ஈ.வே.ராமசாமி என்னும் தமிழின துரோகி:-

 

தமிழரின் அடையாளம் பெரியாரா ?

 


தமிழரின் அடையாளம் பெரியார்தான் ! வேறு யாரால் தமிழனுக்கு சரியானதொரு அடையாளத்தை தந்திருக்க முடியும் என்று திராவிடவாதிகள் கொக்கரிக்கிறார்கள். பெரியார் தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் துரோகத்தைத் தான் செய்தாரே அன்றி, நன்மைகள் எதையும் செய்து விடவில்லை அப்படி எதாகிலும் தமிழனுக்காக நன்மையென திராவிடவாதிகள் காட்ட முற்ப்படுவார்களானால், அது தெலுங்கு, கன்னட, மலையாள, மாராட்டியர்களின் நலன் கருதி செய்ததாகத்தான் இருக்குமேயொழிய, தமிழர் நலன் கருதி செய்ததாக இருக்காது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

இப்படி நீ பேசுவதற்கும், எழுதுவதற்குமே பெரியார்தான் காரணம், என திராவிடத்தின் பின்னால் கோரப்பற்க்களுடன் பயணித்துக்கொண்டிருக்கும் திராவிடர்களின் அரசியல், பொருளாதார சுயநல மேலாண்மையை புரிந்துக் கொள்ளாத உணர்ச்சிவயப்பட்ட முட்டாள் தமிழர்களின், ஏமாந்த தமிழர்களின் அல்லது திராவிடவாதிகளின் குரல் ஒலிக்கிறது.

 

அது ஓர் அளவு உண்மை தான் தமிழர்களுக்கு துரோகத்தை திராவிடம் என்ற பெயரால் தந்ததால்தானே நான் பேசவும், எழுதவும் ஆனேன் என்ற வகையில் வேண்டுமானால் பெரியார் ஒருக் காரணம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

 

1943 நவம்பர் 17ம் நாள் குடியரசு இதழில் தமிழனின் தாழ்மைக்கு காரணமென்ன என்னும் கட்டுரையைப் பார்ப்போம்

 

1) தமிழனுக்கு அடித்தளமில்லை ! அதாவது அவன் யார்? அவனுக்கு சொந்தம் எது? அவனுடைய தோற்றுவாய் என்ன? குறிக்கோள் என்ன? இந்நாலும் தெரியாதவனாகவும், அடிப்படை இல்லாதவனாகவும் இருக்கிறான் ஆகவே அடித்தளமில்லாத கட்டடம் வெடிப்புக்காணுவதும் அதிர்வதும் அதில் (மானமோ, மேன்மையோ) குடியிருக்க அஞ்சுவதும் இயற்க்கைதானே? அது போலவே தனக்குச்சொந்தம் இன்னது என்றும் உரிமை இன்னது என்றும் தெரியாதவன் தொட்டதற்க்கெல்லாம் அயலானைப் பல்லைக் காட்டிக் கெஞ்சுவதும், ஒண்டுவதும், ஒருவனுக்கொருவன் போட்டிப்போட்டுப் பின் தள்ளி விட்டுப் போய்த் தன் வேலையைப் பார்த்துக்கொள்வதும் இயர்க்கைதானே ?

 

2) தமிழனுக்கென்று ஓர் அமைப்பு இல்லை.

 

3) தமிழனென்றால் பார்ப்பான், முஸுலிம், கிறித்துவன் ஆகிய எல்லோருமே சேர்ந்து கொள்கின்றனர்

 

4) தமிழனுக்கெனத் தனி முறையோ வழித்துறையோ கிடையாது. அதாவது, அவனுக்கென யாதொரு தனி நடை,உடை தோரணையும் கிடையாது

 

5) தமிழனுக்கென ஆரியம் கலவாதத் தனித்த இலக்கியமில்லை.

 

6) தமிழனைத் தனித்த முறையில் வழிநடத்த யாதொரு தலைவனும் கிடையாது.

 

7) தமிழருள் தலைமக்களுக்குத் தமிழர் குமுகத்தைப்பற்றி யாதொரு அக்கறையும் கிடையாது. தமிழரை அயலார்கள் என்னதான் இழிவு படித்திடினும் அதை அவர்கள் பொருட்படுத்திடவே மாட்டார்கள்.

 

8) தமிழனுக்குத் தன் மானம் பிறக்க வழியே இல்லை அத்தமிழனுக்கு மானம் என்றொன்று இருந்ததே இல்லை.

 

பார்த்தீர்களா தமிழர்களே !! தமிழன் தன்னை யார் என்றே தெரியாதவனாம் ! அவன் தோற்றம் குறித்து அவனுக்கு அறிவுமில்லையாம். வாழ்க்கைக்கான குறீக்கோள் இல்லாதவனாம். மானமோ மேன்மையோ இல்லாதவனாம். அவன் உரிமை இன்னது என்றுக் கூட தெரியாதவனாம். தொட்டதற்க் கெல்லாம் அடுத்தவனிடம் பல்லைக் காட்டி கெஞ்சி பிழைப்பு நடத்துவானாம்.

 

ஒருவருக்கொருவன் போட்டி போட்டு பின்னுக்குத் தள்ளி, தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைப்பவனாம். மொத்தத்தில் விலங்கை போல வாழும் அடிமைகள் என்பதை சூச்சமமாக சொல்கிறார். ஆக மேற்க்கண்ட பலவீனங்க்கள் தெலுங்கு, கன்னட, மலையாள, மராட்டிய மக்களிடம் இல்லையா ?! இன்று வரை ஆரியக் கட்சிகளன்றி, தேசிய இனக் கட்சிகள் அல்லது மாநிலக்கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்ய முடிந்ததா ? இந்திய அரசியலை அவ்வப் போது புரட்டிப்போடுபவர்கள் தமிழர்கள் தானே இன்றும் !


மேற்க்கண்ட திராவிட இனங்களுக்கு மூலம் எது ? அடிப்படை எது ? தோற்றூவாய் எது ? தமிழும் தமிழனும் தானே ! தமிழ் மொழி ஒப்பிலக்கணம் என்று சொல்லாது திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்றும் திராவிட மொழிக் குடும்பம் என்றும் தமிழர்களை வந்தேரிகளென்றும் சொன்ன ஏகாதிபத்திய பிரதிநிதி தமிழனின் உண்மை வரலாறு அறியாத கால்டுவெல் சொல்லி விட்டதால் தமிழன் அடிப்படை அற்றவனாகி விடுவானா ?

 

பிராமணர்களின் சூழ்ச்சியால் பலவீனமாகி போன மூவேந்தர்களையும் வடுக கன்னட படையெடுப்பால் அழித்து தமிழனை தாழ்வு நிலைக்கு கொணர்ந்து அவனை நிலமற்றவனாக அடிமைநிலைக்கு தள்ளியதால், எப்படியேனும் உயிர் வாழ வேண்டுமே என்பதற்காக இத் திராவிட ஆண்டைகளிடம் கெஞ்சிக் கூத்தாடி தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றி வந்தான் தமிழன் ஓர் ஆயிரமாண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே ! வரும் காலத்திலே நம் தலைமுறைகள் அடிமைகள் இல்லை என முழங்கட்டுமே என தொடர்ந்து விடுதலையை நோக்கி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

படையெடுப்பு, சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், மடி பறித்தல் என தமிழகத்தில் திராவிடர்கள் அடித்தக்கொள்ளைகள் எங்கள் நெஞ்சில் நிற்கும் தீராத வலியும், வடுகளுமல்லவா ! விஜயநகர பேரரசை விரிவாக்கம் செய்ய தமிழகத்தின் வடக்கே வேங்கடம் வழியாக நுழைந்து தென்கோடி வரைப் பரவி வடுக கன்னடர்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டியதை நாங்கள் மறந்து விட முடியுமா?

 

நாயுடுகள், ரெட்டிகள், ராஜூக்கள் என அலை,அலையாய் தமிழகத்திற்க்குள் புகுந்து பரவலாக குடியேறினீர்களே அதை நாங்கள் மறந்து விட முடியுமா ! ராணுவம், நிர்வாகம் என அனைத்து அரசுத்துறையிலும் தமிழர்களை அகற்றி விட்டு வடுகர்களும் கன்னடர்களும் அமர்ந்துக் கொண்டார்கள்.

 

 பெரும்பாலான இடங்களில் ஆணினத்தை அழித்து விட்டு பெண்களை அடிமையாக்கியும் நன்கு விளைச்சல் தரும் நிலங்களை எல்லாம் அபகரித்துக்கொண்டார்கள். எங்கே ! நாம் அழிந்து போய் விடுவோமோ என அஞ்சிய தமிழ் மக்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து காட்டுக்குள்ளும், வறண்ட நிலப்பகுதிகளிலும் குடியேறினர். வேங்கடத்தை பூர்வீகமாகக்கொண்ட கள்ளர் சமூக மக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள தப்பி ஓடி மேலூர், நத்தம் பகுதியில் உள்ள காடுகளில் குடியேறினர்.

 

இதனால் புகழ் பெற்ற திருப்பதிக் கோவிலை தமிழர்கள் அன்றே இழந்து விட்டனர். இப்படி தமிழகத்தின் வட பகுதியில் தெலுங்கர்கள் அதிக அளவில் குடியேறினர். இதனால் சென்னை உட்பட வட தமிழ் நாடு பெரும்பாலும் தெலுங்கர்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாயிற்று.

 

சோழ மண்டலத்தில் நடந்த ஆட்சிக் குழப்பத்தை பயன்படுத்தி படையெடுப்பு நடத்தி ஆட்சிபீடமேரிய கீழை சாளுக்கியன் ராசேந்திரன் என்னும் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 -1120) காலத்தில் தான் மனு தர்மம் தமிழகத்தில் பெரிய அளவில் நிறுவப்பட்டு வளர தொடங்கியது.

 

சோழமன்னனின் வலப் புறத்தில் 98 சாதிகளும், இடப்புறத்தில் 98 சாதிகள் என்று அமரச் செய்து தமிழர்களை சாதி சாதியாய் இனமாய் இணக்கம் காண முடியாவண்ணம் கூறு போட்டு களமாடியவன் கன்னடத்தெலுங்கன் முதலாம் குலோத்துங்கச்சோழனே !

 

ஆக தமிழர் இனத்தை ஆரியர்கள் தான் நேரடியாக கெடுத்தார்கள் என சொல்லி விட முடியுமா ? ஆரியம் மதத்தால் தமிழனை பித்தனாக்கியது. தெலுங்கு, கன்னட,மராட்டிய பிராமணர்கள் வகுத்துக்கொடுத்த அரசியல் சதுரங்கத்தில் வடுக, கன்னட ஆட்சி அதிகாரசக்தி தமிழனை ஆட்க் கொண்டு அடிமை படுத்தியது ஆரியமும் திராவிடமும் ஒன்றை ஒன்று அனுசரித்தே தமிழன் மீது அதிகார வெறிக் கொண்டு அடிமையாக்கினார்கள்.

 

அத்துடன் ஹைதர் அலி, திப்பு சுல்த்தான் காலத்திலும் தமிழகத்தின் நீல மலை பகுதிகளில் அலை அலையாய் படுகர் என்னும் கன்னடர்கள் உட்பட தெலுங்கர்களும் சிறிது சிறிதாக வட தமிழ் பகுதி முழுவதும் கைப்பற்றினர்.

 

தமிழகத்தின் நாட்டுப் புறங்களிளும் ஊடுருவிய தெலுங்கர்கள் ஆட்டு தலைக்கும், மாட்டு தலைக்கும், கள்ளுக்கும், கம்புக்கும், கேழ்வரகுக்கும் தமிழனின் பசிப்போக்க உதவுவதாக கூறி நிலபுலங்களை பறித்தும் தமிழர்களை அடிமை நிலைக்குத்தள்ளினர். ஆங்கிலேய படையெடுப்பால், ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தால், ஆங்கிலேய அடிவருடியாக மாறிப்போன பாளையக்கார வடுகக்கூட்டமானது பூலித் தேவன், மருது பாண்டியர் போன்ற வீரம் செரிந்த தமிழ் சிற்றரசர்களை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு காட்டிக் கொடுத்து தங்களின் எடு பிடி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர்.

 

பாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்தை ஆண்ட கட்டபொம்மு வழிபறிக் கொள்ளையனாய் இருந்து தமிழ் மக்களை மிரட்டி ஆட்சி செய்து வந்தவனை ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்த சுதந்திர போராட்ட வீரனாக காட்டி வடுகர்கள் பெறுமைப் பட்டு கொள்வதைக் காண்கிறோம். நம் தமிழ் மொழி இன்று சேரி மொழியாயிற்று. தமிழில் பேசுவதே தாழ்வு எண்றும் தமிழனாய் இருப்பதே வீண் என்றும் எண்ணுமளவுக்கு தமிழரிடையே ஒரு மாபெரும் தாழ்வு மனப்பான்மை உருவாக காரணம் தெலுங்கு கன்னட திராவிட அரசியலே ஆகும்.

 

இப்படி தெலுங்கு, கன்னட, மராட்டிய, பிராமண சூழ்ச்சியால் வீழ்ந்து வடுக, கன்னட, மராட்டிய அரசுகளால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி சொந்தமிழந்து, பொருளிழந்து, சொத்து மற்றும் நில புலங்களை இழந்து, குடும்பங்களை இழந்து, அரசியல் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் ஓர் தேசிய இனத்தை, அடிமேல் அடி வாங்கி தொய்ந்து போன தேசிய இனத்தை மானமில்லாதவர்கள், மரியாதை தெரியாதவர்கள், அடிப்படை இல்லாதவர்கள், தனக்கென்று ஒரு அமைப்பு இல்லாதவர்கள், பிராமணியம் வகுத்துக் கொடுத்த பாதையில் தமிழனை அடிமை கொண்ட இவர்கள் தமிழனைப் பார்த்து ஆரியம் கலவாத தனித்த இலக்கியமில்லாதவர்கள் என்றும், தனக்கென்று ஒரு அமைப்பு இல்லாதவர்களென்றும், தனக்கென்று தலைவன் இல்லாதவர்கள் என்றும், என்னதான் அவமானப் படுத்தினாலும் ரோசமே வராதவர்கள் என்றும், தன்மானம் பிறக்க வழியே இல்லாதவர்கள் என்றும், இன்றல்ல என்றுமே மானமில்லாதவர்கள் என்றெல்லாம் தூற்றிய தமிழின விரோதி, தமிழனுக்கு பெரியாரா !? அல்லது தமிழனின் அடையாளமா ?!
            

                          துரோகியின் சரித்திரம் தொடரும் பாகம் இரண்டில்.

 

தமிழன் இந்துவுமல்ல ! திராவிடனுமல்ல !! கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2015/10/blog-post_25.html

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக