்டு அல்ல !! பிற்ப்படுத்தப் பட்ட சாதிகளும், தாழ்த்தப் பட்ட சாதிகளும் கூட இந்திய தேசியவாதம் பேசாமல் இல்லை. அது தவிர்க்க முடியாதது. தமிழ் பார்ப்பனர்கள் தமிழ் தேசிய இன ஓர்மைக்குள் வந்தாலும், வராவிட்டாலும் உண்மையில் அவர்களும் தமிழர்கள் என்பதை நாம் சொல்லத் துணியாமல் இருக்க முடியாது.

                                                    
தமிழ் பார்ப்பனர்களில் சிலர் தாங்கள் தமிழர்கள் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். தமிழர் தென்னாட்டு பழங்குடி மக்களே என சான்று காட்டி மெய்பித்த பி.டி.சீனிவாச ஐயங்கார், தமிழரின் தென்னாட்டு பழங்குடி தன்மையும், தமிழனின் பெருமையையும் தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டிய சேச ஐயங்கார், தமிழரே உலகின் முதல் மாந்தன், அவனே இந்திய முழுவதும் பரவி வாழ்ந்தான் என நிறுவிய வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், தமிழ் மொழியும், வடமொழியும் வெவ்வேறென பகுத்துக் காட்டி தனி தமிழுக்கு வித்திட்ட பரிதிமாற் கலைஞர் என தன் பெயரையே மாற்றிக் கொண்ட சூரிய நாராயண சாஸ்த்திரியார், தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் பிராகிரத மொழியிலானவை என்பதால் அது வட மொழி சார்புடையது என வட மொழி சார்பாளர்கள் கூறிவந்த நிலையில் அவைகளில் பெரும்பாண்மை தமிழ் கல்வெட்டுகள் என்ற உண்மையை நிருபித்த கே.வி.சுப்பிரமனியன் ஐயர், பண்டைய தமிழ் நூற் சுவடிகள் பலவற்றையும் நீரில் வீசப்பட்டதும், கரையானால் அரிக்கப்பட்டதும், தீயிட்டு கொழுத்தப்பட்டு, அரைகுறையாக பொசுக்கப்பட்டு கிடந்த ஓலைச் சுவடிகளையெல்லாம் போய் ஒவ்வொன்றாக தேடி எடுத்துவந்தும், வீடு வீடாக, தெருத்தெருவாக அலைந்து அவற்றையெல்லாம் கொண்டு வந்து சேர்த்து அவற்றை ஆராய்ந்து நமக்கு அரும் பெரும் இலக்கிய செல்வங்களை நூல் வடிவில் தந்த பேராசிரியர் .வெ.சாமிநாத ஐயர், தமிழ் தேசிய ஓர்மைக்கு பள்ளு பாடிய சி.சுப்பிரமனிய பாரதியார் என தமிழ் தேசிய ஓர்மைக்கு வித்திட்டவர்கள் பார்ப்பனர்களே.

                                                         
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலைய நுழைவு போராட்டத்தை நடத்தி தாழ்த்தப் பட்டவர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றவர். வைத்தியநாத ஐயரே அன்றி ! திராவிடவாதிகள் அல்ல.
கேரளாவில் வைக்கத்தில் ஆலைய நுழைவு போராட்டத்தில் (காங்கிரஸு நடத்தியது) பத்தோடு பதினொன்றாக கலந்து கொண்ட .வெ.ரா. தமிழகத்தில் வைக்கம் வீரர் என புகழப்பட்டார் காரணம் கன்னட தெலுங்கர் அல்லவா ! கேரளாவில் தாழ்த்தப் பட்டவர்களுக்காக போராடியவர் தமிழகத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்காக செய்தது ஒன்று இல்லை தாழ்த்தப் பட்டவர்களை எப்படி எல்லாம் இழிவு படுத்தினார் என்பதை பின் வரும் பதிவுகளில் பார்ப்போம். தமிழன் எவ்வளவு பெரிய காரியம் செய்தாலும் அதை புகழ்வார் யாரும் இல்லை இரயிலே வராத தண்டவாளத்தில் தலைவைத்து சிறிது நேரம் படுத்துவிட்டு வந்த கருணாநிதியை கல்லக்குடி கொண்ட கருணாநிதி என்று புகழுவார்கள் காரணம் தெலுங்கன். ஈழ தமிழர் படுகொலையின் போது கடற்க்கரையில் காற்றுவாங்க போன கருணாநிதியை தான் யாரும் புகழ்ச்சி பெயர் வைக்கவில்லை. நாம் வேண்டுமானால் ஒரு பெயர்வைப்போம். இலட்சம் தமிழர் உயிர் குடித்து பரலோகம் சேர காரணமாய் இருந்த கருணாநிதியை இனி ____________________ என்று அலைப்போம் (இதை படிக்கும் தமிழ்ர் நல ஆர்வாளர்கள் ஒரு நல்ல பெயர் சொன்னால் அந்த வெற்றிடத்தை நிரப்பலாம் சொல்லுங்கள் தமிழ் சகோதரர்களே)
இப்படி பார்ப்பனர்கள் தமிழ் தேசியத்தை மீட்டு விட்டால் திராவிடர்கள் தன் ஆளுமையை இழக்க வேண்டி வரும் எனக் கருதியே .வெ.ரா. பார்ப்பான் தமிழ் இன எதிரி என்று கூற தலைப்பட்டார். தமிழர்களும் பார்ப்பானுக்கும், பிராமணனுக்குமான வித்தியாசம் அறியாமலும் பார்ப்பனர் மீதிருந்த பொறாமையாலும் .வெ.ரா. வின் பின் அணி திரண்டு தன் சொந்த இனத்தை படு குழியில் தள்ளினர்.

                                                       
கடந்த காலத்தில் நம் முன்னோர்களால் நடந்த வரலாற்றுத் தவறுகளுக்கு இன்றைய தலைமுறை எப்படி பொறுப்பாவார்கள் ! நம் மூவேந்தர்களும் மதப் பித்துக் கொண்டு, வைதீக பிராமணியத்திடம் ஏமாந்து போனதால் ஒட்டு மொத்த தமிழினமும் பிளவு பட்டு போனது. என்பாட்டன், முப்பாட்டன் செய்த தீண்டாமை என்னும் பிழையை நீக்கி இனம் என்னும் ஒருமைபாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம், வருங்காலத்தில் சாதியற்ற ஒரு தேசிய இனமாக மாற்ற முடியும். இதை சாதியத் தலைவர்களும், திராவிடவாதிகளும் விரும்புவதில்லை காரணாம் சாதி தலைவர்களுக்கு சாதி இல்லாமல் போனால் அரசியல் தலைமை பறிபோய்விடும். திராவிடர்களுக்கு தமிழனிடம் சாதி இல்லாமல் போனால் அதிகாரம் பறிபோய் விடும் எனவே, சாதி தலைவர்களும், திராவிடர்களும், திராவிடவாதிகளும் தமிழ் தேசிய கருதியலை எதிர்ப்பதுடன் அது தமிழர்களிடயே செல்வாக்கு செலுத்தா வண்ணம் பல்வேறு இடையூறுகளும், தவறான பிரச்சாரங்களையும் செய்து வருகிறார்கள். இந்து மதம் தமிழகத்தில் பலமாக கால் ஊன்ற காரணமான திராவிடர்களும் அவர்களின் இயக்கங்களிலும், கட்சிகளிலும் குப்பை கூட்டும் நம் தமிழ் இன திராவிடவாதிகளும் நம்மை பார்த்து இந்து துவ வாதிகள் என்றும் வேறு சிலர் கிறித்துவ மிசினரிகளின் ஏஜெண்டுகள் என்றும் நம்மை தூற்றுகிறார்கள்.
திராவிடவாதிகளிடம் ஒன்றை கேட்கிறேன் :- திராவிட தலைவர்களில் தமிழர்களுக்கான ஒரு நேர்மையான ஆள் ஒருவனைக் காட்டுங்கள் பார்ப்போம் ! .வெ.ரா என்பீர்கள். அவர் யோக்கியதை ஊர் அறிந்த விசயம். ஊருக்கு தெரியாவிட்டால் நாங்கள் கிழிப்போம் தமிழன் கட்டும் தாலியைக் கூட கிண்டல் பேசி கேவலமாகப் பேசி தமிழச்சிகளின் தாலியைக் கூட அத்து தமிழன் .வெ.ரா. வின் எடைக்கு எடை தங்கம் கொடுக்க அதையும் கூட வாங்கி சொத்து சேர்த்தவர் அல்லவா ! அச்சொத்துகளை எல்லாம் வீரமணி யாதவ் (திராவிடன்) கையில் கொடுக்க அதைவாங்கி அவர் ஆட்டம் போட தமிழர்களில் திராவிடத்தை நம்பும் எத்தனையோ குடும்பங்களை இளித்தவாயர்களாக ஆக்கிய வீரமணியை நேர்மையானவர் என்று கூறலாமா அல்லது தமிழர் விடுதலை பேசி தமிழ் தமிழர் இயக்கங்கண்டு ஐயா .வெ,ரா மீது மதிப்பும் பாசமும் வைத்திருந்து இறுதியில் வழுக்கி கருணாநிதியின் காலில் விழுந்த சு.வீ.யை நேர்மையானவர் என்று கூறலாமா அல்லது சர்க்காரியா கமிசன் முதல் 2ஜி வரை ஊழ்ல் புரிந்த, இன்னும் ஊழல் புரிய தள்ளுவண்டியில் காத்திருக்கும் கருணாநிதியை நேர்மையானவர் என்று கூறலாமா !!

                                                        
இந்த யோக்கியர்களைவிட பார்ப்பான் எந்தவகையில் விசம் உள்ளவன் என்று இவர்கள் கூறுவார்கள். பொய், பித்தலாட்டம், ஏமாற்றும் அரசியல், சுரண்டுதல், ஊழல் புரிதல், சாதி வெறியை தூண்டுதல், சமய மோதலை ஊக்குவித்தல், அடிக்கடி நிறம் மாறுதல் போன்ற கேவலங்களை தவிர இவர்களிடம் தமிழர்கள் கண்ட யோக்கியதை தான் என்ன ?!

                                                        
இவர்களை விட தமிழுக்காகவும் தமிழ் மொழிக்காகவும், இனத்திற்காகவும் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் பாடுபட்ட தமிழ் பார்ப்பான் எந்த விதத்தில் அயோக்கியன் ?!
பார்ப்பான் இல்லை என்றால் தமிழ் என்றோ அழிந்து போய் இருக்கும் அல்லது திராவிடர்கள் அழித்திருப்பார்கள். பார்ப்பனர் தமிழ் தேசியத்திற்க்குள் வந்தாலும், வராவிட்டாலும் பார்ப்பனர் தமிழர் என்பதை சொல்ல நாம் தயக்கம் காட்ட வேண்டியதில்லை.

                          ”
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

 

திராவிடத்தின் குறியீடு .வெ.ரா ! கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2017/09/blog-post.html

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக