பார்ப்பான் தமிழன் !! பிராமணன் ஆரியன் !!


பார்ப்பான் தமிழன!! பிராமணன் ஆரியன்!!


                 

பார்ப்பான் பற்றியும், பிராமணன் பற்றியும் ஏற்கனவே எழுதிய பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். என்றாலும், நம் தமிழர்களிடம் திராவிட வாதிகளால் ஏற்படுத்தப் பட்ட குழப்பம் மீண்டும், மீண்டும் மேலெழுந்து சரியானதொரு பார்வையை செலுத்த முடியாமல் திணறச் செய்வதை காண்கிறோம். தமிழ் தேசிய அமைப்பின் தலைவர்களும் கூட பார்ப்பனருக்கும், பிராமணருக்குமான வித்யாசத்தையும், அது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர முடியாமல் குழப்பமான பதில் அளிப்பதும், அதைவைத்து திராவிடவாதிகள், தமிழ் தேசியவாதிகளை உருப்படாதவர்கள், சரியான கண்ணோட்டம் இல்லாதவர்கள், குழப்பம் விளைவிப்பவர்கள் என்றெல்லாம் மக்களிடம் கருத்துரை பரப்ப முயல்கின்றனர்.

                  
பார்ப்பான் என்பவன் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்து தன் சொந்த மொழியை மறந்து தமிழ் கற்று தமிழன் ஆனவன் அல்ல. பண்டைய காலத்தில் பார்ப்பான் ஆகும் தகுதி அனைத்து தொழில் பிரிவின் குடும்பத்திற்கும் உண்டு சங்க இலக்கியங்களில் பார்ப்பனன், அந்தணன், ஐயன் என்ற குறிப்புகளே உண்டு. பார்ப்பனன் தமிழன் என்பதற்கு இதுவே சான்றாகும்.

                   
தொழில் பிரிவினையை மாற்ற இயலாத சாதி பிரிவினையாக இறுக்கி கட்டப் படும் வரை குயவன் வீட்டுப் பிள்ளையும், தச்சன்வீட்டுப் பிள்ளையும் கூட பார்ப்பனராக, அந்தணராக, ஐயராக முடிந்தது. தமிழகத்திற்கு வெளியிலிருந்து வைதீக சமயத்தை போதிக்க வந்த வந்தேரி வடுக, கன்னட, மராட்டிய பிராமணர்களே தங்கள் பிழைப்புக்காக வரணாசிரமக் கோட்ப்பாட்டை நிலை நிறுத்தினர் அதை நிலை நிறுத்த இங்கே ஏற்க்கனவே  அரசு நிர்வாகியாகவும், அறிவு ஜீவியாகவும் வாழ்ந்த பார்ப்பனரை கீழ் இறக்கி விட்டு, பிராமணியம் வரணாசிரமத்தை நிறுவி விட முடியாது என்பதால், தமிழ் பார்ப்பனருக்கு தனக்கு நிகராக உயர் ஜாதி தகுதியும், மற்ற தொழில் பிரிவினரின் தொழிலுக்கு தக்கபடி சாதி படிநிலைகளையும் வகுத்தார்கள். அது என்றைக்கும் மாற்ற இயலா ஆளும் வர்க்க கோட்பாடாக இருக்க வழிவகை செய்தது. இருப்பினும் வடுக, கன்னட, மலையாளிகள் வாழும் பகுதியில், அதாவது ஆரியக் கலப்பு நடந்தேறிய பகுதியில் கூட ஓர் இன ஓர்மை ஏற்ப்பட்டது. ஆனால் அந்த இன ஓர்மை தமிழனிடம் இல்லை காரணம் வடுக, கன்னட, மராட்டிய, மலையாளம் என்கின்ற திராவிட முதலாளிகளும் அதன் மேட்டுக் குடிகளும் தமிழகத்தின் இயற்கை செல்வங்களை கொள்ளையிடவும், தமிழனின் உழைப்பை சுரண்டவும், அரசியல் பொருளாதார ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொள்ளவும், ஏற்கனவே இம் மண்ணில் ஆரிய பிராமணியம் வகுத்த சாதி பிரிவினையை முரண்பாடுகளாக்கி ஒருவரோடு ஒருவர் சண்டையிட செய்து தலைமையை தக்கவைத்துள்ளது. தொடர்ந்து இல்லாத, பொய்யான, மாயையான திராவிடக் கருத்தியலைக் கொண்டு தமிழன் ஓர்மையை சீர் குலைத்து தமிழர்களின் அடையாளத்தை திராவிடத்திற்குள் அடக்கிவைத்துள்ளது.

                  
பிராமணனுக்கும், பார்ப்பானுக்கும் யாதொரு இரத்தக் கலப்பும் இல்லை. திராவிடவாதிகளின் குற்றச்சாட்டாலும், இனத்திரிபுவாதத்தாலும், தமிழர்களின் விழிப்பற்ற, அக்கறையற்ற, பொறாமையாலும் இந்திய தேசியத்திற்க்குள் பிராமணனோடு கருத்தியலாய் இணைந்தார்கள். வருணாசிரமத்தை பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளும், தாழ்த்தப்பட்ட சாதிகளும் ஏற்றுக்கொண்டது போலவே பார்ப்பானும் ஏற்றுக்கொண்டான்.

                  
இனி தமிழை தாய் மொழியாகக் கொண்ட பார்ப்பானை மட்டும் பார்ப்பான் என்று சொல்லவும். வடுக, கன்னட, மராட்டிய பூசாரிகளை பிராமணர் என்று சொல்லுங்கள். இதை பிரித்துச் சொல்லி இதுவரை நாம் பழகவில்லை காரணம் .வெ.ரா. என்ற விசமி பார்ப்பான் நம் எதிரி என்று சொல்லி,சொல்லி திராவிட விச ஊசி மூலம் நம் இரத்தத்தில் விசத்தை கலந்துவிட்டாலும், எப்படியோ நம் முன்னோர்களான சிவ, மாலிய, இந்திர, வருண, கொற்றவையின் புண்ணியத்தாலும், அருளாலும் மீண்டும் தமிழனாய் உயிர் பெற்று எழுந்து வந்தோம். இருப்பினும் அந்த திராவிட விசத்தால் ஏற்ப்பட்ட பக்க விளைவு நம்மையும் அறியாமல் பார்ப்பான் எதிரி என்று ஆரிய பிராமணர்கள் செய்த அக்கிரமங்களையெல்லாம் பார்ப்பான் தலையில் ஏற்றி தமிழனை தமிழனே எதிரியாய் பார்க்கும் பக்கவாத நோய் அவ்வப்போது நம்மை வாட்டினாலும் சிறிது சிறிதாக நாம் நடைப் பயிற்சி எடுத்து மேற்ச்சொன்ன முழுமைப் பெற்ற திடகாத்திரமான தமிழனாக மாற முயற்சிக்க வேண்டும். இந்த திராவிடப் பன்னாடைகள் நாம் உயிர் பெற்று வந்தது பிடிக்காமல் நம் நடை பயிற்சியின் ஊடே பல தடைகளை ஏற்ப்படுத்த முயற்சிப்பதால் அத்தடைகளை எல்லாம் உடைத்து தைரியத்துடனும், துணிவுடனும் நடந்து வெற்றி அடைவோம்.

                 
தமிழ் தேசியவாதிகளாகிய நாம், திராவிடக் கருத்தியலை நாங்கள் ஏற்ப்பதில்லை. ஆனால் ஐயா பெரியார் .வெ.ரா. அவர்களை மதிக்கிறோம் என்று சொல்வீர்களானால், பரமபதத்தில் ஒவ்வொருக்கட்டமாக கவனத்துடன் தாண்டி இறுதியில் வெற்றியடையும் நேரம் கவனக்குறைவால் பெரிய விசப்பாம்பு தீண்டி சூனியத்திற்க்கு(ZERO) வந்து சேர்வது போல் நாம் உருவாக்கி வரும் அனைத்து தமிழ் தேசிய சிந்தனைகளும் தவிடுபொடியாகி திராவிடனின் பாதங்களில் சரணடைவோம் என எச்சரிக்கிறேன். திராவிடம் வேண்டாம் என்றால் திராவிடத்தின் முகவரியான .வெ.ரா.வும் வேண்டாம். தூக்கி எரியுங்கள். திராவிடம் கலந்த எந்த ஒரு கருத்தியலும், பழக்க, வழக்கமும் நம்மை தமிழ் தேசிய சிந்தனையில் இருந்து நழுவிச்செல்ல வழிவகுக்கும். திராவிடமும் வேண்டாம் !! .வெ.ரா.வும் வேண்டாம் !!

 “
பார்ப்பான் தமிழன் !! பிராமணனே ஆரியன் !!”
 “
பார்ப்பான் என் இனம் ! தமிழினம் !”
 “
பிராமணன் வடுக, கன்னட, மலையாள, மராட்டிய ஆரியன், தமிழனின் எதிரி என்று உரக்கச்சொல்லுங்கள்

                
தமிழன் விழித்துக் கொள்ளட்டும் !! தமிழினம் உயிர் பெறட்டும் !!

 

தமிழின துரோகிகள் பார்ப்பனர்களா ?? திராவிடவாதிகளா ?? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2016/03/blog-post.html