ஆரியமும் திராவிடமும் பாகம் -2

 

ஆரியமும் திராவிடமும் பாகம் -2

 


நம் இலக்கியங்களில் காணப்படும் குமரிகண்டம் குறித்து அகழ்வாய்ந்து கண்டறியப்பட்டால், உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் பொய்யாகி போய்விடும் மெசப்பொடோமியா என்னும் ஆசிய மைனர் பகுதிகளில் தான் இறைவனின் ஆட்டம் பாட்டம் எல்லாம் என தொடங்கும் சர்வதேச மதங்கள் எல்லாம் பொய் என்றாகிவிடும் (இந்திய மண்ணில் தோன்றிய இந்து மதம் தமிழர்களுக்கானது அல்ல என நாம் முன் அத்தியாயத்தில் கண்டோம்). எனவேதான் தமிழ் மொழியை அழிக்க வேண்டும் எனவும் தமிழனை தடம் தெரியாத கலப்பினமாக மாற்றிவிட வேண்டும் இல்லை என்றால் அழித்து விட வேண்டும் என்ற குறிக்கோளில் தான் சர்வதேச நாடுகளும் சேர்ந்து இரண்டு இலட்சம் தமிழர்களை அழித்ததோடல்லாமல் புலம் பெயர்ந்த தமிழனை நாடற்ற அரசியல் அநாதைகளாக ஆக்க முற்படுகிறார்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களை இந்து இந்தியா, ஆரிய திராவிட மேலாண்மை மூலம் முண்டவிடாமல் பார்த்து கொள்கிறர்கள்

                               இந்திலையில் இந்துத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். விவேகானந்தர் சொல்லுகிறார் :- ஆரியர் என்றச்சொல்லைப் பற்றி மேல் நாட்டுக் கொள்கைகள் எப்படி இருப்பினும், நம் தெய்வீக நூல்களில் காண்கின்ற அச்சொல்லின் இலக்கணத்தை நாம் கைவிடாது உறுதியாக பற்றிக்கொண்டிருக்கிறோம். இந்துக்கள் இன்று இப்பொழுது நாம் குறிப்பிடுகின்ற அனைவரையுமே அச்சொல் குறிப்பிடுகிறது. வடமொழி பேசும் இனம், தமிழ் பேசும் இனம் என்ற இந்த இரண்டு இனங்களால் ஆன கலப்பு இனமே ஆரிய இனமாகும் இந்துக்கள் என்போர் அனைவருமே ஆரிய இனமாகும் இந்துக்கள் என்போர் அனைவரும் வேறுபாடற்ற ஆரிய இனத்தவர்களே. சில சாஸ்த்திரங்களிலே ஆரியர் என்ற பதவியில் இருந்து சூத்திரர்கள் என்போர் விலக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்க்கு ஒரு பொருளும் இல்லை. ஏனெனில் சூத்திரர்களென்போர் முன்பும் சரி, பின்பும் சரி, ஆரியர் ஆவதற்காக காத்து நிற்ப்பவர்களாவார்கள். ஆரியர்களிலேயே அனுபவமில்லாத கடைக்கோடி மக்களாவர் – (விவேகாணந்தரின் ஞான தீபம் – சுடர் – 08, பக்கம்:-404).

                          பார்த்தீர்களா தமிழர்களே?! சூத்திரர்களாகிய தமிழர்கள் ஆரியர் ஆவதற்கு நிற்கின்ற வரிசையில் கடைக்கோடியில் நின்று கொண்டிருக்கிறோமாம் ! தமிழ் மண்ணிற்கு ஆரியர்களை நாம் வந்தேறிகள் என்று சொன்னால், இந்த இந்து மதவாதிகளோ தமிழர்களும் ஆரியர்கள் தான் என்று குழப்புகிறார்கள். ஆனால் எங்கள் அளவுக்கு உயர ஒரு பெரிய வரிசை இருக்கிறது அதில் கடைசியில் நிற்கும் கலிசடைகள் நீங்கள் என்கிறார்கள். இந்த இந்து மதவாதிகளுக்கு நம்மை இந்துக்களாக ஆக்கி விட்டதில் எவ்வளவு இறுமாப்பு பார்த்தீர்களா ! தமிழர்களே இனியும் உங்களை இந்துக்கள் என்று சொல்ல முற்ப்படுவீர்களா! அப்படியானால் நாம் கலிசடைகள் என்று அர்த்தம்.

                                 இந்து மத வாதிகளில் சிலர் கூறுகிறார்கள் ஆரியர்கள் இந்தியாவிற்கே வந்தேறிகல் அல்ல. அது ஒரு தனித்த இனமல்ல ஆரியமென்ற அறிவார்ந்த கருத்தியல் இம்மண்ணிலேயே உருவானது. ஆரியர் என்பவர்கள் அறிவு ஜீவிகள், ஆளும் வழிதெரிந்தவர்கள், ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்து கொள்ளும் வித்தை தெரிந்தவர்கள் என்றே அர்த்தம். அது ஒரு வகை கருத்தியலே அன்றி ஓர் இனமல்ல. இந்தியாவில் எல்லோரும் ஆரியர்களே என்பதே இந்துதுவ வாதிகளின் பதிலாக இருக்கிறது.

                                            ஆக திராவிடத்தை கடந்து ஆரியம் நின்று மேலாண்மை செலுத்துகிறது. ஆகவே ஆரியத்தை திராவிடம் அனுசரித்துத்தான் போக வேண்டும். தமிழ் இனத்திடம் மட்டுமே திராவிடம் மேலாண்மை செலுத்த முடிகிறது ஆனால் ஆரியமோ திராவிடத்தையும் சேர்த்து மேலாண்மை செலுத்துகிறது. திராவிடவாதிகளுக்கு ஆரியவாதிகள் மக்கள் அரசியல் பொருளாதாரத்தில் கூட்டு கொள்ளையிட பங்கு கொடுத்துக்கொண்டு இருக்கும் வரை தமிழன் எக்கேடு கெட்டாலும் கண்டு கொல்ல மாட்டார்கள். பங்கு பிரிப்பதில் தகராறு வந்து விட்டால், ஆரிய திராவிட போர் என்று முழங்குவார்கள்.

                                    ஆரியர்கள் நேரடியாக தமிழகத்திற்க்குள் யுத்தம் செய்து தன் அதிகாரத்தை நிலை நாட்டி விடவில்லை. ஆரிய கலப்பால் உண்டான தெலுங்கு, கன்னட, மராட்டிய பிராமணர்கள் அவ்வப்போது சிறு,சிறு குழுக்களாகவே தமிழகத்திற்குள் நுழைந்து பூசாரித்தனம் செய்து வேள்வி மூலம் இறைவனை வழிபடும் வைதீக முறையைப் புகுத்தி தமிழ் வேந்தர்களை வசப்படுத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக மன்னனுக்கும் மக்களுக்கும் இடைவெளியை உண்டு பன்னினர். தமிழ் மன்னர்களுக்கிடையே பகைமையை அதிகப் படுத்தி சண்டையிட செய்தனர். தமிழ் மன்னர்களின் ஆட்சி முறையை நீர்த்து போகும் படி அரசியல் செய்து பின் எளிதில் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் நுழைய வழிவகை செய்தனர்.

                             விஜய நகர ஆட்சியும், அதன் கிளையான நாயக்கர் ஆட்சியும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய போது தெலுங்கு, ஆட்சி மொழியாக்கப்பட்டது. தமிழ் இலக்கியங்கள் முடக்கப்பட்டு நாயக்க மன்னர்களை புகழ்ந்து பாடும் சிறு,சிறு இலக்கியங்கள் படைக்கப்பட்டன. தமிழனின் இசைக்கலையான தமிழிசை கர்னாடக இசையாக புனையப்பட்டது. நாயக்க மன்னர்கள் கொண்டு வந்த நில மானிய முறையில் எல்லா நிலங்களும் அரசனுக்கு சொந்தமாகப்பட்டது. இதனால் தமிழர்கள் தங்கள் விவசாய நிலங்களை இழந்தனர். மதுரை நாயக்க மன்னர் கொண்டு வந்த பாளையப்பட்டு முறையில் மொத்தம் 72 பாளையப்பட்டுக்கள் ஆகும் இதில் தெலுங்கு கன்னட மரபினருக்கு 61 பாளையப்பட்டும், தமிழ் மரபினருக்கு 11 பாளையப்பட்டும் வழங்கப்பட்டன. இதுவே இன்று வரையில் தமிழகத்தில் பெரும்பான்மை நிலஉடைமையாளர்களாக தெலுங்கர்கள், கன்னடர்கள் வேரூன்ற வகைசெய்ததை நாம் மறந்து விடக்கூடாது. இந்நிலையில் திராவிடவாதிகள் இன்று வரை நம் மண்ணையும் நம் உழைப்பையும் சுரண்டி கொழுத்ததோடல்லாமல் தமிழகத்தில் தமிழ் தேசிய வியாதி ஒன்று பரவியுலள்ளது என்று நம்மை பார்த்து ஏளனம் செய்கிறார்கள் என்றால் தமிழனின் இரத்தத்தை குடித்து கொழுப்பேறிப் போன வாயால் தானே இவ்வாறாக பேச தூண்டுகிறது. திராவிடம் ஒரு புற்று நோய் அல்லவா! அதை பரப்பியவர்கள் திராவிட திருடர்களல்லவா! தமிழ் தேசியமே அதற்கு அருமருந்து. அதை மக்களுக்கு அளிக்கத்துடிக்கும் தமிழ் இனநல ஆர்வாளர்களும், தமிழ் அறிஞர் பெருமக்களும் திராவிடப் புற்று நோயை அழிக்கும் மருத்துவரும், மருத்துவ மேதைகளுமல்லவா !

                           நம்மை பொருத்தவரை ஆரியர் இந்தியாவிற்கு வந்தேறிகளா? இல்லையா ? என்பதல்ல. குறிப்பாக தமிழகத்திற்கு வந்தேறிகள் தான் ! அதே போல் தமிழன் திராவிடனல்ல தமிழனின் உழைப்பு மற்றும் வளங்கள் அனைத்தையும் சுரண்டிக் கொழுக்கும் வடுகக் கன்னட மலையாளிகள் போடும் வேசமே திராவிடம். ஆக திராவிடர்களும் தமிழகத்திற்கு வந்தேறிகள் தான் ! உலகில் உள்ள 13½ கோடி தமிழனுக்கு ஒரு நாடு கூட இல்லை என்றால், தனித்த ஒரு மாநிலம் கூட இல்லை. ஏழு கோடி தமிழனை ஒரு கோடி தெலுங்கர்களின் மேட்டுக்குடிகள் ஆள்வது என்பது எவ்வளவு பெரியக் கொடுமை ! உலகில் பெரும்பான்மை தேசிய இனத்தை சிறுபான்மை தேசிய இனம் ஆள்வது தமிழக மண்ணிலன்றி வேறு எங்கும் இல்லை. சிறுபான்மை தேசிய இனத்தவரை தலைமையாகக்கொன்டு பெரும்பான்மை தேசிய இனம் வாழ்வதை வைத்தே நாம் அடிமைகள் என்பது புலனாகவில்லையா !

                     நம் தேசிய இனத்தின் அடிமைத் தனத்தை உடைத்தெரிய யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் போல ஒரு மோசேவோ, ஒரு முகம்மதுவோ நமக்கு வரப்போவதில்லை. நம் அறிவுத்திறனைக் கொண்டே நாம் ஒன்றுபட்டு நம் அடிமை விலங்கை நாமே தான் உடைத்தெரிய வேண்டும். அந்தக்காலம் நெருங்கி விட்டது. நம் இனத்தை நாமே ஆள நாம் உறுதியேற்க வேண்டும்.

தமிழ் மொழிஞாயிறு தேவநேய பாவாணர் கூறியது போல “திராவிடம் என்பதே தீது” என்றும், “ஆரியமும், திராவிடமும் இரண்டும் ஒன்றே என்பதறிக” என்கின்ற கூற்றை நினைவில் நிறுத்தி தமிழ் மொழிக்காப்போம் ! தமிழ் இனத்தைக் காப்போம் !! ஈ.வே.ராமசாமி என்னும் தமிழின துரோகி கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2015/10/1_4.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக